தளிர் ஹைக்கூ கவிதைகள்! 21


தளிர் ஹைக்கூ கவிதைகள்!
வெப்ப மூச்சை
வெளியே விட்டது
மின்விசிறி!

நிழலைத் தேடுகையில்
சுட்டது
வெட்டிய மரங்கள்!

 வயல்களில் முளைத்தன
 வண்ணமிகு வீடுகள்!
 நகர வளர்ச்சி!

கட்டிவைத்தார்கள்
மணத்தது
கூந்தலில் பூ!
 
ஒளிந்து கொண்டது
காற்று
ஓடிப்போனது தூக்கம்!

கூட்டம் கலைத்தது
வெடிச்சத்தம்
பறவைகள்!

முரட்டுத்தழுவல்
தள்ளாடியது கொடி
காற்று!

சாய்ந்து கொண்டதும்
ஒய்வெடுத்தார்கள்
நிழல்!

துகில் உரித்ததும்
பசி அடங்கியது
வாழை!

பூத்துக் கொட்டின
பொறுக்க முடியவில்லை!
நட்சத்திரங்கள்!

காவல் இருந்தும்
கவர்ந்தன கண்கள்
இமைகள்!

மிதிபட்டன புற்கள்
உருவானது
பாதை!

பூக்கவில்லை
மணத்தது மண்
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. மிகவும் ரசித்தவை :

  /// ஒளிந்து கொண்டது
  காற்று
  ஓடிப்போனது தூக்கம்! ///

  /// பூக்கவில்லை
  மணத்தது மண்
  மழை! ///

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. //நிழலைத் தேடுகையில்
  சுட்டது
  வெட்டிய மரங்கள்! //
  வாழ்த்துக்கள்..

  படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒரு ஹைக்கூ

  குழாவைத்
  துறந்தால்
  கொட்டியது
  சுடு நீர்!

  ReplyDelete
 3. ரசனை மிக்க ஹைக்கூக்கள்.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மிதிபட்டன புற்கள்
  உருவானது
  பாதை!

  nice...!

  ReplyDelete
 5. வருகை தந்து பின்னூட்டம் தந்து ஊக்கப்படுத்திய உள்ளங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 6. அத்தனையும் முத்தான துளிப்பாக்கள்....

  ReplyDelete
 7. கவிதைகள் அருமை நண்பரே

  ReplyDelete
 8. மிதிபட்டன புற்கள்
  உருவானது
  பாதை!...........எனக்குப் பிடித்தது...நன்றி

  ReplyDelete
 9. கவிதைகள் அனைத்தும் அருமை அய்யா. வாசிக்க வந்து சுவாசித்தேன் தங்கள் கவிதைகளை. பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 10. கவிதைகள் அனைத்தும் அருமை அய்யா. வாசிக்க வந்து சுவாசித்தேன் தங்கள் கவிதைகளை. பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 11. தளிரானாலும்
  முதிர்ந்த இருக்கின்றன
  துளிப்பாக்கள்...

  ReplyDelete
 12. தளிரானாலும்
  முதிர்ந்த இருக்கின்றன
  துளிப்பாக்கள்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2