புகைப்பட ஹைக்கூ 25


புகைப்பட ஹைக்கூ 25


 ஈரம் வற்றியதும்
 வெடித்தது
 பூமி!

உடைந்தது நிலம்
உடையவில்லை
நட்பு!

வற்றல் பூமியில்
வட்டமேசை
மாநாடு!

காய்ந்த ஏரியில்
மேய்ந்தன
பிள்ளைகள்!

சுட்டெரித்த சூரியன்
சுருங்கிப் போன
நிலமகள்!

இரத்தம் வற்றியதும்
சுருங்கிப்போனது
முகம்!

விளையாட்டு மைதானமானது
கோடையில்
ஏரி!

குடித்துக்
கெட்டது
குளம்!

வற்றிப் போனதால்
வறண்டு போனது
நிலம்!

வாய் பிளந்த நிலம்
தாகம் தீர்க்குமா
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. // வாய் பிளந்த நிலம்
    தாகம் தீர்க்குமா
    மழை!//- மழை வரட்டும்!

    ReplyDelete
  2. விரைவில் அனைவரையும் குளிர வைக்கட்டும்...

    ReplyDelete
  3. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
    இப்படிக்கு
    தமிழ் களஞ்சியம்

    ReplyDelete
  4. சுட்டெரித்த சூரியன்
    சுருங்கிப் போன
    நிலமகள்!........நல்ல வரிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2