Posts

Showing posts from December, 2011

நாடு முழுவதும் விளைச்சல் அதிகரிப்பு... விலையை குறைக்க மறுக்கும் 'சில்லரைகள்'!

Image
சென்னை: இந்தியா முழுவதும் விளைச்சல் அதிகரிப்பால், அனைத்து வகை மளிகைப் பொருள்களின் கொள்முதல் விலையும் குறைந்துள்ளது. ஆனால் உள்ளூரில் சில்லறை வியாபாரிகள் கொஞ்சம் கூட விலையைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அனைத்து மளிகை பொருட்களின் கொள்முதல் விலையும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில்லறை வர்த்தகர்கள் ஒரு சதவீதம் கூட விலையைக் குறைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பருவமழை விவசாயத்திற்கு ஏற்றப்படி நன்றாக பெய்துள்ளது. இதனால் துவரம்பருப்பு, கரும்பு, மல்லி, உளுந்து, மஞ்சள், பூண்டு உள்பட அனைத்து பொருட்களின் விளைச்சலும் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ குண்டு மிளகாய்வத்தல் ரூ.220-க்கு விற்பனையானது. நீள மிளகாய் கிலோ ரூ 130 வரை விற்பனையானது. பூண்டு ரூ 140 வரை விற்பனையானது. இப்போது எக்கச்சக்க விளைச்சல் இருந்த போதும், எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. மிளகாய், பூண்டு போன்றவை இப்போதும் கிட்டத்தட்ட இதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கரும்பு விளைச்சல் பெருகி, சர்க்கரை உற்பத்தி அதிகரித்த

மன அழுத்தமா? உடம்பும் மனசும் குளிர நல்லா குளிங்க!

Image
மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர். எண்ணெய் மசாஜ் ‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லே

அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கம்பெனிகள் இனி தாக்குப் பிடிக்க முடியுமா?

Image
இந்தியாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு சலுகை வழங்காமல், அரசு முற்றிலும் புறக்கணிப்பதால், பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்க்கஸ் கலை சாகசம் நிறைந்தது; உயிரைப் பணயம் வைப்பது. அந்தரத்தில் பார் விளையாட்டு, மரண கூண்டுக்குள் பைக் ரேஸ், சிங்கம், புலி, கருஞ்சிறுத்தை என, கொடிய விலங்குகளை சாட்டையின் ஒரு சொடுக்கில் ஆட்டுவிக்கும் சாகசங்கள், பார்வையாளர்களை, "சீட்'டின் நுனிக்கு வரவைக்கும். இந்தியாவில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், நியூ கிராண்ட், அப்போலோ, நேஷனல், கேமல், மகாராஜா, வீனஸ் என, மிகப்பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கோலோச்சின. ஒவ்வொரு கம்பெனியை நம்பியும், 350க்கும் குறையாத கலைஞர்கள் இருப்பர். இது தவிர, சின்ன கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இதில், 50 முதல், 75 பேர் இருப்பர். சர்க்கசை நம்பி, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் சாகச கலைஞர், தொழிலாளர்கள் வாழ்ந்தனர். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள் ஒரே கம்பெனியில் இருப்பர். சர்க்கஸ் கூடாரம் எங்கெல்லாம் மாறுகிறதோ, அங்கெல்லாம் இடம் மாறுவர். இந்திய சர்க்கஸ் கலைஞர்கள், எத்தியோப்பி

இசை நிகழ்ச்சியை தள்ளிப்போட அல்லது தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி இளையராஜா

Image
சென்னை: மலையாள நிறுவனமான மலபார் கோல்ட் ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சியை தள்ளிப்போட அல்லது தவிர்க்க முயற்சிக்கிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். நாளை மறுதினம் சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'என்றென்றும் ராஜா' இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மெயின் ஸ்பான்சர் மலபார் கோல்ட் என்ற கேரள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் விளம்பரங்களிலும் இளையராஜா நடித்துள்ளார். இப்போது ஜெயா டிவியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியானதும், பெரியார் திகவினர் இளையராஜாவின் திநகர் வீட்டு முன்பு குவிந்தனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் கேரள அரசு மற்றும் கேரள வியாபார நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இளையராஜாவிடம் மனு கொடுப்பதற்காக வந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இளையராஜா வீட்டுக்குள் செல்ல பெரியார் திகவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இளையராஜா ஊரில் இல்லாத

டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோன்ஸ் வியப்பு

Image
மெல்போர்ன்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் கிரிக்கெட் திறமை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் வியப்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அர்ஜூன் மிகப் பெரிய வீரராக உருவெடுப்பார் என்றும் பாராட்டியுள்ளார் ஜோன்ஸ். அரசியல், சினிமாவில் மட்டுமா வாரிசுகள் வர வேண்டும். கிரிக்கெட்டிலும் கூட ஏகப்பட்ட வாரிசுகள் கிட்டத்தட்ட அத்தனை நாடுகளிலுமே உள்ளனர். அந்த வரிசையி்ல் சச்சினின் வாரிசான அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் இப்போதே பிரமாதப்படுத்தி வருகிறார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அவர் ஜொலிக்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வந்துள்ள சச்சினுடன் அர்ஜூனும் வந்துள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று அவர் தந்தை சச்சின் மற்றும் வீரேந்திர ஷேவாக்குடன் இணைந்து பந்து வீசி, பேட்டிங் செய்து பயிற்சியும் எடுத்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம், நடந்த இந்த பயிற்சியின்போது சச்சின் தனது மகனுக்கு பந்து வீசினார். அதேபோல அர்ஜூன், ஷேவாக்குக்குப் பந்து வீசினார். இந்த பயிற்சியை டீன் ஜோன்ஸ் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்து ரசித்தார். பின்னர் இதுகுறித்து அ

தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்- ஏ.ஆர்.ரஹ்மான்

Image
டேம் 999 படம் ஆஸ்கர் விருது பெற வாழ்த்தது தெரிவித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் டெல்லி ஆக்ராவில் நடைபெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பான ஏக் தீவானா தா படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டேம் 999 ப பாடல்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும்போது சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஆவுசுப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் சிலர் இதனை வேறு விதமாக கூற தொடங்கியுள்ளனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தமிழனாகிய எனக்கு என் வளர்ச்சியில் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாகவும், முக்கியத் தூணாகவும் இருந்து வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். கடந்த 3 வாரங்களாக நான் ஹாலிவுட் பணியில் அமெரிக்காவில் மூழ்கி இருந்ததால், தமிழ்நாடு, கேரளாவில் நடந்து வரும் முல்லைப் பெரியாறு பிரச்சினை எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை நான் உணரவில்லை. இந்தப் பிரச்சினையில் முன்

என் இனிய பொன்நிலாவே பகுதி 17

Image
என் இனிய பொன்நிலாவே   பகுதி 17            ‘ப்ரியம்வதா’ முன்கதை சுருக்கம்}மதுவை பெண் பார்க்க வந்தான் அபிஷேக். உடன் அவனது உறவுக்கார பெண் ஸ்வேதாவும் வந்தாள். அவள் மதுவை வெறுத்தாள். சர்வ அலங்காரத்துடன் கையில் காபி டிரேயுடன் வரும் மதுவை எரிச்சலுடன் பார்த்தாள் ஸ்வேதா. எங்கிருந்து வந்து எனக்கு போட்டியாக வந்து தொலைத்தாயாடி? கைக்கு எட்டியது என் வாய்க்கு எட்டாமல் பண்ணிவிட்டாயே? எப்படியாவது அபியை மணந்து பலகோடி சொத்துக்கு சொந்தக் காரி ஆகிவிடலாம் என்று நினைத்த என் ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டாயே? என்று கறுவிக் கொண்டிருந்தது அவளது மனம்.   அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள் ஆனால் ஸ்வேதாவின் முகம் அவள் நினைத்த எதையும் வெளிக்காட்டாமல் புன்னகைத்துக் கொண்டு இருந்தது.   அனைவருக்கும் காபியை தந்து கொண்டிருந்த மதுவிடம் நீ என்னை இங்கு எதிர்பார்க்கவில்லைதானே! எப்படி எதிர்பாராமல் உனக்கு அதிர்ச்சி தந்தேன் பார்த்தாயா? இது இனி தொடரும் என்று பல்லிளித்தாள் ஸ்வேதா!   சட்டென முகம் மாறினாலும் சுதாரித்துக் கொண்டு   ஆம் நீங்கள் வந்தது எனக்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்! இதுவே வேறு யாராக இருந்தாலும் வர

மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்கு ஓர் உருக்கமான வேண்டுகோள்!

Image
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன் கேமரா மூலம், ஓவியமாய் கண்களுக்கு விருந்து படைத்தவர் பி.சி.ஸ்ரீராம். மீண்டும் ஒரு காதல் கதையில் தொடங்கி மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தேவர் மகன், குருதி புனல், அலைபாயுதே, பா, என்று அவர் கேமரா தூக்கிய அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அதிலும் அவர் ஒளிப்பதிவில் வந்த குருதிபுனல் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறுப்பிடத்தக்கது. உலக அளவில் தமிழ் சினிமாவை பேச வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரிடம் உதவியாளர்களாக இருந்து இப்போது, தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நீரவ் ஷா, கே.வி.ஆனந்த், கதிர், பாலசுப்ரமணியம், திரு, வேல்ராஜ், பிரபு என்ற பல பிரபலங்களையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. சாதனைகள் பல படைத்தாலும், பி.சி.யின் வாழ்விலும் ஒரு சோகம் எட்டி பார்த்துள்ளது. சமீபத்தில் இவரது ஒரே ஆசை மகள் இறந்து போனது, அவரை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் ரொம்பவே தவித்து வருகிறார். கற்பனை குதிரை கட்டி, காமிராவை தூக்கி ஓடியவர், இன்று கண் கலங்கி நிற்கிறார்.  வார்த்தைகள் இல்லாமல் வலிகளோடு வாழும் பி.சி.யை நாம்

ரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!

Image
ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத். இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!) அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது. இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன! நன்றி தட்ஸ் தம

எம்ஜிஆர்... ஒரு நிகரில்லா மனிதரின் நினைவு நாள்!

Image
உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?' 'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர். உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்! அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இ

சசி பெயர்ச்சி சில ருசிகர தகவல்கள்! கோடிகள் சுருட்டியது அம்பலம்!

Image
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் , மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ள விவரம் , அ . தி . மு . க ., வட்டாரத்தில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளது . சசிகலா உட்பட 14 பேர் , அ . தி . மு . க ., வில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து , நேற்று , மேலும் இருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் . இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி குறித்து , வெளிவரும் தகவல்கள் : அ . தி . மு . க ., ஆட்சிக்கு வரும்போது , ஜெயலலிதாவிடம் சசிகலா உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி , சசிகலாவின் உறவினர்கள் , வெளியில் பணம் பெற்றுக் கொண்டு , அரசில் முக்கிய காரியங்களைச் சாதிப்பது , வழக்கமான நடைமுறையாக இருந்தது . ஆனால் , இந்த முறை , முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் , தங்கள் ஆதரவாளர்களை உட்கார வைத்து , ஜெயலலிதாவின் தயவு இல்லாமலேயே , இவர்கள் நேரடியாக உத்தரவு பிறப்பித்து , காரியங்களை சாதித்தது தான் , அவர்களது ஆட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளது . பணம் " பத்தும் ' செய்யும் : குறிப்பாக , கோவையில் இருந்து