விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு அனுமதி- சச்சினுக்காக விதி மாற்றம்?

டெல்லி: விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கும் வகையில் மத்திய அரசு சில சட்டத் திருத்தங்களை செய்து உள்ளது. ஆனால் சச்சினை மனதில் வைத்துக் கொண்டே இந்த முக்கியத் திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளதாக கருதப்படுகிறது. சச்சினுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகப் பெரிய சிவிலியன் விருது பாரத ரத்னா. இந்த விருது பொதுவாக கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் சிறந்த நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது பெறத் தகுதி கிடையாது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சச்சினுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள், அன்னா ஹசரே போன்ற பொது வாழ்வில் உள்ளவர்களும் வலியுறுத்தி வந்தனர். யாரைப் பார்த்தாலும் சச்சினுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

ஆனால் விதிமுறை அதற்கு இடம் தரவில்லை என்பதால், பாரத ரத்னா விருதினை விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கும் வகையில், மத்திய அரசு சில சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், பிரதமருக்கு பரிந்துரை செய்தது.

பிரதமர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாரத ரத்னா விருது வழங்கும் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்மூலம் தற்போது கிரிக்கெட் சாதனையாளர் சச்சின், முன்னாள் பிரபல ஹாக்கி வீரர் தயான் சந்த் உள்ளிட்டோர் பாரத ரத்னா விருது பெற தகுதிப் பெற்று உள்ளனர். விளையாட்டுத்துறையிலிருந்து பார ரத்னா விருது பெற எக்கச்சக்கம் பேர்தகுதி படைத்தவர்களாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த விருது முதலில் தரப்படுமா அல்லது சச்சினுக்கு முதலில் கொடுத்து விட்டு பிறகு மற்றவர்களுக்குத் தரப்படுமா என்பது தெரியவில்லை.

கடந்த 1954ம் ஆண்டு ராஜகோபாலச்சாரிக்கு முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, காமராஜர், அம்பேத்கார், எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி, அப்துல்கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் உட்பட 41 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா உள்ளிட்டோரும் பாரத ரத்னா விருதை பெற்று உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு இந்துஸ்தான் இசைக் கலைஞர் பண்டிட் பிஷ்மன் ஜோஷி பாரத ரத்னா விருது பெற்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2