நான் ரசித்த சிரிப்புகள் 6


நான் ரசித்த சிரிப்புகள் 6

தலைவரே நம்ம கட்சி இப்ப உங்க கட்டுப்பாட்டுல இல்லையாமே.. உண்மையா?
 வேற யார் கட்டுப்பாட்டுல இருக்காம்?
காவல்துறை கட்டுப்பாட்டுல!
               -பி.பாலாஜிகணேஷ்

என்ன தலைவர் திடீர்னு நாளைஞ்சு அழகிகளோட கார்ல கிளம்பிப் போறார்!
ரதி யாத்திரையாம்!
                         எஸ்.முகமது யூசுப்
குற்றப்பத்திரிக்கையை வாங்கிகிட்டு தலைவர் ஏன் குய்யோ முறையோன்னு குதிக்கிறார்?
அந்த பத்திரிக்கையில் அவரோட தாய்மாமன்,சித்தப்பா,பெரியப்பா பேரு போடலையாம்!
                       வி.சகிதா முருகன்.
டாக்டர் நீங்க ஆபரேசன் பண்ணி யாராவது பிழைச்சிருக்காங்களா?
என்ன அப்படி கேட்டுட்டீங்க? நான் பிழைக்கிறேன்..ரெண்டு நர்ஸ்.. ஒரு கம்பவுண்டர் பிழைக்கிறாங்க!
                        வி.சாரதி டேச்சு
டாக்டர் ஆபரேசனுக்கு பிறகு நான் என்னல்லாம் சாப்பிடலாம்?
நீங்களா.. ம்ம்ம்.. உங்க பேரை சொல்லி சொந்தக்காரங்க எல்லாரும் 16 நாளைக்கு சிக்கன்,மட்டன்னு நல்லா சாப்பிடுவாங்க!
                          சரவணகுமார்.

என்னப்பா காபியிலே பினாயில் வாடை அடிக்குது?
காபியிலே பினாயில் வாசனையும் அடிக்கக் கூடாது.. ஈயும் இருக்கக் கூடாதுன்னா எப்படிங்க முடியும்?
                       வி. சாரதி டேச்சு
என்னங்க இது அநியாயமா இருக்கு.. கல்யாணத்த வீடியோ எடுத்ததுக்காகவா போலிஸ் பிடிச்சுட்டு போறாங்க?
  முதலிரவையும் சேர்த்து எடுத்துட்டாராம்!
                       வி.ராஜேந்திரன்.

என் படத்துல இதுவரை யாரும் சொல்லாத ஒரு மெசேஜ் இருக்கு!
என் செல்போன்ல கூடத்தான் 10 மெசேஜ் இருக்கு!
                        சி.பி.செந்தில்குமார்.
தலைவர் ஏன் கோபமா இருக்கார்?
பாராட்டு விழாவுல அவரை பாராட்டிப் பேசிட்டு கடைசியில ஏதாவது நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடுங்கனு சொன்னாங்களாம்!
                           வி.லதா.
அந்த டாக்டர் அடிக்கடி சினிமாவுக்கு போவாரு!
எதுக்கு?
யாராவது கேட்டால் தியேட்டர்ல இருக்கேன்னு சொல்லலாமே!
                         வி. சாரதி டேச்சு
ஜெயில்ல இருந்து வந்த பிறகு தலைவரோட நடவடிக்கைகளே மாறிடிச்சு!
ஏன்?
வாசல்ல போய் காலிங்பெல்லை அடிச்சிட்டு வந்து டைனிங் ஹால்ல உட்கார்ந்து சாப்பிடறாரு!
                        சி.பி செந்தில் குமார்.
பொண்டாட்டின்னா தலைவருக்கு ரொம்ப பயம்!
அதான் ஜாமீன் வேண்டாங்கறாரா?
                           சிவம்.
ஜெயிலர் மேல தலைவருக்கு என்ன கோபம்?
ஆறு மாசம் லீவுல போறேன், வரும்போது உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்னு தலைவர்கிட்ட கேட்டாராம்!
                          அம்பை தேவா
பாட்டி எனக்கு வேலை கிடைச்சிருச்சு!
ரொம்ப சந்தோஷம்டாப்பா! ஆனா லீவு லெட்டருக்காக என்னை அடிக்கடி சாகடிச்சிடாதே!
                            எம். பூங்கோதை
நான் யாரோடவும் கூட்டணி வைக்க மாட்டேன்!
அதுக்காக உங்களுக்கு தனி செல் தர முடியாது!அந்த ரெண்டு கைதிங்களோடத்தான் இருக்கணும்!
                            அ.ரியாஸ்
 நன்றி ஆனந்த விகடன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. சிறப்பான பதிவுகள்... வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2