வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன் *இர்பான் பதான் நம்பிக்கை
புதுடில்லி: ""இரண்டு ஆண்டுகளுக்குப்
பின் இந்திய அணியில் விளையாட கிடைத்த வாய்ப்பை, நன்கு பயன்படுத்திக்
கொள்வேன்,'' என, இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோசமான "பார்ம்' காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டவர் இர்பான் பதான். இரண்டு ஆண்டுகளாக கடின முயற்சி செய்து வந்த இவர், தற்போதைய ரஞ்சிக் கோப்பை தொடரில் அசத்தியதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மீதமுள்ள இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இதுகுறித்து இர்பான் பதான் கூறியது:
இந்திய அணிக்கு திரும்பியதுக்கு எம்.ஆர்.எப்., பயிற்சியாளர் டி.ஏ.சேகருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இவரது பயிற்சியில் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். பந்துகளை "சுவிங்' செய்வது, மணிக்கட்டுகளை சரியான முறையில் சுழற்றுவது போன்றவற்றில் தொழில்நுட்பங்களை கற்றுத்தந்தார். இதற்கான உடனடி பலன் தற்போது கிடைத்துள்ளது.
டில்லி அணிக்கு எதிராக 7 விக்கெட் வீழ்த்தியதால் மட்டும், இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ரஞ்சித் தொடர் துவக்கத்தில் இருந்தே நன்கு செயல்பட்டேன். காயத்தால் அவதிப்பட்ட போது இந்திய கிரிக்கெட் போர்டுதான் (பி.சி.சி.ஐ.,) வெளிநாட்டில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது.
எனது சகோதரர் யூசுப் பதான், சகோதரி இருவரும் ஊக்கப்படுத்தினர். எப்படியும் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற உறுதியில் இருந்து மாறவில்லை. இதற்கான தன்னம்பிக்கையை எந்நிலையிலும் இழக்கவில்லை. தேசத்துக்காக விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
அதிர்ஷ்டவசமாக எனக்கு இது மீண்டும் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை விவரிப்பது கடினம் தான். இருப்பினும், இது மனதுக்கு "ரிலாக்சாக' உள்ளது. கடவுளின் விருப்பம் இருந்தால், நீண்ட ஆண்டுகள் அணிக்காக விளையாடுவேன்.
இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.
நன்றி தினமலர்

Comments
Post a Comment