சேப்பல் பெரிய பைத்தியக்காரன்,கங்குலி அட்டாக்!

டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் ஒரு பைத்தியக்காரன். அவர் இஷ்டத்திற்கு முடிவெடுப்பார். அதைத் தட்டிக் கேட்க முடியாமல் அப்போதைய கேப்டன் ராகுல்டிராவிட் இருந்தார். அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி.

சில மாதங்களுக்கு முன்பு கங்குலியை மிகக் கடுமையாக சாடியிருந்தார் சேப்பல். இந்திய அணியின் நம்பகத்தன்மையைக் குறைத்தவர் கங்குலி என்று கூறியிருந்தார். சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோதுதான் கங்குலி கேப்டன் பதவியிலிருந்தும், அணியிலிருந்தும் தூக்கப்பட்டார். அவருக்குப் பதில் டிராவிடை கேப்டனாக்கினர்.

சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலம்தான் இந்திய அணியின் உச்சகட்ட கஷ்ட காலம் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

இந்த நிலையில் சேப்பலை போட்டுத் தாளித்துள்ளார் கங்குலி. இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஆஸ்திரேலிய அணியினருக்கு சச்சின் உள்ளிட்ட இந்திய வீரர்களின் ரகசியங்களை சொல்லிக் கொடுக்கப் போகிறாராம் சேப்பல். கேட்கவே சிரிப்பாக இருக்கிறது. சேப்பலால் யாருக்குமே பயன் கிடைக்காது. இது ஆஸ்திரேலியாவுக்கும் பொருந்தும்.

2008 தொடரை சற்றே திரும்பிப் பாருங்கள். அதுதான் எனக்கு கடைசித் தொடராகும். அப்போது ஆஸ்திரேலிய அணியின் ஆதரவுக் குழுவில் இடம் பெற்றிருந்தார் சேப்பல்.அப்படியும் நாம் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றோம். எனவே சேப்பலால் ஆஸ்திரேலியாவுக்குப் பயன் கிடைக்கும் என நான் கருதவில்லை.

தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் உணர்வுடன்தான் இந்திய பயிற்சியாளர் பணிக்கே வந்தார் சேப்பல். முற்போக்கு சிந்தனையே அவருக்குக் கிடையாது. டிரஸ்ஸிங் ரூமில் இருக்கவே விரும்ப மாட்டார். ஒவ்வொரு முறையும் தப்புத் தப்பாகவே முடிவெடுத்தார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரன் போல அவர் செயல்பட்டார். இதையெல்லாம் தட்டிக் கேட்க முடியாமல் தடுக்க முடியாமல் பயந்தாங்கொள்ளியாக இருந்தார் கேப்டன் டிராவிட்.

சேப்பலை பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரைத்ததே நான்தான். ஆனால் அதற்காக இப்போது கூட நான் வருந்துகிறேன். அது மிகப் பெரிய தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.

டெண்டுல்கர், லட்சுமன், ஜாகிர்கான், ஹர்பஜன் என அத்தனை பேருக்கும் எதிராக செயல்பட்டார் சேப்பல். உலகத் தரம் வாய்ந்த இந்திய வீரர்களை அவர் மதிக்கவே இல்லை. அவர் போன பிறகும் கூட இந்த வீரர்களெல்லாம் சிறப்பாகவே செயல்படுகிறார்கள் என்பதே சேப்பலின் மோசமான திறமைக்கு நல்லுதாரணமாகும் என்றார் கங்குலி.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

  1. தாதா என்றைக்கும் தாதாதான் அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2