அணை உடைந்தாலும் கேரளாவுக்கு பாதிப்பில்லை: முல்லைப் பெரியாறு அணை - உண்மை நிலவரம்

"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லாமல் உள்ளது. அணை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் அறியப்படுகிறது. இதனால், அணை உடைந்தால், கேரளாவின் நான்கு மாவட்டங்களில் பேரழிவு ஏற்படும். எனவே, முல்லை பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்ட வேண்டும்' என, கேரள அரசு வலியுறுத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணைப் பகுதி, நில நடுக்கம் ஏற்படும் பகுதிகளில் மூன்றாவது மண்டலத்தில் உள்ளது. இங்கு, நிலநடுக்கம் ஏற்பட்டால் அது, 3.2 ரிக்டர் அளவில் தான் பதிவாகும். எனவே, அதை நில நடுக்கம் என்று சொல்வதில்லை, நில அதிர்வு என்று தான் சொல்லுகிறோம் என, தமிழகம் தெரிவிக்கிறது. இதை, அறிவியல் ரீதியாக தமிழகம் நிரூபித்தும் உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கப்படும்போது, நில அதிர்ச்சியினால் ஏற்படக் கூடிய விளைவுகளை கணினியில் ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக உள்ளது என, தமிழக பொதுப்பணித் துறைக்கு 1999ல் அளித்துள்ளார், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியரும், கட்டுமான பொறியியல் துறைத் தலைவருமான சாந்தகுமார். முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்ட முறையை ஆய்ந்ததில், இன்னும் 200 ஆண்டுகளுக்கு மேல், அணை சிறப்பாக இருக்கும். ஆண்டு பராமரிப்புப் பணிகளை செய்து வந்தாலே போதுமானது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்க் கசிவை கேரள அரசியல்வாதிகள் பெரிதுபடுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அணைகளில் நீர்க் கசிவு அனுமதிக்கப்பட்ட ஒன்று தான், அணையில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்திட இது பெரிதும் உதவுகிறது. அணைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீர்க் கசிவு, நிமிடத்துக்கு 250 லிட்டர். முல்லை பெரியாறு அணையில், நிமிடத்துக்கு 45 லிட்டர் நீர்க் கசிவு தான் ஏற்படுகிறது. இது, அனுமதிக்கப்பட்ட நீர்க் கசிவு அளவில் ஐந்தில் ஒரு பகுதி.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கினால் கொள்ளளவு 10.5 டி.எம்.சி., 155 அடி வரையும் நீரைத் தேக்கலாம். கேரள அரசு சொல்வது போல், முல்லை பெரியாறு அணை உடைந்தால், இந்த தண்ணீர், அணையை ஒட்டியுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து, 58 கி.மீ., சென்று, கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையில் விழும். இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி., முல்லை பெரியாறு அணையை விட ஏழு மடங்கு பெரியது. அணை இடிந்து வெளியேறும் தண்ணீரால் கேரள மாவட்டங்களில் பேரழிவு ஏற்படும் என்பதும் கற்பனையே.

இதுகுறித்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் வீரப்பன் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 10.5 டி.எம்.சி., தண்ணீர் இருக்கும்போது, உடையும் நிலை ஏற்பட்டால், தண்ணீர் முழுவதும், அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில் தான் விழும். அங்கு எந்த சமவெளிப் பகுதியும் இல்லை. கேரளத்தின் குடியிருப்புப் பகுதிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு மேல் தான் உள்ளது. அதாவது, கடல் மட்டத்திலிருந்து அணையின் உயரம் 2,864 அடி. கேரளத்தின் குமுளி (3,100), வண்டிப் பெரியாறு (2,743), பாம்பனார் (4,402), எலப்பாறை (3,648), வல்லாரம் குன்னு (3,422), புல்மேடு (3,583) ஆகியன முல்லை பெரியாறு அணையை விட உயரமான பகுதியில் தான் உள்ளன. எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர், இவற்றுக்குள் செல்லாது. மேலும், அணை உடைந்து வழிந்தோடும் நீர், 50 கி.மீ., தூரம் சென்று, கேரளம் கட்டியுள்ள இடுக்கி அணைக்குத் தான் செல்லும். இது, முல்லைப் பெரியாறு அணையை விட 10 மடங்கு அதிகம். அதாவது, 70.5 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் நிலையில் உள்ளது. எனவே, கேரள அரசு சொல்லுவது போல, முல்லைப் பெரியாறு அணை உடைவதால் கேரளத்தில் உள்ள எந்தப் பகுதியும் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக எல்லையில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு: பாதுகாப்பு தீவிரம்: முல்லைப் பெரியாறு விவகாரம் அதிக பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால், தேனி மாவட்டம் கம்பத்தில், 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு அதிரடிப் படை போலீஸ் பிரிவில் இருந்து, 116 பேர் நேற்று பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.

மஞ்சள், முட்டை தொடர்ந்து சப்ளை: ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 5,000 லாரிகள் உள்ளன. ஈரோடில் இருந்து கேரளாவுக்கு சரக்கு போக்குவரத்து எந்த பாதிப்புமின்றி இயல்பாகவே உள்ளது. பிண்ணாக்கு, எண்ணெய், சர்க்கரை, மஞ்சள் ஆகிய பொருட்கள் வழக்கம் போல் லோடு ஏற்றப்படுகிறது. ஈரோடிலிருந்து பாலக்காடு, எர்ணாகுளம், கொச்சி, கண்ணனூர் பகுதிகளுக்கு வழக்கம் போல் லாரிகள் சென்று வருகின்றன. வாளையார் பாதையிலும் எந்த பிரச்னையுமில்லை. சரக்கு ஏற்றுமதி நன்றாக உள்ளது.

கோவையில் கடைகளுக்கு பாதுகாப்பு: கோவையில், கேரளத்தவர் களின் கடைகள் தாக்கப்பட்ட தால், சொந்தமான நகைக் கடைகள், வணிக நிறுவனங் கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டன. இங்கிருந்து பாலக் காடு, திருச்சூர் செல்லும் தமிழக, கேரள அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப் பட் டன. இரண்டு பஸ்களுக்கு ஒரு போலீஸ் ஜீப் என்ற முறையில், மாநகர போலீசார் மதுக்கரை வரை பாதுகாப்பு அளித்தனர். அதன் பின், வாளையார் வரை மாவட்ட போலீசாரும், கேரள போலீ சாரும் பாதுகாப்பு அளித்தனர்.

புதுச்சேரியில் போராட்டம்: புதுச்சேரியில் காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில், கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும், பேக்கரி மற்றும் நகைக்கடைகள் எதிரில், போராட்டம் நடந்தது. தமிழர் களம் அமைப்பின் தலைவர் பிரகாஷ், இளை ஞரணி தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர், கோஷமிட் டப்படி கடைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத் தினர். ஷட்டர்கள் அடைக்கப் பட்டன. இவர்கள் அண்ணா சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து, 15 பேரை பெரியக் கடை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின், போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கின.

பாதிப்பு தமிழகத்துக்கே...: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடிக்கு குறைத்ததால், 1979லிருந்து தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புகள்:

1. தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக்கர்.

2. இரு போக சாகுபடியாக இருந்து ஒரு போக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 26,000 ஏக்கர்.

3. ஆற்று நீர் சாகுபடியிலிருந்து நீர் வரத்து இல்லாமையால், ஆழ்குழாய் சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53,000 ஏக்கர்.

4. விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்.

5. மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு 3,531 கோடி ரூபாய்.

- எஸ்.திருநாவுக்கரசு -

நன்றி தினமலர்

Comments

  1. "அதனால நான் எங்க சாப்பிட்டாலும் கிளினருக்குத்தான் டிப்ஸ் கொடுப்பேன்!" என நன்றாக அலசி உள்ளீர்கள்!
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2