சனிப்பெயர்ச்சி: தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?

வரும் 21ம் தேதி, அதிகாலை 4 மணி 58 வது நிமிடத்திற்கு, கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு, சனி பிரவேசிக்கிறார். துலாம் ராசி சுக்கிரனுக்கு சொந்த வீடு. அந்த இடத்தில், சனி உச்சம் பெறுகிறார். இதில், அவர் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நடக்கும் சாதகங்களையும், பாதகங்களையும், ஜோதிடர்கள் கணித்து கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா: இவருடைய சிம்ம ராசியான மூன்றாம் இடத்திற்கு, சனி வருகிறார். இந்த சனி, ஆறு, ஏழுக்குரியது என்பதால், எதிர்ப்புகளை முறியடிப்பார். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். மாநில அரசியல் மட்டுமின்றி, மத்திய அரசியலிலும் இவரது செல்வாக்கு அதிகரிக்கும். புகழ், கீர்த்தி பெரிய அளவில் கிடைக்கும். வெளிநாட்டு பயணத்திற்கு தடை ஏற்படும். எதிரியை வீழ்த்தி வெற்றி கண்டே தீர வேண்டும் என்ற லட்சியப் போக்கு தொடரும். தன்னம்பிக்கையை தளர விடமாட்டார். எதையும் விடாப்பிடியாக சாதித்து காட்டும் எண்ண ஓட்டத்தில் இருப்பார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி: இவருடைய ரிஷப ராசியான ஐந்தாம் இடத்திலிருந்து, ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். எதிரியின் வீட்டிற்கு செல்கிறார். வழக்குகள் சந்தித்தாலும், இறுதியில் அனுகூலமான தீர்ப்புகளை காணலாம். அவருடைய பதவியில் திருப்பங்களை காணலாம். புத்திரன், புத்திரியினால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து விடுபடுவார். குடும்பத்தில் குழப்பம் தீரும்; ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் அவருடைய சொல்லுக்கும், வாக்குக்கும் மரியாதை கொடுப்பார்கள். அதிக நேரம் ஓய்வை விரும்புவார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: இவருடைய துலாம் ராசியில் சனி பகவான் உச்ச பலத்துடன் அமருவதால், வேலை பளு அதிகரிக்கும். சினிமா, பொழுதுபோக்கு விஷயங்களில் செலுத்தும் கவனத்தை விட, கட்சி விஷயங்களில் அதிக நேரத்தை செலவிடுவார். இவர் எடுக்கும் முடிவுகளால் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாகலாம். அதிக உழைப்பால், சுற்றுப் பயணம் அலைச்சலால், அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படும். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி சிறை செல்வார். இவர் எடுக்கும் முடிவுகள், கட்சிக்குள்ளும் சில நேரங்களில் சலசலப்பை ஏற்படுத்தலாம். நம்பிக்கை இல்லாத நபர்களிடம், ரகசியங்களை சொல்லக் கூடாது.

காங்கிரஸ் தலைவர் சோனியா: தனுசு ராசிக்காரரான இவருக்கு, உடல் நிலை பாதிக்கப்படும். முடிவு எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். குழப்பமான மன நிலையில் காணப்படுவார். குடும்ப நண்பர்களால் சோதனைகளை சந்திப்பார். குடும்பத்தில், சுப நிகழ்ச்சியை சந்திப்பார். சுற்றுப் பயணத்தை குறைத்துக் கொள்வார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்: மிதுன ராசிக்காரரான இவர், ரகசியங்களை வெளியிடக் கூடாது. யாரையும் நம்பி பொறுப்பு ஒப்படைக்கக் கூடாது. நம்பிக்கை துரோகத்தை சந்திப்பார். இவரது ராசியில், நான்காம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு சனி வருவதால், உயர் பதவி பெறுவார். கட்சியில் இன்னும் வேகமாக செயல்படுவார். இவரிடம் நிறைய பேர் நட்பு வைக்க ஆசைப்படுவர். ஆனாலும், மனதளவில் சற்று பதட்டமான நிலையில் இருப்பார்.

நன்றி தினமலர்

Comments

  1. ஹா...ஹா..சனிப்பெயர்ச்சி. க(ன்)னிய விட்டுட்டுப் போறாரா???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2