Posts

Showing posts from December, 2017

இம்மாத கவிச்சூரியன் மின்னிதழில் வெளியான ஹைக்கூக்கள்!

Image
கவிச்சூரியன் மின்னிதழில் இந்த மாதம் வெளியான எனது ஹைக்கூக்கள்! பதிவிட்ட கிறிஸ்து ஞான வள்ளுவன் சாருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து உதவிய ரேகா ராகவன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவைப்பற்றிய கருத்துக்களை பதிந்து செல்லலாமே! நன்றி!

வாழ்க்கைச்சக்கரம்! கவிதை!

Image
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை. தேர்ந்தெடுத்த நடுவர் கி. ரவிக்குமார் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றி! படக்கவிதை. கவிதைப் போட்டி! ஒளிப்படமாய் விளங்குகிறது எங்கள் வாழ்க்கை! ஒளிப்பதற்கு ஏதும் இல்லை! இருசக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணிக்கிறோம்! துவிசக்கரம் போல சுழல்கிறது நடுத்தரமான வாழ்க்கைப் பயணம்! அதிக சுமைதான்! ஆனாலும் இழுத்துக் கொண்டே ஓடுகின்றோம்! சுமக்க கஷ்டப்படுவதில்லை! சோகங்களைக் கூட சுமைகளிடையே தொலைத்துவிட்டு சுகங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்! கல்யாணம் சீர்வரிசை, காதுகுத்து காய்ச்சல் தலைவலி, திடீர் பயணம் என்று தினம் தினம் முளைக்கும் புது சுமைகள் நடுத்தரனின் வாழ்வில் நாள்தோறும் சகஜமே! நடுத்தரனுக்கு தோள் கொடுத்து உதவும் இரு சக்கரப்பிறவி நான்! என்ன செய்ய? அவன் பாரத்தை குறைக்க என் மீதும் பாரமேற்றிக் கொள்கிறேன்! நடுத்தரனின் சுமைகளோடு ஒப்பிட்டால் என் பாரம் குறைவுதான்! இறுதி மூச்சிருக்கும் வரை இழுக்கின்றான் குடும்ப பாரம்! இறுதி எண்ணெய்த்துளி வரை அவனோடு அவன் குடும்பம் சுமக்கிறேன்! இறக்கிவிட்டு பயணிக்கை

தமிழ் இந்து நாளிதழில் வெளியான பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் நேற்றும் 25-12-17- இன்றும் வெளியான 26-12-17 எனது பஞ்ச்கள்! தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் இந்து குழுமத்தினருக்கும் ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலைப்பூ வாசக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! நன்றி!

இந்த வார தினமணி-கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார தினமணி கவிதை மணியில் இடம்பெற்ற எனது கவிதை. கொண்டாடப்படும் தினங்கள்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  25th December 2017 05:19 PM   |    அ+ அ  அ-     |   வாழ்க்கையை ரசித்து வாழ்கையில் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படும் தினங்களே! எல்லா நாளும் இனிய நாளே! அந்நாளை நல்லதாக்குவது தீயதாக்குவதும் நம் செயல்களே! ஒவ்வொரு நொடியும் நமக்கான பொழுது! உணர்ந்து பணியாற்றினால் உருவாகும் உனக்கான நாள்! விடியும் நாள் வெறும் வெள்ளைக் காகிதம்! அதில் வண்ணங்கள் தீட்டுவது நம் எண்ணங்களே! இனிப்பாகவும் கசப்பாகவும் கறுப்பாகவும் வண்ணமாகவும் நல்லதாகவும் கெட்டதாகவும் கொண்டாட்டமும் குதூகலமாகவும் வருத்தமாகவும் துயரமாகவும் மாற்றுவது நம் செயல்களே! பிறந்தநாள்! நினைவுநாள்! பண்டிகைநாள்! விடுமுறைநாள்! திருமணநாள்! என்று விதவிதமாய் பெயர் சூட்டி வித்தியாசப்படுத்தி விழாக்கொண்டாடுகிறோம்! கொண்டாடப்படும் தினங்களென்றால் கொள்ளை மகிழ்ச்சித்தான்! எல்லோரையும் மகிழ்விக்க நல்லோரால் உருவானதுதான் கொண்டாடப்படும் தினங்கள்! கொண்டாட்ட தினங்களை சந்தோஷமாய் கொண்டாடுவோம்! இடைவிடாத பண்டிகைக

இந்த மாத கொலுசு மின்னிதழில் வெளியான எனது படைப்புகள்!

Image
கொலுசு மின்னிதழில் சமீப காலமாக எழுத ஆரம்பித்துள்ளேன். டிசம்பர் மின்னிதழில் வெளியான படைப்புக்கள் தங்களின் பார்வைக்கு. தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தமிழ் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் கடந்த வாரம் பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் வெளியான எனது பஞ்ச்கள் உங்கள் பார்வைக்கு. இந்து குழுமத்தினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினர் மற்றும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் வெளியான கதை!

Image
இந்து பத்திரிக்கை புதன் கிழமை தோறும் மாயாபஜார் என்ற பெயரில் சிறுவர்களுக்கான இணைப்பு வெளியிடுகிறது. கடந்த வாரத்தில் அதில் எனது சிறுவர்கதை ஒன்று பிரசுரமானது. வெளியிட்ட இந்து குழுமத்தினருக்கும் பாராட்டிய தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! படைப்பு இதோ! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

எழுத்தாள்பவர்கள் வரிசையில் நான்!

Image
தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தில் நண்பர் வேலூர் வெ.ராம்குமார் அவர்கள் குழுவில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டு வருகிறார். அதற்கு கலைவண்ணம் படைப்பவர் நண்பர் கமலக்கண்ணன். பல ஜாம்பாவன்களை பற்றி எழுதும் அந்த பதிவில் 32வது அத்தியாயமாக என்னைப் பற்றிய விபரங்களை நண்பர் எழுதி அசத்தியுள்ளார். வலையுக நண்பர்கள் படித்து ரசிக்க அந்த பதிவை கீழே தந்துள்ளேன். நன்றி! வலைப்பூ நண்பர்களால்தான் மெருகேற்றப்பட்டேன். இந்த பெருமிதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்கிறேன்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தினமணி கவிதை மணியில் போனவாரம் வெளியான கவிதை!

சென்ற வார தினமணி கவிதை மணி இணையதளக் கவிதை உங்களின் பார்வைக்கு! மனதிற்கிட்ட கட்டளை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  16th December 2017 03:53 PM   |    அ+ அ  அ-     |   ஓடி ஆடி விளையாடுவது போல ஓடிக்கொண்டே இருக்கும் மனசு! ஒருநிலையில் கொள்ளாமல் ஓட்டம் எடுக்கும் மனசு! கடலலைகள் பாய்வது போல காற்றுக்கு அலைவது போல நொடிக்கொரு முறை அலைபாயும் மனசு! அலை பாயும் மனசு! அடக்கிவிடும் நம் உயர்வு! உச்சத்தில் ஏறியவர் கூட  உடனடியாக சரிவார்  உறுதியில்லா மனசால்! எண்ணம் போல வாழ்க்கை என திண்ணமாய் சொன்ன பெரியவர்கள் திசை மாறும் மனசை திருப்பி விட பயிற்றுவித்தனர்! தறிகெட்டோடும் மனசை தடுத்து நிறுத்தி கட்டளையிட்டனர்! ஓடாதே! ஒருநிலையில் நில்லெனவே தியானத்தில் நிலைநிறுத்தினர்! முறையான பயிற்சியாலே மூச்சிழுத்து விட்டு யோக நிலைக்கு அழைத்தனர் மனதிற்கு கட்டளையிட்டு  மடியில் இருத்தி வைத்தனர்! கட்டுண்ட மனதாலே கவலை போம்! சட்டென்று மாறும் மனதாலே அவதிதான் என்றென்றும்! திக்கெட்டும் உன் கைக்கெட்ட திடம் கொண்டு உன் மனதை கட்டிவை! உலகெல்லாம் ஆட்டுவிக்க வேண்டுமென்றால் உன் ஆழ்மனசை க

தினமணி கவிதை மணியில் இந்த மாதம் வெளியான எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் இடம்பெறுவதை அறிந்திருப்பீர்கள்! இந்தமாதம் வேலைப்பளுவினால் அதை உங்களுடன் வாரா வாரம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இந்த மாதம் வெளியான  எனது  இரண்டு கவிதைகள் இதோ! விடையில்லா விடுகதை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  03rd December 2017 06:19 PM   |    அ+ அ  அ-     |   வாழ்க்கை ஓர் விடுகதை என்றே விடைதேடிப் புறப்பட்டேன்! விடியல்கள் தோறும் புதுப்புது விடுகதைகள் முளைத்தது! நித்தம் ஒரு நாடகம்! சித்தம் போன போக்கில் பயணிக்கிறது வாழ்க்கை! ஆடிக்கொண்டிருப்பது நாமென்றாலும் ஆட்டுவிப்பது நாமில்லை! நான் நானென்றே சொல்லித்திரிகிறோம் உண்மையில் “நான்” யாரென்றே தெரியாமல்! ஊரெல்லாம் அடித்து சேர்த்து வைத்தவனுக்கும் பாரெல்லாம் கொடிகட்டி பறப்பவனுக்கும் நாடெல்லாம் ஓர் குடையில் ஆண்டவனுக்கும் கூட விடையில்லா விடுகதைதான் வாழ்க்கை! குவித்த கோடிகள் கூட வருவதில்லை! கொண்டிட்ட பழிச்சொல் மாண்டும் மறைவதில்லை! சேர்த்திட்ட புகழுக்கு மறைவில்லை! சேர்ப்பதும் தோற்பதும் வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் இல்லை! ஒரு நொடியில் உதிக்கும் ஆசை ஓரு படுகுழியில்