தினமணி கவிதை மணியில் போனவாரம் வெளியான கவிதை!

சென்ற வார தினமணி கவிதை மணி இணையதளக் கவிதை உங்களின் பார்வைக்கு!


மனதிற்கிட்ட கட்டளை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 16th December 2017 03:53 PM  |   அ+அ அ-   |  
ஓடி ஆடி விளையாடுவது போல
ஓடிக்கொண்டே இருக்கும் மனசு!
ஒருநிலையில் கொள்ளாமல்
ஓட்டம் எடுக்கும் மனசு!
கடலலைகள் பாய்வது போல
காற்றுக்கு அலைவது போல
நொடிக்கொரு முறை அலைபாயும் மனசு!
அலை பாயும் மனசு!
அடக்கிவிடும் நம் உயர்வு!
உச்சத்தில் ஏறியவர் கூட 
உடனடியாக சரிவார்  உறுதியில்லா மனசால்!
எண்ணம் போல வாழ்க்கை என
திண்ணமாய் சொன்ன பெரியவர்கள்
திசை மாறும் மனசை
திருப்பி விட பயிற்றுவித்தனர்!
தறிகெட்டோடும் மனசை
தடுத்து நிறுத்தி கட்டளையிட்டனர்!
ஓடாதே! ஒருநிலையில் நில்லெனவே
தியானத்தில் நிலைநிறுத்தினர்!
முறையான பயிற்சியாலே
மூச்சிழுத்து விட்டு
யோக நிலைக்கு அழைத்தனர்
மனதிற்கு கட்டளையிட்டு 
மடியில் இருத்தி வைத்தனர்!
கட்டுண்ட மனதாலே கவலை போம்!
சட்டென்று மாறும் மனதாலே
அவதிதான் என்றென்றும்!
திக்கெட்டும் உன் கைக்கெட்ட
திடம் கொண்டு உன் மனதை கட்டிவை!
உலகெல்லாம் ஆட்டுவிக்க வேண்டுமென்றால்
உன் ஆழ்மனசை கட்டுவை!
மனதிற்கு இடும் கட்டளையால்
மகிழ்வான வாழ்வதனை அனுபவி!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2