இந்த வார தினமணி-கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார தினமணி கவிதை மணியில் இடம்பெற்ற எனது கவிதை.

கொண்டாடப்படும் தினங்கள்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 25th December 2017 05:19 PM  |   அ+அ அ-   |  
வாழ்க்கையை ரசித்து வாழ்கையில்
ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படும் தினங்களே!
எல்லா நாளும் இனிய நாளே!
அந்நாளை நல்லதாக்குவது தீயதாக்குவதும்
நம் செயல்களே!
ஒவ்வொரு நொடியும் நமக்கான பொழுது!
உணர்ந்து பணியாற்றினால்
உருவாகும் உனக்கான நாள்!
விடியும் நாள் வெறும் வெள்ளைக் காகிதம்!
அதில் வண்ணங்கள் தீட்டுவது
நம் எண்ணங்களே!
இனிப்பாகவும் கசப்பாகவும்
கறுப்பாகவும் வண்ணமாகவும்
நல்லதாகவும் கெட்டதாகவும்
கொண்டாட்டமும் குதூகலமாகவும்
வருத்தமாகவும் துயரமாகவும்
மாற்றுவது நம் செயல்களே!
பிறந்தநாள்! நினைவுநாள்!
பண்டிகைநாள்! விடுமுறைநாள்!

திருமணநாள்! என்று விதவிதமாய்
பெயர் சூட்டி வித்தியாசப்படுத்தி
விழாக்கொண்டாடுகிறோம்!
கொண்டாடப்படும் தினங்களென்றால்
கொள்ளை மகிழ்ச்சித்தான்!
எல்லோரையும் மகிழ்விக்க நல்லோரால்
உருவானதுதான் கொண்டாடப்படும் தினங்கள்!
கொண்டாட்ட தினங்களை
சந்தோஷமாய் கொண்டாடுவோம்!
இடைவிடாத பண்டிகைகள்!
எளியோரையும் மகிழ்விக்கும்!
ஒருவருக்கும் தொல்லை கொடுக்காமல்
ஒற்றுமையாய் கூடி மகிழ்ந்து
கொண்டாடுவோம் கொண்டாட்ட தினங்களை!

தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் தினமணி குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2