Posts

Showing posts from September, 2015

இளைய தலைமுறை!

Image
இளைய தலைமுறை ! அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பிவழிந்தது.பக்கத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் எனக்கு அந்த மாணவ கும்பலின் நடத்தை அறுவெறுப்பை உண்டாக்கியது. கும்பலாக நின்று ஆண் பெண் வித்தியாசம் பாராமல் அரட்டை அடிப்பதும் சிரிப்பதும் தொட்டு பேசுவதும் அந்த பஸ் ஸ்டாண்டே அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.          சக மாணவர்களை வாடா போடா என்று விளித்து பேசி அவர்களை கிண்டலடிப்பதும் அவர்கள் சொன்ன பதிலுக்கு சிரிப்பதுமான அவர்களின் விளையாட்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. " ச்சே என்ன பெண்கள் இவர்கள்? இது இருபதாம் நூற்றாண்டுதான். புதுமைபெண்களாக இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படியா நடு ரோட்டில் நாலைந்து ஆண்களுடன் கும்மாளம் அடிப்பது இவர்களெல்லாம் படித்து நாட்டை திருத்தப் போகிறார்களா என்ன? " மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டேன்.     நல்ல வேளையாக பஸ் வரவே முண்டி அடித்து ஏறினோம் நல்ல கூட்டம் பஸ் நிரம்பி வழிந்தது.         இதை பயன்படுத்தி ரோமியோ ஒருவன் அந்த மாணவிகளின் இடையே நுழைந்து உரசவும் விலகி முறைத்தனர் அவர்கள். சற

தளிர் லிமெரிக் கவிதைகள்!

Image
பூத்துச் சிரித்த குளங்கள்! புதிதாய் உருவாகின குடியிருப்புக்கள்! புதைந்து போயின நீராதாரங்கள்! வாகன ஓட்டிகளுக்கு வேண்டும் தலைக்கவசம் வந்தது ஓர் அவசரச் சட்டம்! மக்களுக்கு வரணும் விழிப்புணர்வு அவசியம்! சபையில பாடறாங்க புகழு! சத்தமே இல்லாம ஒதுங்கறாங்க எதிர்கட்சி! நித்தமே இதுதான் நிகழ்வு! ஊருக்கு நாலு மதுக்கடை! பேருக்கும் கிடையாதாம் மதுவிலக்கு! குடிப்பவர்கள் இருக்கையிலே விற்க ஏது தடை? நாடெல்லாம் சுத்தறாரு   பிரதமரு! நடக்காமல் முடங்குது நாடாளுமன்றம்! நம்மோட வரிபணத்தை முழுங்க இவங்கயாரு?   கிராமங்களை இணைத்தன சாலைகள்!   வயல்களில் விளைந்தன   நோட்டுக்கள்!   உயர்ந்தன உணவுப்பொருட்களின் விலைகள்! டெஸ்டுக்கு கில்லி கோலி! தோனிக்கு ஆனாரு வில்லி! பதவி ஆடுது கதகளி! ஊருக்கு ஓர் கல்வித் தந்தை!   உபயத்துலே ஓங்கிவளர்கின்றன கல்லூரிகள்! உயரத்துலே நிக்குது கல்வி சந்தை! நித்தம் நித்தம் பெருகுது வாகனங்கள்! நெரிசலில் சிக்குது சாலைகள்! நினைத்து பார்க்க வேணும் பொதுஜனங்கள்! தொலைக்காட்சி எல்லாமே மெகா தொடர்கள் தொடர்ந்து வீணாப் போவுது நே

சங்கரன் பெற்ற புண்கள்! தித்திக்கும் தமிழ் பகுதி 21

Image
தித்திக்கும் தமிழ்! பகுதி 21    துன்பங்கள் துரத்தும் போது, கவலைகள் சூழும் போது ஓர் மன ஆறுதலைத் தேடி நண்பர்களிடம் உறவினர்களிடம் போய் கூறி ஆறுதல் அடைவது வழக்கம். சில சமயம் கோயில்களில் போய் ஆண்டவரிடம் நமது குறைகளை சொல்லி , ஏண்டாப்பா சாமி! இப்படி கஷ்டப்படுத்துகிறாயே! கொஞ்சம் காது கொடுத்து என் குறைகளை கேள்! என் கஷ்டங்களை போக்கு என்று வேண்டுவார்கள்.    இன்றைய நவீன யுகத்தில் துன்பங்களுக்கு பரிகாரங்கள் செய்கிறேன் என்று பல சாமியார்கள் தோன்றி காசு பிடுங்கி சம்பாதிக்கின்றனர் அது வேறு விஷயம். நமக்கு ஓர் துயரம், கஷ்டம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கையில் ஓர் ஆறுதல் அடைகின்றது. நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து அதை இறைவனாக வணங்குகின்றோம். அந்த இறைவனிடத்திலே ஒன்றி தமது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி நிற்கின்றோம். அப்போது நமது துன்பங்கள் அந்த பக்தியிலே கரைந்து போகின்றது.    இதோ இந்த புலவரும் தமக்கு நேர்ந்த துன்பங்களை இறைவன் ஈசனிடம் முறையிட்டாராம். ஈசனோ   புலவரின் குறைகளை களையாமல் அவரின் குறைகளை பட்டியலிட்டாராம். தெய்வத்திடம் சொல்லி அழப்போனால் அங்கு தெ

விபத்து!

விபத்து!     அன்று காலையே சிறப்பாக துவங்கவில்லை! எழுந்தது சீக்கிரம் என்றாலும் பணிகள் துவங்க தாமதம் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமின்மை! எப்படியோ ஒரு வழியாக நத்தம் கோயில் பூஜைகளை முடித்துவிட்டு வெளியூர் கோயில் பூஜைக்கு கிளம்புகையில் மணி காலை 9.30 ஆகிவிட்டது.    புரட்டாசி மாத பொன்னுருக காயும் சூரியன் பூமியை உருக்க நானும் வியர்வைத்துளிகளில் நனைய ஆரம்பித்து புறப்பட்டேன். எங்கள் ஊர் சாலையில் இருந்த இரண்டு மூன்று கோயில்களில் பூஜை முடித்து பஞ்செட்டி பிரதான சாலையில் செல்கையில் ஒரே வாகன நெரிசல்! முன்னே செல்லும் வாகனங்கள் மிக மெதுவாக செல்ல மணி பத்தரையைக் கடந்து இருக்க லேசான எரிச்சல். தச்சூரில் மேம்பாலம் கட்டியிருந்தும் இன்னும் திறக்கவில்லை! இருபக்க சர்வீஸ் சாலையில் வலப்புற சாலை மிக மோசமானது.      வேலம்மாள் பொறியியல் கல்லூரி அருகே மரணப் படுகுழிகள்! ஆளை அச்சுறுத்தும் புதிதாக அந்த பக்கம் வருபவர்கள் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு செல்வார்கள். எப்போது மழை பெய்தாலும் அந்த குழியில் விழுந்து எழுந்து சென்றால் காசிக்கு போய்வந்த புண்ணியம்! நெடுஞ்சாலைத்துறையோ அதை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள