கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 49


கொஞ்சம் சிரியுங்க பாஸ்!


1.   நம்ம தலைவர் எப்ப பார்த்தாலும் பைனாகுலரும் கையுமாவே இருக்காரே ஏன்?
அவர் தொலைநோக்கு பார்வையோட கட்சியை வழிநடத்தறாராம்!

2.   போதுமான ஆதாரம் இல்லைன்னு நீ கொடுத்த புகாரை ஸ்டேஷன்ல தள்ளுபடி பண்ணிட்டாங்களா? எந்த ஆதாரம் இல்லாம போச்சு?
நிதி ஆதாரம்தான்!

3.   என் பொண்ணு எல்லார்க்கிட்டேயும்  “நிறை”யத்தான் பாப்பான்னு   மாமனார் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன்!
  ஏன் என்ன ஆச்சு?
என் பொண்டாட்டி “ நிறையவே” எதிர்பார்க்கிறாளே!

4.   லெக்கின்ஸ் போட்டா பிடிக்கும்னு அப்போ சொன்னீங்க இப்ப முகத்தை சுளிக்கிறீங்களே!
  அட! நான் நல்லா இறுக்கி பிடிக்கும்னு சொன்னதை நீ தப்பா புரிஞ்சிகிட்டா எப்படி?!

5.   அந்த டைரக்டரை நம்ம சிலை திருட்டு கும்பல்ல ஏன் சேத்துக்க மாட்டேங்கறீங்க தலைவா?
கதையை திருடினாவே மாட்டிக்கிறாரே! சிலையை திருடினா மாட்டாம இருப்பாரா….! அதனாலதான்!

6.   மன்னர் போருக்கு கிளம்பி விட்டார் என்று சொல்கிறீர்களே! நாட்டில் படையெடுப்பு எதுவும் இல்லையே?
  மந்திரி பிரதானிகளுடன் “ அக்கப்போர்” பேச கிளம்பியதைத்தான் அப்படி சுருக்கமாக சொன்னேன்!


7.   மன்னா! நீங்கள் வகுத்த வியூகத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றனவே!
புரியாமல் பேசாதீர்! அப்போதுதானே எதிரி தாக்கும் போது புகுந்து ஓடிவர வசதியாக இருக்கும்!
8.   மந்திரியாரே! இளவரசர் போர்க்களத்தில் புகுந்து விளையாடுகிறாராமே!
அட போங்க மன்னா! அவர் போர் நடக்குமிடத்தில் வந்து கபடியும் பல்லாங்குழியும் ஆடிக்கொண்டிருப்பதைத்தான் அப்படி சொல்கிறார்கள்!

9.    அந்த டாக்டர் கிண்டல் பேர்வழியா இருக்கார்!
   எப்படி சொல்றே?
ஆபரேசன் தியேட்டருக்கு பேஷண்டை கூட்டிட்டு வரட்டான்னு கேட்டா டிக்கெட் வாங்கிட்டாரான்னு கேக்கறாரே!

10.  உங்களுக்கு வந்திருக்கிறது சாதாரண கட்டிதான் ஆபரேட் பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னார்…
அப்புறம்?
இப்ப நான் என் பேங்க் அக்கவுண்ட்டை ஆபரேட் பண்ண முடியாத நிலைமை ஆயிருச்சு!

11. எல்லா கோயில் உண்டியலையும் உடைச்சு சில்லறையை மட்டும் திருடி இருக்கியே ஏன்?
சில்லறை திருட்டுன்னா கண்டிச்சு விட்டுடுவாங்கன்னு சொன்னாங்க அதான்!

12.  தலைவருக்கு ஜெனரல் நாலேட்ஜ் கொஞ்சம் கம்மி!
   எப்படி சொல்றே?
 ஓபன் டென்னிஸ் மட்டும் ஆடறாங்களே குளோசிங் டென்னிஸ் ஆட மாட்டாங்களான்னு கேக்கறார்!


13.  பேங்குக்கு போன தலைவர் உடனே ஏன் திரும்பி வந்துட்டாரு?
கரண்ட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாம்னு போனா அங்கே கரண்டே இல்லையாம்!
14. எதிரி மன்னன் நம்மை சரியாக எடை போட்டிருக்கிறான் என்று எப்படி சொல்கிறீர் தளபதியாரே!
  பேரிச்சம் பழ காரனாக வந்து நம் கத்தி கேடயங்களை எடை போட்டு சென்றது எதிரிதானாம் மன்னா!


15.  மாப்பிள்ளை ஆத்திச்சூடி வழி நடப்பவர்னு சொன்னீங்க ஆனா சதா குடிச்சிக்கிட்டே இருக்காரே!
   ‘ஊக்க”மது” கைவிடேல்னு இருக்கிறதை அவர் கடைபிடிக்கிறார்!

16.  ஆட்சியிலே பங்கு கொடுக்கிறவங்களோடதான் கூட்டுன்னு சொன்ன தலைவர் ஏன் சோகமா இருக்கார்?
  யாரும் இந்த சம”ரசத்து”க்கு ஒத்துக்கவே இல்லையாம்!

17.  மாற்றம்… ஆரம்பம்னு தலைவர் அறிக்கை விட ஆரம்பிச்சாட்டாரே என்ன விஷயம்!
  புழல்லேயிருந்து வேலுருக்கு மாத்திட்டாங்களாம்!

18.  பேய்படத்துக்கு மனைவியை கூட்டிட்டு போய் சண்டையாயிருச்சா ஏன்?
பேய்படத்தை இப்பத்தான் முதன்முதலா பாக்கிறேன்னா! நானும் உணர்ச்சிவசப்பட்டு பேய்படத்தை ஒரு பேயோடு இப்பத்தான் பாக்கிறேன்னு சொல்லி தொலைச்சிட்டேன்!

19.  மேலுக்கு சுகமில்லைன்னு மேனேஜர் கிட்ட லீவ் கேட்டா தர மாட்டேங்கிறார்?
   ஏன்?
  நீ ஃபிமேல் தானே அப்புறம் எதுக்கு லீவுன்னு கேக்கறார்?

20.   பொற்கிழி பரிசாக பெற்றும் புலவர் ஏன் சோகமாக இருக்கிறார்?
   பரிசுப்பணம் எல்லாம் கிழிந்த நோட்டாகவே இருக்கிறதாம்!

21.  உப்பரிகையில் உலாவ மன்னருக்கு ராணியார் தடை விதித்து விட்டார்களாமே!
  உலாவுகிறேன் என்று தடாகத்தில் குளிக்கும் பெண்களை பார்த்து ஜொள்ளு விடுகிறாராம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வணக்கம் நண்பரே! அனைத்தும் அதிகமாக சிரிக்கும்படி இருக்கிறது! ஏதும் புத்தகமாக வெளியிட்டூர்களா? புத்தகமாக இருந்தால் மொத்தமாக சிரிக்கலாம் பாருங்கள்! சிரி தொடருங்கள்

    நான் கைபேசியில் வலைதளம் ஆரம்பித்து எழுதுவதால் "எந்த கணிணி டாஸ்போர்ட் "க்கும் என் பதிவு தெரியாது! என் அனைத்து பதிவுகளுக்கும் சிறப்பான கருத்துகளை தந்தமைக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்து மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  3. நீங்க அள்ளி வீசுங்க பாஸ்...

    ReplyDelete
  4. எல்லாமே
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  5. எங்கிட்டுதான் இம்புட்டு இருக்கோ,,,
    அனைத்தும் அருமை

    ReplyDelete
  6. அனைத்தையும் ரசித்தேன். பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  7. வழக்கம் போல அனைத்துமே அருமை. ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      ஐயா
      அனைத்தும் நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்
      கருத்து எழுதும் களம் திறக்கவில்லை அதன் காரணத்தால் மாற்று வழியில் எழுதுகிறேன்... பலதடவை வந்து இதைய நிலைதான் என்னவென்று பாருங்கள்.. ஐயா..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  8. ஜோக் மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்து விட்டது!

    ReplyDelete
  9. அனைத்தும் ஹிஹிஹிஹி

    ReplyDelete
  10. தொகுத்து மின்னூலாக்கலாம் அருமை

    ReplyDelete
  11. அனைத்துமே அருமை சுரேஷ்....மிகவும் ரசித்துச் சிரித்தோம்...

    ReplyDelete
  12. ஊக்கம் மது.....மேல் ஃபிமேல் அருமை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2