விநாயகரின் அறுபடை வீடுகள்!

விநாயகர் பற்றிய சுவையான தகவல்கள்!


விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்
  1. மாசிப்பச்சை,2 கத்திரி, 3,வில்வம்,4,அருகம்புல்,5 ஊமத்தை, 6,எலந்தை,7,நாயுருவி, 8,துளசி, 9,மாவிலை,10,அரளி, 11,விஷ்ணுகிரந்தம்,12,மாதுளம், 13,நெல்லி, 14,மருதாணி,15,நொச்சி,16,ஜாதி 17,வன்னி, 18,கரிசிலாங்கன்னி 19,நீர்மருது 20,எருக்க இலை, 21 கண்டலீ பத்ரம்.

பெண்வடிவமாக சித்தரிக்கப்பட்ட விநாயகர்கள் விநாயகிகள் எனப்படும். இந்தியாவில் 30 இடங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் உள்ளன. அவைகளில் சில மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன்மண்டபம், வடீவீஸ்வரம் வைப்புத்தலம் நாகர்கோயில், சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் உள்ளது.


மோதகத்தத்துவம்:

    அரிசி மாவினால் செய்யப்பட்டு அதற்குள் பூரணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்கிறோம் இதன் பொருளை அறிந்து கொள்வோம் அரிசி மாவு சுவையற்றது ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. யானைக்கு பிடித்தமான உணவும் கூட. சுவையில்லாத அரிசி மாவுடன் சுவையான வெல்லம் சேரும்போது விரும்பி உண்ணும் பண்டமாக மாறுகிறது. பக்தி கலந்த வாழ்க்கையே சுவையாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

பிள்ளையார் சுழி ஏன்?
   உலகின் முதல் சுருக்கெழுத்தர் விநாயகர் என்று வேடிக்கையாக கூறுவார்கள். வியாசர் வேகமாக பாரதம் கூற அதை எழுதியவர் விநாயகர். தன் தந்தத்தை உடைத்து பாரதம் எழுதிய பிள்ளையாரை நினைவு கூர்ந்து பெருமானை சிந்தித்து ஒரு விஷயத்தை எழுத துவங்குகிறோம் அதுவே பிள்ளையார் சுழி.


விநாயகரும் விருட்சங்களும்:
  வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
  புன்னை மரத்து விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.
மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.
மாமரத்து விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.
அரசமரத்து விநாயகரை வழிபட விளையுள் கூடும்.
வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
விநாயகர் தத்துவம்:
   தலை ஞானத்தையும், பெரிய காதுகள் வேதாந்த உண்மைகளை கேட்டறியவும், ஐங்கரங்கள் ஐந்தொழிலை செய்யும் ஆற்றலையும், தும்பிக்கை புத்தியினையும் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு செல்வம்,வறுமை, என கலந்து அமைவது வாழ்க்கை என்பதை ஒற்றைக் கொம்பு விளக்குகிறது. அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே கொண்டதாக பானை வயிறு அமைந்துந்துள்ளது.


 அருகம்புல் தத்துவம்:
   அருகம்புல்லானது ஓரிடத்தில் வளர்ந்து ஆறு இடங்களில் பரவக்கூடிய மூலிகை. இதே போன்றே கழுமுனையின் வழியில் செல்லும் குண்டலினி சக்தியும் யோகாசனப் பயிற்சி மூலம் ஆறு பிரதான பரவக் கூடியது. எளிமையின் வெளிப்பாடாக அருகம் புல் அமைந்துள்ளது. எளிதில் கிடைக்க கூடியது. விஷ முறிவு தரும். இதை எளிமையின் உருவமான விநாயகருக்கு சமர்ப்பித்து அவரது அருளை பெறுவதாக ஐதீகம்.

விநாயகரின் ஆறுபடை வீடுகள்;
1.      திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்
2.      திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்
3.      திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
4.      மதுரை ஆலால சுந்தர விநாயகர்
5.      பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்
6.      திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

வெயிலுக்குகந்த விநாயகர்:
  இராமநாதபுரம் தேவி பட்டினம் அருகே உப்பூர் தலத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் ஆலயத்திற்கு மேற்கூரை கிடையாது. காசி துண்டி கணபதியும் மேற் கூறை இல்லாமல் உள்ளார்.ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்னம் பாடியது இந்த விநாயகரை வணங்கித்தான்.

பலபுத்தகங்களில் படித்து தொகுத்தேன்!
 
(மீள்பதிவு) 

விநாயகர் சதுர்த்தி வேலைகளில் பிசி! விரைவில் வலையுலகம் திரும்புகிறேன்! அதுவரை பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. விநாயகரின் ஆறுபடை வீடுகள் என்ற புதிய பயன்பாட்டையும், உரிய கோயில்களையும் தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    முருகனுக்கு ஆறுபடை வீடு உள்ளது போல் விநாயகருக்குஉண்டு என்பதையும் பெண்விநாயகர் உண்டு என்பதைதங்களின் பதிவு வழி அறிந்தேன்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்......

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. அறிந்திராத பல விடயங்கள்!
    நன்றியுடன் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பலவிடயங்கள் அறிந்தேன் நன்றி
    விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள் நண்பரே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2