தளிர் லிமெரிக் கவிதைகள்!
பூத்துச்
சிரித்த குளங்கள்!
புதிதாய்
உருவாகின குடியிருப்புக்கள்!
புதைந்து
போயின நீராதாரங்கள்!
வாகன ஓட்டிகளுக்கு
வேண்டும் தலைக்கவசம்
வந்தது
ஓர் அவசரச் சட்டம்!
மக்களுக்கு
வரணும் விழிப்புணர்வு அவசியம்!
சபையில
பாடறாங்க புகழு!
சத்தமே
இல்லாம ஒதுங்கறாங்க எதிர்கட்சி!
நித்தமே
இதுதான் நிகழ்வு!
ஊருக்கு
நாலு மதுக்கடை!
பேருக்கும்
கிடையாதாம் மதுவிலக்கு!
குடிப்பவர்கள்
இருக்கையிலே விற்க ஏது தடை?
நாடெல்லாம்
சுத்தறாரு பிரதமரு!
நடக்காமல்
முடங்குது நாடாளுமன்றம்!
நம்மோட
வரிபணத்தை முழுங்க இவங்கயாரு?
கிராமங்களை இணைத்தன சாலைகள்!
வயல்களில் விளைந்தன நோட்டுக்கள்!
உயர்ந்தன உணவுப்பொருட்களின் விலைகள்!
டெஸ்டுக்கு
கில்லி கோலி!
தோனிக்கு
ஆனாரு வில்லி!
பதவி ஆடுது
கதகளி!
ஊருக்கு
ஓர் கல்வித் தந்தை!
உபயத்துலே ஓங்கிவளர்கின்றன கல்லூரிகள்!
உயரத்துலே
நிக்குது கல்வி சந்தை!
நித்தம் நித்தம் பெருகுது வாகனங்கள்!
நெரிசலில் சிக்குது சாலைகள்!
நினைத்து பார்க்க வேணும் பொதுஜனங்கள்!
தொலைக்காட்சி எல்லாமே மெகா தொடர்கள்
தொடர்ந்து வீணாப் போவுது நேரங்கள்!
விட்டொழித்தால் சீர்படுமே பல குடும்பங்கள்!
குளங்களிலெல்லாம் கட்டினார்கள் வீடு!
குடியிருந்த நீரெல்லாம் மறைந்து போனது!
குடிநீருக்கு
வந்துவிட்டது தட்டுப்பாடு!
ஓடி ஓடி செய்கின்றாரு அரசியலு!
அள்ளுகின்ற கூட்டமெல்லாம் ஓட்டாகணும்!
ஆடியிலே வரப்போவுதாம் தேர்தலு!
காதலுக்கு தடையானது சாதி!
கழுத்தறுபட்டு மாய்ந்தது பேத்தி!
அறுபட்டுப் போனது சமூக நீதி!
உடுப்பெல்லாம் இன்று மாறிப்போச்சு!
எடுத்து வெளியிடலாமோ ஆபாசக் காட்சி!
படுத்துப் போனது பத்திரிக்கை மூச்சு!
அள்ளினார்கள் மணலை ஜோரா!
துள்ளி ஓடவில்லை தண்ணி ஆறா!
கொள்ளி வச்சாச்சு விவசாயிக்கு நேரா!
மரங்களில் கூடி சப்தமிட்ட பறவைகள்!
நொடியில் கலைந்து பறந்தன!
வேடனின் துப்பாக்கியில் வெடித்தன ரவைகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் நிரப்பி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை நண்பரே
ReplyDeleteநன்றி
இன்றய எதார்த்தை பற்றி அருமையான கவிதை!! அனைத்தும் சூப்பர் நன்றி நண்பரே!!!
ReplyDeleteவழக்கம்போல எல்லாமே அருமை.
ReplyDeleteஅருமை சகோ..
ReplyDelete
ReplyDeleteஉங்கள் கவிதைகளை படித்தபின் அனைத்தும் அருமை என்று சொல்லுவதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்
கவிதை, நகைச்சுவை, நீதிக்கதை அனைத்திலும் உங்கள் முத்திரை தனிதான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவிழிப்புணர்வுக் கவிதை. அருமை. வாழ்த்துகள்.
அருமை சகோ அனைத்தும் ரசித்தேன். வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅனைத்தும் அருமை சகோ,
ReplyDeleteஉலகச் சூழலை உருட்டித் தந்த உன்னத கவிதை!
Deleteவாழ்த்துகள் ரசித்தேன் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நன்று
ReplyDeleteஅனைத்துமே அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅனைத்து லிமெரிக்குகளும் மெரிட் தாங்கி நிற்கின்றன..சுரேஷ் அருமை!
ReplyDelete