Posts
Showing posts from 2022
தொட்டால் விடாது! சிறுகதை
- Get link
- Other Apps
தொட்டால் விடாது ! நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு . கல்யாண வீட்டின் சந்தோஷக் களை பரவி இழுந்த்து வீடு முழுவதும் . புதுமாப்பிள்ளை அசோக்கும் அவன் மனைவி ஆனந்தியையும் உறவுகள் சுற்றி அமர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தனர் . ஆனந்தியின் முகத்தில் வெட்கம் குடிகொண்டு இருந்தது . ” இன்னும் கொஞ்சம் நேரம்தான் ! அப்புறம் நம்ம பேச்சை எல்லாம் அசோக் கேட்கமாட்டான் . அப்புறம் எல்லாம் ஆனந்தமே ! இல்லே இல்லே ஆனந்தியே !” என்று அவன் அண்ணா சுதாகர் கலாய்க்க” நீ மட்டும் என்ன ? மனைவி சொல்லே மந்திரம்னு மாறீடலியா ?” என்று அவனை கலாய்த்தார் வீட்டுப் பெரியவர் ஒருவர் . ” சரிசரி ஆகவேண்டியதை பாருங்க ! பர்ஸ்ட் நைட்டுக்கு ரூமெல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டீங்களா ? ரூம்ல நல்ல ஸ்ப்ரே அடிச்சிருக்கீங்களா ? பூ அலங்காரம் நான் பண்ணட்டுமா ?” என்று அசோக்கின் அக்கா புருஷன் கேட்க , உங்க பர்ஸ்ட் நைட்டுக்கு அடிச்ச ஸ்ப்ரே மிச்சம் இருந்தது . அதைத்தான் ரூம் பூரா கொட்டி வைச்சிருக்கோம் என்று குறும்பாகச்சொன்னான் இளையவன் ரவி . “ டேய் ! அத