தொட்டால் விடாது! சிறுகதை
தொட்டால்
விடாது!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
கல்யாண
வீட்டின் சந்தோஷக் களை பரவி இழுந்த்து வீடு முழுவதும். புதுமாப்பிள்ளை அசோக்கும் அவன் மனைவி ஆனந்தியையும் உறவுகள் சுற்றி அமர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஆனந்தியின் முகத்தில் வெட்கம் குடிகொண்டு இருந்தது.
”இன்னும் கொஞ்சம் நேரம்தான்! அப்புறம் நம்ம பேச்சை எல்லாம் அசோக் கேட்கமாட்டான்.அப்புறம் எல்லாம் ஆனந்தமே! இல்லே இல்லே ஆனந்தியே!” என்று அவன் அண்ணா சுதாகர் கலாய்க்க” நீ மட்டும் என்ன? மனைவி சொல்லே மந்திரம்னு மாறீடலியா?”
என்று அவனை கலாய்த்தார் வீட்டுப் பெரியவர் ஒருவர்.
”சரிசரி
ஆகவேண்டியதை பாருங்க! பர்ஸ்ட் நைட்டுக்கு ரூமெல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டீங்களா? ரூம்ல நல்ல ஸ்ப்ரே அடிச்சிருக்கீங்களா? பூ அலங்காரம் நான் பண்ணட்டுமா?” என்று
அசோக்கின் அக்கா புருஷன் கேட்க,
உங்க பர்ஸ்ட் நைட்டுக்கு அடிச்ச ஸ்ப்ரே மிச்சம் இருந்தது. அதைத்தான் ரூம் பூரா கொட்டி வைச்சிருக்கோம் என்று குறும்பாகச்சொன்னான் இளையவன் ரவி. “டேய்! அது ரூம் ஸ்ப்ரே இல்லைடா! கொசு மருந்து! அதை தெளிச்சு உங்க அக்கா
உள்ளே வருவதுக்கு முன்னே என்னை மயக்கிவிட்டிங்களே அந்த தண்ட ஸ்ப்ரேயை இன்னுமா மிச்சம் வைச்சிருக்கீங்க!”
இப்படி ஆளாளூக்கு கலாய்த்து கலைந்து சென்ற பின்னர் ஆன்ந்தி ருமூக்கு டிரஸ் சேஞ்ச் செய்ய அழைத்துச்சென்றனர். அசோக் ப்ரஷ் ஆகி
அறைக்குள் சென்றான்.
அறைக்குள் மல்லிகை மணம் சூழ்ந்திருந்தது. ஊதுபத்தி வாசம் மெலிதாக வந்துகொண்டிருக்க ஸ்பீக்கரில் மேற்கத்திய இசை மெலிதாக வழிந்து கொண்டிருந்தது.
மிருதுவான
ஃபோம் மெத்தையில் விரிப்பின் மீது மல்லிகை மொட்டுகள் சிதறிக்கிடக்க மேலே குறுக்கும் நெடுக்குமாக மல்லிகை சரங்கள் தொங்கவிடப்பட்டிருக்க கட்டிலில் அமர்ந்தான் அசோக். பரபரப்பாக இருந்தது அவனுக்கு. முதன் முதலாய் ஒரு பெண்ணுடன் தனியாய் இரவை கழிக்க இருக்கிறான். முகத்தில் வியர்ந்த வியர்வையை மேல்துண்டால் துடைத்தான்.
கதவு
திறக்கும் ஓசை கேட்டது. ஆன்ந்தியை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே கதவை சாத்திக்கொண்டு சிரிப்பலையாக கடந்த்து ஒரு கூட்டம். ஆனந்தி கையில் பால் செம்போடு உள்ளே வந்தாள். செம்பை அங்கே இருந்த டேபிளில் வைத்துவிட்டு அசோக்கின் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் முகம் வெட்கத்தால் சிவந்து இருந்தது.
அசோக்
அவள் தோளைத் தொட்டான். அவள் நெளிந்தாள். வெட்கமா இருக்குங்க! எல்லாம் கொஞ்ச நேரம்தான் அப்புறம்
சரியாயிரும் என்றவன் அவளை இழுத்து அணைத்தான். அவள் இதழ்களில் முத்தம் பதிக்க தன் முகத்தை அவளருகே கொண்டு சென்றவன் அதிர்ந்தான்.
ஆனந்தியிடம் முன்பிருந்த வெட்கம் இல்லை! நெளிவு இல்லை! விறைப்பாய் அவள் கண்கள் சிவந்து அசோக்கை முறைத்தாள். ஒரு நொடி தயங்கிய அசோக். புதுப்பெண் பயந்துவிட்டாள். என்று அவள் இதழில் பதிக்க இருந்த முத்த்த்தை நெற்றியில் பதிக்க முயன்ற போது…
அவனைப் பிடித்து தூர தள்ளினாள் ஆனந்தி.
ஒரு
முரட்டுத்தள்ளல்
அது! ஒரு வலிமையான ஆண் தான் அவ்வாறு தள்ள முடியும். தள்ளிய வேகத்தில் சுவரில் போய் முட்டிக் கொண்டு எழுந்தான் அசோக். ஆனந்தி! ஏன்ன இது? ஏன் இப்படி தள்ளினே? பிடிக்கலைன்னா சொல்லிடு.. சற்றே கோபமாக சொன்னான் அசோக்.
”பிடிச்சதுனாலதாண்டா பிடிச்சிருக்கேன்…!” ஒரு
மாதிரி கண்களை உருட்டி பற்களை நறநறவென கடித்தபடி கரகரத்த ஆண்குரலில் ஆனந்தி கூறினாள்.
”என்ன
சொல்றே? ஆனந்தி ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறே?”
”எப்படி
நடந்துக்கணும்
மாமா! ”என்று முந்தானையை சரிய விட்டாள் ஆனந்தி.
”ஆனந்தி! ஆர்
யூ நார்மல்! ஐ ஃபீல் யூ ஆர் இன் ட்ரபுள் நவ்! வாட்ஸ் ஹேப்பண்?”
”வாரே…
வாவ்! தொங்கனா கொடுக்கா? இங்கிலீஷ்ல மாட்லாடுஹாரா! செம்பேசிஸ்ணாடுறா?”
அசோக் நடுங்கிப் போனான்! காலையில் புதுப்பெண்ணாய் வெட்கத்துடன் வளைய வந்த ஆனந்தியா இவள்? இல்லை! என்னமோ நடந்திருக்கிறது? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு நெருங்கி ”ஆனந்தி விளையாடாதே! இது நமக்கு பர்ஸ்ட் நைட்! ”என்று அவள் தோளைத் தொட்டான்.
”யாருடா
விளையாடுறது? என்ன சொன்னே? இது நமக்கு பர்ஸ்ட் நைட்டா?”
”ஹாஹாஹா!
இது உனக்கு லாஸ்ட் நைட்? ஆமா… நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்டே?”
அசோக்கிற்கு
வியர்த்துக் கொட்டியது? அவன் நாக்கு உலர்ந்து போனது. அங்கிருந்த சொம்பில் இருந்த நீரைக் குடிக்க உயர்த்தினான். அது அப்படியே இரத்தமாய் சொட்டியது
நோ…! என்று சொம்பை தூக்கி வீசினான். பக்கத்தில் இருந்த பாலை குடிக்கலாம் என்று எடுத்தான். அப்படியே வாயில் கவிழ்க்க போனவன் அதிர்ந்தான் பால் முழுக்க புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன அதை அப்படியே தூர எறிந்து வீல் என அலறீனான். அவன் இதயம் பலமாக துடிக்க ஆரம்பித்த்து.
சத்தம்
கேட்டு வெளியே இருந்தவர்கள் கதவைத் தட்ட. ஆன்ந்தி சாதுவாக எழுந்தாள். கண்கள் கலங்கியபடியே… அத்தே… அவரு ஒரு மாதிரியா நடந்துகிறார் அத்தே… அதோ பாருங்க! பால்ல புழுக்கள் மிதக்கிறதா சொல்றாரு… தண்ணி சொம்பை தூக்கி வீசிட்டாரு.. வெறிக்க வெறிக்க பார்க்கிறாரு நாக்கை கடிக்கிறாரு…
எனக்கு ரொம்ப பயமா இருக்கு… கண்ணீர்விட்டழுதாள் ஆனந்தி
”அம்மா!
அம்மா! அவ சொல்றதை நம்பாதே! அவளை ஏதோ பேய் பிடிச்சுருக்கு! என்னை பயமுறுத்தினா! கீழே தள்ளிவிட்டா! இதோ நெத்தி புடைச்சிருக்கு பாருங்க!”
”இப்படித்தான்
அத்தே! உள்ளே நுழைஞ்சதுமே… பேய்னு அலறி ஓடிப் போய் வார்ட்ரோப்ல முட்டிக்கிட்டாரு…! அதான் வீங்கி போச்சு! பால் கொடுத்தா புழுன்னு சொல்றார். என்னை பேய்னு சொல்றார். முதநாளே என்னை அடிக்கவும் செஞ்சிட்டார். இதோ பாருங்க!” கண்ணத்தை காட்ட அங்கே விரலின் அடையாளங்கள்.
” டேய்…! என்னடா
ஆச்சு? ஏன் இப்படி பண்றே?”
”இல்லே
இல்லே! அவ பொய் சொல்றா? அவளை நம்பாதீங்க! ஆனந்தி மேல பேய் பிடிச்சிருக்கு!”
”உளறாதே!
முதல்ல உன்னை கூட்டிப்போய் பூசாரிகிட்டே மந்திரிக்கனூம்!”
”சாரிம்மா!
இப்படி இவன் நடந்திட்டிருக்க கூடாது! ஏதோ கண் திருஷ்டி! நாளைக்கு சுத்திப் போடறேன்!
கதவை சாத்திக்க!”
பெற்றோர் சொல்லிவிட்டு வெளியேற இல்லை! இல்ல நானும் வர்றேன்! அசோக் அவர்கள் கூட செல்ல முயல.. அவனை ஒரு கையால் மடக்கி மற்றொரு கையால் கதவை தாழிட்டாள் ஆனந்தி
”அவ்வளவு
சீக்கிரம் தப்பிட முடியுமா புருஷா…!”
“ஆ…!
ஆனந்தி நீ யாரு? என்னை விட்டுடு!”
”என்னை
தொட்டுட்டே! இனி விட்டுட முடியுமா? வா! புருஷா! வா! இன்னிக்கு உனக்கு கடைசி இரவு…! முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சிக்கோ…!”
சேலையை தூர எறிந்தவள் அசோக்கை கட்டியணைக்க முயல, ”நோ,,,! வேணாம்,, விட்டுடு! ” அரற்றினான் அசோக்.
”அட…! அப்படி
நானும்தானே அன்னிக்கு விட்டுடச்சொல்லி கெஞ்சனேன்! விட்டீங்களாடா!”
”என்னிக்கு? நீ யா… ரு?”
”இன்னுமாடா
நினைவுக்கு வரலே…!”
”இ,, ல்லே..!”
”தூத்தேறிப்
பயலே! மேட்டூருக்கு
ப்ரெண்ட்ஸ்களோடு
டூருக்கு வந்தியே ஞாபகம் இருக்கா!
சரியா! இதே மாசம் இதே தேதி! ரெண்டு வருஷம் முன்னாடி..”
அசோக்
அதிர்ந்து போனான்.
நண்பர்களுடன் மேட்டூருக்கு
ஒரு டூர் போயிருந்தான். அனைவரும் சேர்ந்து ரூம் போட்டு சரக்கடித்துவிட்டு கும்மாளம் அடித்து கொண்டிருந்தனர்.
ஒரு
இராப்பொழுதில்
ஃபுல்லாக குடித்துவிட்டு அறைக்குத்திரும்பிக்கொண்டிருந்தனர் அவனும் அவன் நண்பர்களும் அப்போதுதான் ஒரு சைக்கிளில் கடந்து சென்றாள் அவள். போதை தலைக்கேறியதில் அவன் நாடி நரம்புகள் முறுக்கேறியிருந்தன மச்சி! அதோ போறாளே! அவளை..! இவன் உறக்க சொன்ன போது அவள் காணாமல் போயிருந்தாள்.
”யாருடா!”
”இப்படித்தான்
சைக்கிள்ள போனா! இன்னா ஃபிகரு.. மிஸ் பண்ணீட்டமே..”
”இல்லடா!
அதோ பாரு…”
அந்த
இளம்பெண் மீண்டும் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தாள். நால்வரும் மடக்கினர்.
இவர்கள்
மீது வீசிய சாராய நெடியும்! பார்த்த பார்வையும் அவளுக்கு ஏதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்த்த ஓட ஆரம்பித்தாள். துரத்த ஆரம்பித்தனர். வென்றது அவர்கள்தான்.
”வேண்டாம்னா…!
விட்டுருங்க! ”அவள் கதற கதற அதை காது கொடுக்காமல் கசக்கி எறிந்தனர். அவள் உயிரும் மெல்ல அந்த புதரில் அடங்கிப் போனது. தடயம் இல்லாமல் அன்றிரவே கிளம்பி சென்னை வந்தனர்.
அந்த கேஸ் அவள் அனாதைப்பெண் என்பதால் அடங்கிப் போனது
” நீ,, அந்த
..”
”ஆமாடா!
நீங்க கசக்கி எறிஞ்ச காட்டு ரோஜாதான் நான்.
மேட்டூருக்கு டூர் வந்த உன் பொண்டாட்டி மேல தொத்திகிட்டேன்! நீ என்னைக்கு என்னை தொட்டியே அப்பவே கெட்டே? உன்னை விட மாட்டேன்.”.
”வேண்டாம்,,, என்னை விட்டுரு…!
நான் பண்ணது தப்புதான்!
என்னை கொன்னுடாதே அப்புறம் ஆனந்தி விதவையாயிருவா…!”
”ஓ… அந்த கவலையெல்லாம் இருக்குதா உனக்கு! அன்னிக்கு பணத்திமிர்லே ஒரு அப்பாவி பொண்ணை நாசம் பண்ணீங்கலேடா!
அப்போ இந்த இரக்கம் கவலையெல்லாம் எங்கே போச்சு?”
ஆனந்தி
தன் கண்களை உருட்டினாள் கோரமாக சிரித்தாள் ” வா! புருஷா! வா! செத்துப் போ!”
அசோக்
ஓட முயல அவனை இழுத்து கன்னத்தில் ஓர் அறைவிட்டாள் ஆனந்தி அவன் பொறி கலங்கி அப்படியே கீழே விழ அவன் கழுத்தில் தன் காலால் நசுக்கினாள்
அவன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கினான்.
(இரண்டு வருடங்கள் முன்பு முகநூலில் எழுதிய கதை)
நல்ல கற்பனை - சந்திரமுகியை நினைவு படுத்தியது.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ்
சுரேஷ், கதை நல்லாருக்கு. க்ளிஷே தான்...நீங்கள் இதைவிடச் சிறப்பான கதைகள் எழுதும் திறமைசாலி! நிறைய எழுதுயிருக்கீங்க.
ReplyDeleteகீதா
ithu oru kathaya thampi ???
ReplyDelete