Posts

Showing posts with the label செய்திகள்

அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்!

Image
அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாமன்னர் ஔரங்கசீப் சக்ரவர்த்தி அவர்கள் தர்காவில் முன் வரிசையில் நின்று தொழுவது வழக்கம் அந்த வெள்ளிக்கிழமை அன்று மாமன்னர் வர சில நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்டது. மன்னர் வந்துவிடட்டும் என்று சில நிமிடங்கள் தொழுகையை முஅஜ்ஜினும், இமாமும் தாமதம் செய்தனர். அவசரமாக வந்து தொழுகையில் கலந்துகொண்டார் சக்ரவர்த்தி ஔரங்க சீப். தொழுகை முடிந்ததும் அந்த முஅஜ்ஜினையும், இமாமையும் வேலை நீக்கம் செய்தார் ஔரங்கசீப். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைத்தது. ஒரு சிறு நிலப்பரப்பை சொற்பகாலம் ஆளப்போகும் அரசனுக்குப் பயந்து அண்ட சராசர நிலங்களையும் நிரந்தரமாக ஆளும் அந்த பேரரசனான கடவுளை வணங்க தாமதம் செய்தார்கள். இது குற்றம் அல்லவா? என்று கர்ஜித்தார் ஔரங்கசீப். இன்று!      புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி வெற்றியாண்டவர் கோயிலில் அமைச்சர் வருவதற்கு முன்பாகவே நடத்தியதற்காக சிவாச்சாரியார் கண்ணப்பன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ...

“விலங்குகளின் தெரசா” சாதனா! சாதனை மனுஷி!

Image
  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீரேற்று நிலையத்துக்கு அடுத்துள்ளது, கச்சூர் கிராமம். அங்கிருந்து, மூன்று கி.மீ., நடந்து சென்றால், வெங்கடாபுரம் வருகிறது. அங்கிருந்து, நீண்ட தூரம் நடந்து சென்றால், ஒற்றையடி பாதை. அதிலிருந்து அரை கி.மீ., பயணித்தால், 250க்கும் மேற்பட்ட மாடுகள், சுறுசுறுப்பாக, துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.   ஒரு புறம் கோழிகளும், மறுபுறம் நாய்களும் திரிகின்றன. அவர்களின், பாதுகாவலனாக, கோசாலைக்கு நடுவில் தங்கி இருக்கிறார், சாதனா,65. கோமிய, சாண வாசங்களுக்கு இடையில், விலங்குகளுக்கு சேவை செய்து வரும், அவர், லண்டனில் படித்த மருத்துவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சர்யமாக கேட்டால், சிரித்தபடியே பதில் அளிக்கிறார்... ''நான் யார் என்பதை விட, நான் என்ன செய்து வருகிறேன் என்பதற்கே முக்கியத்துவம் கொடுங்கள்'' லண்டனில் மருத்துவம் படித்து, சாணி அள்ள வாழ்க்கை வடிவமைத்துக் கொண்டதற்கு, அதீத இரக்கமும் அக்கறையும் மட்டுமல்ல; அதையும் தாண்டிய அர்ப்பணிப்பு வேண்டும். அதை, நடைமுறையில் சாத்தியமாக்கிய சாதனா, விலங்குகளின் தெரசா. கசாப்பு கடைக்கு கொண்டு செல்லும் வ...

ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்

Image
பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி டீச்சர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது பழையார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைகூட இந்த ஆண்டு தனியார் பள்ளிக்கு பைக்கட்டு தூக்கவில்லை. பள்ளிக்குப் போக வேண்டிய அத்தனை பிள்ளைகளும் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆனந்தமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒன்றாம் வகுப்பில் பாடம் சொல்லித்தரும் ஜெயலட்சுமி டீச்சர். ''மிகப்பெரிய மீனவ கிராமமான இந்த பழையாரில் மக்களுக்கு படிப்பு மேல் ஆர்வமே கிடையாது. ஆணும் பெண்ணும் கடலுக்கு போயிருவாங்க. கடலுக்கு போக ஆளு வேணுமேங்கிறதுக்காக நிறைய புள்ளைங்கள பெத்துக்குவாங்க. ஆனா, படிக்க வைக்கமாட்டாங்க. பிழைப்புத்தான் அவர்களுக்கு பிரதானம். படிப்பு ரெண்டாம்பட்சம்தான். போன வருஷம் வரைக்கும் இதுதான் நிலைமை. ஆனா, இந்த வருஷம் ஒன்றாம் வகுப்பில் சாரை சாரையாய் பிள்ளைகளைக் கொண்டுவந்து சேர்த்தி ருக்கிறார்கள். காரணம் படிப்பு மீது அவர்களுக்கு வந்திருக்கும் ஆர்வம். அதற்கு காரணம் எங்க ஜெய...

மோடிக்கு ஆதரவு தரும் சல்மான் கானின் தந்தை! தினமலர் செய்தி!

Image
பாரதிய ஜனதா கட்சி சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி, மோடிக்கு எதிராக, மதவாதி என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளது. அதை தூள் தூளாக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான், மோடிக்கு ஆதரவாக அளித்த பேட்டி, "பேஸ்புக்'கில் அதிகளவு பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. "மோடியை எதிர்க்கும், "மேதாவிகள்' நிச்சயம் இதை படிக்க வேண்டும்' என்ற தலைப்பில், அவரது பேட்டி பகிரப்பட்டுள்ளது. அவரது பேட்டி வருமாறு: 1. குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான, மும்பை கலவரம் நடந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் யார் என, யாருக்காவது நினைவிருக்கிறதா? 2. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மலியானா, மீரட், பாகல்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது, யார் முதல்வராக இருந்தார் என, நினைவிருக்கிறதா? 3. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன், பெரிய கலவரங்கள் நடந்த போது, முதல்வராக இருந்தவர்கள் யார் யார் என்பது, இப்போது சொல்லப்படுகிறதா? 4. டில்லியில், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான க...

தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை! மருத்துவர்கள் திணறல்!

Image
சென்னை : தானாக தீப்பிடித்து எரியும் அதிசய குழந்தை சென்னை , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான் . விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே உள்ள டி . பரஸ்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (26). இவரது மனைவி ராஜேஸ்வரி (23). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது . இந்த நிலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று இந்த தம்பதிக்கு பிறந்தது . அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் சூட்டினர் . சரியாக 8 ம் நாளில் குழந்தையின் உடலில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது . இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . தீ பிடித்த குழந்தை பச்சிளங் குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன . சில நாட்களில் அந்த காயம் ஆறிப்போனது . ஒருமுறையல்ல இருமுறையல்ல பிறந்து இரண்டரை மாதத்தில் பலமுறை குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரியவே காரணம் தெரியாத பெற்றோர் கதறித்துடித்தனர் . பல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு ச...