அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்!

அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்!


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாமன்னர் ஔரங்கசீப் சக்ரவர்த்தி அவர்கள் தர்காவில் முன் வரிசையில் நின்று தொழுவது வழக்கம் அந்த வெள்ளிக்கிழமை அன்று மாமன்னர் வர சில நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்டது.

மன்னர் வந்துவிடட்டும் என்று சில நிமிடங்கள் தொழுகையை முஅஜ்ஜினும், இமாமும் தாமதம் செய்தனர். அவசரமாக வந்து தொழுகையில் கலந்துகொண்டார் சக்ரவர்த்தி ஔரங்க சீப்.

தொழுகை முடிந்ததும் அந்த முஅஜ்ஜினையும், இமாமையும் வேலை நீக்கம் செய்தார் ஔரங்கசீப். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைத்தது.
ஒரு சிறு நிலப்பரப்பை சொற்பகாலம் ஆளப்போகும் அரசனுக்குப் பயந்து அண்ட சராசர நிலங்களையும் நிரந்தரமாக ஆளும் அந்த பேரரசனான கடவுளை வணங்க தாமதம் செய்தார்கள். இது குற்றம் அல்லவா? என்று கர்ஜித்தார் ஔரங்கசீப்.


இன்று!

     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி வெற்றியாண்டவர் கோயிலில் அமைச்சர் வருவதற்கு முன்பாகவே நடத்தியதற்காக சிவாச்சாரியார் கண்ணப்பன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலை திருப்பணி செய்ய 25 லட்சம் ரூபாய் கிடைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரை செய்தாராம்.  திங்கள்கிழமை குடமுழுக்கின் போது அமைச்சர் வர காலதாமதம் ஆகிய நிலையில் திருப்பணிக்குழுவில் இருந்த திமுக பிரமுகர் மற்றும் குழுவினர் குடமுழுக்கு நடத்தும்படி கூறியுள்ளனர். முதலில் தயங்கியபோதும் வானில் கருடன் வட்டமிடவும், நல்ல நேரம் கடக்கவும் செய்ததால் சிவாச்சாரியார் குடமுழுக்கு செய்து விட்டார். அதன்பின் அமைச்சர் வந்தார். அவரிடம் அதிமுகவினர் புகார் செய்ததும் சிவாச்சாரியாரை அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

அமைச்சர் பெரியவரா? ஆண்டவர் பெரியவரா? நீங்களே சொல்லுங்கள்!

டிஸ்கி} நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்றமையால் பதிவு எதுவும் வெளியிடவில்லை! அதுபற்றிய தனிப்பதிவு விரைவில். மேலே கொடுத்துள்ள குட்டிக்கதையும் அங்கு வாங்கிய புத்தகம் ஒன்றில் படித்ததுதான்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

 1. அரசியல்..... எதையும் செய்வார்கள் அரசியல்வாதிகள்!

  ReplyDelete
 2. சகோ..!
  பகிர்வுக்கு நன்றி!

  சிறு விளக்கம் நீங்கள் ''தர்கா '' குறிப்பிட்டு இ௫ந்தது.தவறாக இ௫க்கும் ,அது மசூதியாக இ௫க்கும்.காரணம் தர்காக்கள் இறை நேசர்களின் சமாதிகள். அங்கு தொழுகைகள் நடக்காது.

  ReplyDelete
 3. ஆண்டவனை சஸ்பெண்ட் செய்யவில்லை அல்லவா?
  அண்டவன் தப்பித்தான்

  ReplyDelete
 4. எங்கும் அரசியல் சாக்கடை புகுந்து விட்டது . இதில் கோவில் மட்டும் நன்றாக இருந்தால் எப்படி. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சொன்ன மாதிரி ஆண்டவன் தப்பித்தான்.

  ReplyDelete
 5. நான் தங்களின் தமிழ் அறிவு பதிவை இனிமேல் தான் படிக்க வேண்டும். படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்

  ReplyDelete
 6. இப்ப இருக்குற நிலமையில் அமைச்சர்தான் பெரியவர்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2