புகைப்பட ஹைக்கூ 65

புகைப்பட ஹைக்கூ 65


 1.  சிதறிய மணிகள்
சேர்ந்தன மலையாய்!
நெற்குவியல்!

 1. விளையுள்
விளைவித்தது!
மகிழ்ச்சி!

 1. தூசு போக்கியதும்
காசு ஆனது
நெல்மணி!

 1. வியர்வை முத்துக்கள்
சிந்தியதால் விளைந்தது
நெல்மணி!

 1. தூற்றியதும்
கிடைத்தது பரிசில்!
நெல்மணி!

 1. நெல் வளைந்ததும்
நிமிர்ந்தது உழவன்
வாழ்க்கை!

 1. புது நெல்லு
பூஜித்தது
   பூமியை!

 1. நலிந்தாலும்
ஒளிர்ந்தது
   நெல்மணி!

 1. அறுவடை ஆனதும்
ஆகாயத்தில் பறந்தது
நெல்மணி!

 1. பசி தீர்க்க
பயணித்துவந்தது
   நெல்மணிகள்!

 1. புகுந்தவீடு செல்ல
புறப்பட்டது
   நெல்மணிகள்!

 1. காற்றில் குளித்ததும்
கலைந்தது அழுக்கு!
நெல்மணிகள்!

 1. பாரம் தீர்க்க
அம்பாரமாயின
   நெல்மணிகள்!

 1. தூற்ற தூற்ற
பொலிந்தது
   நெல்மணி!

 1. பெண்மகளை
சூழ்ந்தன பொண்மகள்கள்
நெல்மணி!

 1. நலியும் விவசாயம்!
நம்பிக்கை ஊட்டியது!
விளைச்சல்!

 1. மேய்ச்சல் நிலங்கள்!
ஓய்ச்சல் எடுத்தன
 நெல்மணிகள்!

18.வறண்ட முகத்தில்
   மலர்ச்சியை தந்தது!
   விளைச்சல்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


 
  

Comments

 1. அனைத்தும் அருமை... ரசனைக்கு பாராட்டுக்கள்...

  தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நெல் வளைந்ததும்
  நிமிர்ந்தது உழவன்
  வாழ்க்கை!/// அனைத்தும் சிறப்பு... பொங்கல் தின வாழ்த்துக்கள் சுரேஷ் !

  ReplyDelete
 3. ரசனையான கவிதை சூப்பர்ப்....!

  ReplyDelete
 4. வித்தியாசமான அருமையான சிறப்புக் கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்


  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சகோதரருக்கு வணக்கம்
  அனைத்தும் ரசிக்கும் படியும் ரசனையாகவும் உள்ளது கண்டு வெகுவாக மகிழ்ந்தேன். சிறப்பான வரிகள் சகோதரர்..
  ---------
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

  ReplyDelete
 6. அருமையான கைக்கூக்களுக்கு பாராட்டுக்களும் மனம் இனிக்கும்
  தைப் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .உங்களுக்கும்
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .

  ReplyDelete
 7. அருமையான ஹைக்கூ.

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2