அடுத்தவங்க சந்தோஷத்தை ரசிச்சால் என்ன ஆகும்? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.தலைவர் குடிபோதையில பேசுறார்ன்னு எதை வச்சு சொல்றே?
வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன்,நகைக்கடன் வழங்குவதுபோல நேர்த்திக்கடனும் வழங்க வங்கிகள் முன்வரவேண்டும்னு பேசுறாரே!
                           அ. பேச்சியப்பன்.

2.என்னய்யா இது யசோதாவை அறிமுகப்படுத்தறோம் படுத்தறோம்கிறாங்க இன்னும் கண்ணுல காட்டமாட்டேங்கிறாங்களே!
 ஐயோ தலைவரே… அது யசோதா இல்ல… மசோதா!
                        சி.சாமிநாதன்.

3.      வேலைவாய்ப்பு முகாம்னு சொன்னீங்க… இங்கே சர்க்கரைநோய்கண்டறியும் முகாம் நடத்துறாங்க!
 பெரிய ஸ்விட் ஸ்டாலுக்கு, சர்க்கரை நோய் உள்ளவங்களா பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க!
                          ஆர். அமுதவல்லி.

4.      மூன்றாம் உலகப்போர் வருமான்னு தலைவர்கிட்ட கேட்டது தப்பாப் போச்சா… ஏன்?
அப்படின்னா ஏற்கனவே ரெண்டு உலகம் இருந்ததான்னு கேட்கறாரு!
                      பா.ஜெயக்குமார்.

5.ஊரார் புள்ளைய  ‘ஊட்டி’ வளர்த்தால் என்ற பழமொழியை, ஊரார் பிள்ளையை ‘வேலூர்’ வளர்த்தால்னு மாத்திச் சொல்றாரே… ஏன்?
தலைவருக்கு குளிர் பிரதேசம்னா ஒத்துக்காது!
           வி.சி.கிருஷ்ணரத்னம்.

6.தலைவருக்கு சுத்தமா பொது அறிவே கிடையாதுன்னு எதைவச்சு சொல்றே?
ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததை பார்த்து,அடடா… வெடிக்காம புஸ்வாணமா போச்சேன்னு வருத்தப்படுறார்!
                   த.சரவணக்குமார்.


7. நம் மன்னரை சுத்த அல்பம்கிறியே… ஏன்?
  சுயம்வரத்துக்கு நேரில் வந்த இளவரசர்களிடமெல்லாம் பார்க்கிங் கட்டணம் வசூலிச்சிட்டாரே!
              பி.ஜி.பி.இசக்கி

8.ரெண்டு பாகவதருக்கும் எப்பவும் போட்டின்னு எப்படி சொல்றே?
 இவரு வில்லுப்பாட்டு பாடினா, அவரு புதுசா அம்பு பாட்டுன்னு பாடறாரே!
                     ஆனந்த் சீனிவாசன்.

9. அந்த பேப்பர் கடைக்காரர் எதுக்காக உன்னை அடிச்சாரு!
   ‘புளங்’காகிதம் ஒரு குயர் கொடுங்கன்னு கேட்டேன்!
                         பொ.பிரபா.

10. ஊதாரி மன்னனோட பராமரிப்புல இருந்த கோவில் போலிருக்கு இது!
   எப்படி சொல்றே?
கோவிலோட ரகசிய அறைகள் முழுக்க கடன் பத்திரங்களா இருக்கே!
                      பெ.பாண்டியன்.


11. தலைவர் திடீர்னு டிக்‌ஷனரி கேட்கறாரே… ஏன்?
    அர்த்த சாஸ்திரம் படிக்க போறாராம்!
                         ஜிசா.

12.தலைவரோட மூத்த சம்சாரம் ரொம்ப குண்டாமே!
அதுக்காக ரெய்ட் வந்தப்போ அசையா சொத்து லிஸ்ட்ல அவரை சி.பி.ஐ சேர்க்கறதெல்லாம் ரொம்ப ஓவர்!
                       பி.ஜி.பி.இசக்கி.

 13.நம்ம தலைவர் பஸ்ஸிலே ஏறினதும் உடனே இறங்கிட்டாரே… ஏன்?
பஸ் படியிலே காலை வச்சதும், ‘சீக்கிரம் உள்ளே போங்க’ன்னு கண்டக்டர் அபசகுனமா சொல்லிட்டாராம்!
                         ஆர்.லதா.

14.தலைவர் கூலிப்படையை வேண்டாம்னு சொல்லிட்டாராம்!
ஆமா! நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பணக்காரப்படைக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டாராம்!
                  -கருணை வள்ளல்.

 15.அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும் அதை நான் பார்க்கணும்னு அவரு அடிக்கடி சொல்லும்போதே நான் சந்தேகப்பட்டேன்… அது சரியாப் போச்சு!
ஏன்… என்னாச்சு?
பக்கத்து வீட்டு பெட்ரூமை எட்டிப்பார்த்தார்னு போலீஸ் அவரை கைது செய்துட்டு போறாங்களே!
                பொன்.ராஜ்குமார்.

16.தூக்கை ரத்து செய்யணும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா… ஏன்?
 தூக்குக்கு பதிலா வேறு என்ன பாத்திரம் அறிமுகப்படுத்தலாம்னு கேட்கறாரு!
                     பா.ஜெயக்குமார்.

 17.தலைவரோட தமிழ்பற்று தாறுமாறா போயிருச்சு!
எப்படி?
ஈரோடுங்கிற ஊர் பேரை ஈசாலைன்னு மாத்தணும்னு சொல்றாரே!
                 அ.பேச்சியப்பன்.

18.  என்கிட்ட வர்ற பேஷண்ட்டுகளுக்கெல்லாம் பிரஷர் எகிறிடுதே எப்படி சிஸ்டர்?
  முப்பதே நாட்களில் ஆபரேஷன் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற புத்தகத்தை மறைச்சுவையுங்க டாக்டர்!
                   டி.சேகர்.

19.அந்த வீட்டு ஓன்ர் ரொம்ப ஆச்சாரமானவர்னு எப்படி சொல்ற?
    மொட்டை மாடிக்கு சந்தனம் பூசி வச்சிருக்கார் பாரேன்!
             வைகை ஆறுமுகம்.

   20. தலைவர் ரொம்ப நேர்மையானவரா... எப்படி?
    சிறையில ஒரு மாசம் தான் இருந்ததுக்கு எவ்வளவு வாடகை கொடுக்கணும்னு கேட்கறாரே!
                             பெ.பாண்டியன்.

நன்றி: தினமலர் வாரமலர் 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஹா... ஹா... அனைத்தும் கலக்கல்... தொகுப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 2. அத்தனையும் சிரிப்பு சரவெடிகள்
  அருமையான தொகுப்பு நன்றி நண்பரே

  ReplyDelete
 3. அருமையான தொகுப்பு... இன்றைக்கு நல்லதொரு ஆரம்பம்... :)

  ReplyDelete
 4. நல்ல தொகுப்பு. ரசித்தேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2