புகைப்பட ஹைக்கூ 64
புகைப்பட
ஹைக்கூ 64
பொதி
சுமந்தது
வானம்
மேகங்கள்!
சிதறிய
பஞ்சுகள்
சிறைபிடித்தது
வானம்!
மேகங்கள்!
நீலத்திரையில்
வெள்ளை
யானைகள்!
மேகங்கள்!
பனி
பூத்தவானம்
குளிரவில்லை!
மேகங்கள்!
உலா
வந்தன மேகங்கள்
வரவில்லை!
நிலா!
வெளுத்த
மேகங்கள்
கொளுத்தியது
வெயில்!
கறைபடா
மேகங்கள்
தீர்க்கவில்லை
பூமியின்
பசி!
வெள்ளை
மேகம் மூடியும்
வெளிப்பட்டது
வானம்!
மேகக்குன்றுகள்
மோதியும்
கரையவில்லை
வானம்!
திரைகடலுக்கு
திரையிட்டன
மேகங்கள்!
அன்னக்
குவியல்
ஆற்றவில்லை
பசி!
மேகங்கள்!
வெள்ளித்திரையை
கிழித்துவந்தது
வெய்யோன்
மேகங்கள்!
காவலன்
வந்ததும்
கலைந்தன
மேகங்கள்
சூரியன்!
பஞ்சாய்
பறந்தன
போன்சாய்
மேகங்கள்!
அலைபாய்ந்த
மேகங்கள்
அடக்கிவிட்டது
வானம்!
நன்றி: படம் உதவி: தினமலர்
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
திரைகடலுக்கு திரையிட்டன மேகக் கூட்டத்தை ரொம்பவே ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீலத்திரையில்
ReplyDeleteவெள்ளை யானைகள்!
மேகங்கள்!..........அருமை
அழகான வரிகள் .. அருமை
ReplyDelete//நீலத்திரையில்
வெள்ளை யானைகள்!
//
நல்ல உவமை
அருமையான கவிதைகள். பாராட்டுகள்.
ReplyDeleteஎனக்கு வெறும் மேகக் கூட்டமாய் தெரிவதில் உங்களுக்கு இவ்வளவு கவிதைத் தெரிவதை ரசித்தேன் !
ReplyDeleteஅழகான வரிகள்
ReplyDeleteiyarkain varunanil ungal kavithai arumai
ReplyDelete