Posts

Showing posts from February, 2015

சாலி வாகனனும் விக்கிரமாதித்தனும்! பாப்பாமலர்!

Image
  முன்னொரு காலத்தில் புரந்தரபுரி என்றொரு நகரம் இருந்தது. அங்கே மிகப்பெரிய வசதி படைத்த செல்வந்தனான வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு நான்கு மகன்கள். அவர் முதுமை எய்தி இறக்கும் தருவாயில் தன் மகன்களை அழைத்து,                      “ மைந்தர்களே! என்னுடைய மரணத்திற்கு பின் உங்களுக்குள் சச்சரவு வரக்கூடாது. என்னுடைய சொத்துக்களை நீங்கள் பாகம் பிரித்துக் கொள்ள ஏதுவாக நான்கு பாகங்களாக பிரித்து என்னுடைய கட்டிலின் கீழே நான்கு அடி ஆழத்தில் நான்கு கால்களின் அடியில் புதைத்து வைத்து உள்ளேன். பெரியவனிலிருந்து சிறியவன் வரை முறைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.      சிலநாட்களில் வியாபாரி இறந்துவிட்டார். அவர் சொல்லியபடி  கட்டிலின் அடியில் தோண்டியபோது நான்கு கால்களின் அடியிலும் நான்கு செப்புக் குடங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த குடங்களில் பொன்னோ நகையோ வைர வைடூரியங்களோ எதுவும் இல்லை. முதல் குடத்தில் மண்ணும் இரண்டாவதில் வைக்கோலும் மூன்றாவதில் எலும்புத்துண்டுகளும் நான்காவதில் கரியும் இருந்தன.     இதை வைத்துக் கொண்டு எப்படி பாகம் பிரிப்பது என்று அவர்களுக்குப் புரியவி

மசால் தோசை 38 ரூபாய்! டேஸ்ட் ரொம்ப சூப்பர்!

Image
    எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்களின் எழுத்துக்களை விகடன் மற்றும் வெகுஜன ஏடுகளில் படித்து இருந்தாலும்  இணையத்தில் அவர் எழுதுவது எனக்கு தெரியாமல் இருந்தது. சென்ற வருடத்தில் மணிமாறன் அவர்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது நிசப்தம் தளம் பற்றி சொல்லியிருந்தார். அதன் பின்னர் அந்த தளத்தினை தொடர ஆரம்பித்தேன்.       அதற்கு முன்னரே  அவரது சிறுகதை தொகுப்பான லிண்ட்ஸே டேவன் போர்ட் w/o மாரியப்பன் பற்றி வலையில் பரவலாக பேச்சு இருந்தது. சென்ற வருட புத்தகக் கண்காட்சியில் (2013) இந்த நூல் வாங்கலாம் என்று நினைத்தும் அப்போதைய பற்றாக்குறை நிதியினால் வாங்கவில்லை.          வா. மணிகண்டன் கதைகள் கவிதைகள் படித்திருந்த எனக்கு நிசப்தம் தளத்தில் எழுதும் பத்தி எழுத்துக்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தன. நானும் அதே போல சுவாரஸ்யமாக எழுத வேண்டும் என்ற உணர்வையும் தந்தன. நிசப்தத்தில் இந்த புத்தக வெளியீடு பற்றி சொல்லி இருந்த போதே புத்தகம் வாங்க நினைத்திருந்தேன். புத்தக சந்தையில் வாங்கியும் விட்டேன். முதலில் இது சிறுகதைத் தொகுப்பாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வாங்கி படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது. நிசப்

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 31

Image
   கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 31 மாப்பிள்ளை எப்பவும் முறுக்கோட இருப்பாருன்னு சொன்னீங்களே ரொம்ப கோபக்காரரா? நீங்க வேற எப்பவும் முறுக்கை சாப்பிட்டுகிட்டு இருப்பார்னு சொன்னேன்! என் மனைவிக்கு கோவம் வந்துருச்சுன்னா வீட்டுல இருக்கிற எல்லா பொருளையும் தூக்கி வெளியே எறிஞ்சிருவா! பரவாயில்லையே என் மனைவிக்கு கோவம் வந்துச்சுன்னா என்னையே தூக்கி வெளியே எறிஞ்சிருவா! சீட்டு கம்பெனி நடத்தறவனை காதலிச்சியே என்ன ஆச்சுடி? சீட்ட கலைக்கிறது மாதிரி என்னையும் கலைக்க வச்சு சீட் பண்ணிட்டு போயிட்டாண்டி! எதிரியிடம் மன்னரின் பேச்சு எடுபடவில்லையாமே! எதிரியை பார்த்ததும் மன்னருக்கு மூச்சே வரவில்லை! பேச்சு எப்படி எடுபடும்? தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே? உண்டியல் குலுக்கி முடிச்சதும் வசூல்ல இருந்து ஒரு அஞ்சு ரூபா காயினை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிறாரே! அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே? எனக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணியிருக்குன்னு சொன்னா எந்த ஊரு பைபாஸ்லன்னு கேக்கறாரே! இன்று அரசவையில் ஒரே அரட்டையாக இருந்தது! அப்புறம்? அப்புறம் என்ன? அ

நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா?

நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா?   வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கொஞ்சம் நெளிவு சுளிவு தேவை என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படியே முறுக்கிக்கிட்டு நில்லாம கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு கொடுத்தாத்தாம்பா வாழ்க்கை என்பார்கள்.      வீடாகட்டும் அலுவலகம் ஆகட்டும் எல்லாவற்றிலும் சட்டத்திட்டங்களை அப்படியே பின்பற்றி அப்படியே நடந்துகொள்ளவேண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் வாழ்க்கை நரகம்தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப்போவதில் தான் இன்பம் இருக்கிறது.    இதற்காக லஞ்சத்தை ஆதரிக்கிறேன்! என்று பொருள் அல்ல! சிவாஜி படத்தில் ரஜினி எல்லாவற்றையும் சட்டப்படி ஒழுங்காக வைத்துக் கொண்டு கல்லூரி ஆரம்பிக்க முயற்சித்தால் நடக்காது. அப்புறம் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து வேலையை முடிப்பார். இப்படி ஆகிவிட்டது நாட்டின் நிலை.      ஒரு கதை ஒன்றை நான் ப்ளஸ் ஒன் படிக்கையில் படித்தேன். ஆங்கிலக் கதை. ஏ.ஜி. கார்டினர் எழுதியது. ஒரு முன்னிரவு நேரம் குளிர் காதை அடைக்கும் சமயத்தில் அந்த ஊரின் கடைசி பேருந்து கிளம்பும். இரண்டு மாடிகள் கொண்ட பேருந்து அது. கண்டக்டர் அனைவருக்கும் டிக்க

டிப்ஸ்!

Image
டிப்ஸ்! நகரின் அந்த பெரிய உணவு விடுதியின் முன் டாடா இன்னோவா கார் வந்து நின்றது. செக்யூரிட்டி வந்து பார்க் செய்ய உதவ பார்க் செய்துவிட்டு உணவு விடுதியினுள் நண்பருடன் நுழைந்தார் வேதநாயகம்.    வேதநாயகம் வளர்ந்து வரும் தொழிலதிபர். தூய்மையான வெள்ளை வேட்டிச்சட்டை மடிப்பு கலையாமல் அணிந்து நெற்றியில் சந்தனப்பொட்டு கமகமக்கும்  செண்ட் மணத்துடன் உள்ளே நுழையும் போதே உணவு விடுதியின் சிப்பந்திகள் முகம் மலர வரவேற்று இருக்கையில் அமர்த்தினர்.       சூப்பர்வைசர்ஓடிவந்து,ஓர்  சர்வரை அழைத்து ஐயாவுக்கு என்ன வேணுமோ கேட்டு கிட்ட இருந்து கவனி! என்று சொல்லிவிட்டு வணக்கம் வைத்துவிட்டு நகர வேதநாயகம் வேர்வையை துடைத்தபடி மேலே அண்ணாந்தார். உடனே அங்கிருந்த மின்விசிறி சுழலவிடப்பட்டது.     வேதநாயகம் ஒவ்வொன்றாய் கேட்க ஓடிவந்து பறிமாறினார்  சர்வர். கூடவே நின்று கவனித்துக்கொண்டார். நண்பரும் தேவைப்பட்டதைக் கேட்டுச் சாப்பிட்டார்.       சர்வர் பளபளக்கும் அட்டையினுள்  பில்லினைகொண்டுவந்து வேதநாயகம் முன் வைத்து காத்திருந்தான். வேதநாயகம் பளபளக்கும் ஆயிரம் ரூபாய்த் தாளை உள்ளே வைத்து அனுப்ப மீதம் சில்லறை வந்தத

புகைப்பட ஹைக்கூ 80

Image
புகைப்பட ஹைக்கூ 80 போர் ஆனது கார்! வைக்கோல் சுமை! மாடுமகிழ பொதிசுமந்தது மகிழுந்து! விதிகள் மாறியதால் விதிமீறல் பொதிசுமந்த கார்! சுகமான சுமை! சொகுசான பயணம்! வைக்கோல்! ஜீவனத்திற்கு பயணமானது தீவனம்! காரில் வைக்கோல்! சொகுசுப்பயணம் சுமைக்கூலி அதிகம்! வைக்கோல்! புடவையணிந்த வெளிநாட்டு மங்கை! காரில் வைக்கோல்! இடம் மாறி ஏறியது தடம் மாறவில்லை! வைக்கோல்! ஆடுகால்பணம்! சுமைக்கூலி முக்கால்பணம்! வைக்கோல்! கால்நடைகள் சுமந்தது கார் சுமக்கிறது காலமாற்றம்! விளைச்சல் வீழ்ந்ததும் உயரத்தில் அமர்ந்தது வைக்கோல்! முடிசூடிய கார் மொய் கேட்பாரோ போலீஸ்கார்? வாழ்க்கைப்போராட்டம் பொதிசுமந்தது கார்! சுமைகளை இறக்க சுமை சுமந்தது கார்! உருமாறவில்லை! பொருள்மாறியது! சுமையுந்தான சீருந்து! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

காதல் போயின் காதல்! என்னுடைய பார்வையில்!

Image
காதல் போயின் காதல்! என்னுடைய பார்வையில்! கோவை ஆவி தயாரித்து ஷைனிங் ஸ்டார் சீனுவின் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள காதல் போயின் காதல் குறும்படத்தைப் பற்றி முகநூலிலும் வலைப்பூக்களிலும் படப்பிடிப்பு துவக்க நாளில் இருந்தே பரபரப்பாக பல நண்பர்கள் பதிவுகள் செய்து பேசிக்கொண்டாலும் நான் அமைதியாகவே இருந்தேன்.      பொதுவாகவே எனக்கு சினிமா அறிவும் ரசனையும் கொஞ்சம் குறைவுதான். கொஞ்சம் என்ன நிறைய என்றுகூடச் சொல்லலாம். அதனால் எந்த படமாக இருந்தாலும் முதல் ஆளாய் முட்டி மோதிப் பார்ப்பதில் எல்லாம் விருப்பம் இல்லாதவன். பதிவுலக நண்பர்கள் நடித்த இந்த படத்தைக் கூட இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை!     காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டேன். பல் துலக்கி காபியும் அருந்தியாகிவிட்டது. என்ன செய்யலாம்? மொபைலை எடுத்து நெட்டை ஆன் செய்தேன். முந்தின இரவில் போட்ட பதிவுக்கு என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கிறது என்று ஜிமெயில் போய் பார்ப்பது என் வழக்கம். அதன்படி ஜிமெயில் சென்று பார்த்தேன் என் கிரிக்கெட் பதிவிற்கு மொத்தம் மூன்றே கமெண்ட் மட்டுமே வந்திருந்தது எனக்கு ஏமாற்றம் தந்தது. ச்சே! இந

உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி!

Image
உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி! யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் உலகக் கோப்பையில் இந்தியாவின் இத்தகைய ஆட்டத்தை! தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்தி இருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்து இருக்கிறது.       ஆரம்பகாலத்தில் அதாவது 1987ல் இருந்து 2003 வரை கிரிக்கெட் வெறியனாக இருந்த என்னை கிரிக்கெட் சூதாட்டங்களும் ஐ.பி.எல் அரசியல்களும் கிரிக்கெட்டின் உள் அரசியல்களும் கொஞ்சம் கசப்படையச் செய்து கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைத்தன.          2011ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளைக் கூட காலிறுதியில் இருந்துதான் பார்த்தேன்! மற்றவற்றை செய்தித்தாளில் படித்து முடிவு தெரிந்து கொண்டதோடு சரி. அந்த வருடம்தான் வலைப்பூ தொடங்கி இருந்தேன். அப்போது இதைப்பற்றி எதுவும் எழுதவும் இல்லை.    இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏன் கடந்த ஆண்டு இறுதி முதலே இந்திய அணியின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! தொடர்ச்சியான

சுட்டி கணேஷ்! (பகுதி 1) பாப்பா மலர்!

Image
     சுட்டி கணேஷ்! (பகுதி 1)  பாப்பா மலர்! தாளபுரி என்றொரு நாடு! அதை மன்னர் ஆதித்யவர்மா ஆண்டு வந்தார். அந்த நாட்டைச்சுற்றி ஒரு ஏரி அமைந்து இருந்தது. ஏரியின் நடுவில் அமைந்த கோட்டையில் ராஜாவின் அரண்மனை இருந்தது. அந்த ஏரியின் நீர் சுவையாக இருக்கும். தெள்ளத்தெளிவாக பளிங்கு போல் ஓடிக்கொண்டிருக்கும் நீரின் சுவையே அலாதி. அந்த நீரை மக்கள் குடிநீராகவும் பயன்படுத்தினார்கள். அந்த ஏரியின் நீரை பாசனத்திற்கு பயன் படுத்தி விவசாயமும் செய்து வந்தார்கள்.                     அந்த ஏரிக்கு நீர் அந்த நாட்டில் இருந்த ஓர் மலையில் இருந்த வற்றாத அருவி மூலம் வந்தது. அந்த அருவியை சுற்றியிருந்த மூலிகை மரங்கள் அந்த ஏரியின் நீரை சுவை கூட்டின.      தாளபுரியின்  ராஜ வீதியின் கடைசியில் ஒரு சிறுவன் வசித்து வந்தான். அவன் பெயர் கணேஷ். ரொம்பவும் சுட்டியான சிறுவன் வயசு பத்துதான் இருக்கும். மிகுந்த பலசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.  அவனோட செல்லப் பிராணி  மூஷிக்! என்ன முழிக்கிறீங்க? அது ஒரு சுண்டெலிதான்.  அவனோட  இன்னும் ரெண்டு கேர்ள் பிரண்ட்ஸ் சித்தி, புத்தி. அது மட்டும் இல்லாமா அவனோட குட்டி  தம்பி ஷண்ணு!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! சிறைபிடித்தது விலங்கிடவில்லை! பூமியில் நிழல்! உயர உயர இறங்கிவந்தது நிழல்! சூரியன்! எச்சரிக்கை ஒலி! பாதுகாத்தது திருடனை! போலீஸ் ஸைரன்! வலுவிழந்தாலும் வலுகூட்டியது! உரமான சறுகுகள்! அழுக்கை விரட்ட அழுக்கானது துடைப்பம்! பேசாத மொழிக்கு ஆயிரம் அர்த்தங்கள்! குழந்தையின் பேச்சு! பிம்பங்களை பிரதிபலித்து தன்னை இழக்கிறது கண்ணாடி! மஞ்சள் பூசியதும் அழகாயின மரங்கள்! மாலைவெயில்! கல்லும் மண்ணும் கைப்பக்குவத்தில் உணவாகின! குழந்தைச் சமையல்! அணிவகுப்பில் கலவரம்! கலைந்தன எறும்புகள்! உடைபட்டதும் அடித்துச்செல்லப்பட்டது தன்னம்பிக்கை! அடித்ததும் போர்த்திக்கொண்டார்கள்! குளிர்! உள்ளம் உருகியதும் விழியில் சிந்துகிறது! கண்ணீர்! குளுமை அணைத்ததும் போர்த்திக்கொண்டது பூமி! இருட்டு! கருப்புச்சேலையில் கண்ணாடி சரிகைகள்! இரவில் சாலை! ஒளி மறைகையில் ஓலமிட்டன பறவைகள்! மாலைப்பொழுது! ஒளிந்து விளையாடினாலும் ஒளிவு மறைவில்லை! குழந்தைகள்! கற்பனைசிறகுகள்!