தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


சிறைபிடித்தது
விலங்கிடவில்லை!
பூமியில் நிழல்!

உயர உயர
இறங்கிவந்தது நிழல்!
சூரியன்!

எச்சரிக்கை ஒலி!
பாதுகாத்தது திருடனை!
போலீஸ் ஸைரன்!

வலுவிழந்தாலும்
வலுகூட்டியது!
உரமான சறுகுகள்!

அழுக்கை விரட்ட
அழுக்கானது
துடைப்பம்!


பேசாத மொழிக்கு
ஆயிரம் அர்த்தங்கள்!
குழந்தையின் பேச்சு!

பிம்பங்களை
பிரதிபலித்து தன்னை இழக்கிறது
கண்ணாடி!


மஞ்சள் பூசியதும்
அழகாயின மரங்கள்!
மாலைவெயில்!

கல்லும் மண்ணும்
கைப்பக்குவத்தில் உணவாகின!
குழந்தைச் சமையல்!

அணிவகுப்பில்
கலவரம்!
கலைந்தன எறும்புகள்!

உடைபட்டதும்
அடித்துச்செல்லப்பட்டது
தன்னம்பிக்கை!

அடித்ததும்
போர்த்திக்கொண்டார்கள்!
குளிர்!

உள்ளம் உருகியதும்
விழியில் சிந்துகிறது!
கண்ணீர்!

குளுமை அணைத்ததும்
போர்த்திக்கொண்டது பூமி!
இருட்டு!

கருப்புச்சேலையில்
கண்ணாடி சரிகைகள்!
இரவில் சாலை!

ஒளி மறைகையில்
ஓலமிட்டன பறவைகள்!
மாலைப்பொழுது!


ஒளிந்து விளையாடினாலும்
ஒளிவு மறைவில்லை!
குழந்தைகள்!

கற்பனைசிறகுகள்!
கலையாது விரிகின்றன!
குழந்தைகள்!

அடித்துப்போட்டார்கள்!
அழகாய் வெளுத்தது!
வேட்டி!

பெற்றெடுக்க
உயிரைவிட்டனமரங்கள்!
காகிதம்!



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்

Comments

  1. அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உள்ளம் உருகியதும்
    விழியில் சிந்துகிறது
    கண்ணீர்
    மிகமிக அருமை நண்பரே..

    ReplyDelete
  3. அருமை..
    அருமை...

    ReplyDelete
  4. வேட்டி, இரவில் சாலை, சூரிய நிழல் ஆகியவற்றை அதிகமாய் ரசித்தேன்.

    ReplyDelete
  5. அழுக்கை விரட்ட
    அழுக்கானது
    துடைப்பம்!

    "ஆம் ஆத்மி" ஆகி விட்டீர் நண்பரே!

    ஆம் ஆத்மாவை தொட்ட சிறுகவி(ஹைக்கூ)

    ஆம் அனைத்தும் ஆனந்த ஆறு!

    அவை தரும்தளீர் சுரேஷ்க்கு நல்ல பேர்.

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  6. ரசித்தேன்... அனைத்தும் அருமை...

    ReplyDelete
  7. குழந்தைகளைப் பற்றிய வரிகள் மிகவும் அருமையாக உள்ளன.

    ReplyDelete
  8. அழுக்கை விரட்ட
    அழுக்கானது
    துடைப்பம்!

    உள்ளம் உருகியதும்
    விழியில் சிந்துகிறது
    கண்ணீர்

    ஒளிந்து விளையாடினாலும்
    ஒளிவு மறைவில்லை!
    குழந்தைகள்!

    அடித்துப்போட்டார்கள்!
    அழகாய் வெளுத்தது!
    வேட்டி!

    மிகவும் ரசித்தோம் இதை..... அனைத்தையும் ரசித்தோம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2