புகைப்பட ஹைக்கூ 80

புகைப்பட ஹைக்கூ 80

போர் ஆனது
கார்!
வைக்கோல் சுமை!

மாடுமகிழ
பொதிசுமந்தது
மகிழுந்து!

விதிகள் மாறியதால்
விதிமீறல்
பொதிசுமந்த கார்!

சுகமான சுமை!
சொகுசான பயணம்!
வைக்கோல்!

ஜீவனத்திற்கு
பயணமானது தீவனம்!
காரில் வைக்கோல்!

சொகுசுப்பயணம்
சுமைக்கூலி அதிகம்!
வைக்கோல்!

புடவையணிந்த
வெளிநாட்டு மங்கை!
காரில் வைக்கோல்!

இடம் மாறி ஏறியது
தடம் மாறவில்லை!
வைக்கோல்!

ஆடுகால்பணம்!
சுமைக்கூலி முக்கால்பணம்!
வைக்கோல்!

கால்நடைகள் சுமந்தது
கார் சுமக்கிறது
காலமாற்றம்!

விளைச்சல் வீழ்ந்ததும்
உயரத்தில் அமர்ந்தது
வைக்கோல்!

முடிசூடிய கார்
மொய் கேட்பாரோ
போலீஸ்கார்?

வாழ்க்கைப்போராட்டம்
பொதிசுமந்தது
கார்!

சுமைகளை இறக்க
சுமை சுமந்தது
கார்!

உருமாறவில்லை!
பொருள்மாறியது!
சுமையுந்தான சீருந்து!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ///மாடுமகிழ
  பொதிசுமந்தது
  மகிழுந்து!///
  அருமை நண்பரே
  அருமை

  ReplyDelete
 2. அருமை நண்பரே..... பாராட்டுகள்.

  ReplyDelete
 3. அருமை... ஒருநாள் அனைத்தும் உயரம் தான்...

  ReplyDelete
 4. வெகு அருமை சுரேஷ் நண்பரே! தீவணம் தீவனம் இல்லையோ?! இரு சுழி ன தானே வரும்....??!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! தீவனம் தான்! இப்போது திருத்திவிட்டேன்! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

   Delete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6