ஆம் ஆத்மியின் எழுச்சி! மற்ற கட்சிகளுக்கோர் பாடம்!
ஆம் ஆத்மியின் எழுச்சி! மற்ற
கட்சிகளுக்கோர் பாடம்!
2013 இறுதியில் டெல்லியில்
நடந்த தேர்தலில்தான் முதன் முதலில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. அப்போது பெற்ற
வாக்குகள் சதவீதத்தை இருமடங்காக இப்போது பெற்று காங்கிரஸை சுத்தமாகவும் பாஜகவை
எங்கோ ஓரு ஓரத்திலும் தள்ளிவைத்து ஆட்சி கட்டிலில் ஏறி இருக்கிறது ஆம் ஆத்மி.
அர்விந்த் கெஜ்ரிவால்! அன்னா ஹசாராவால்
கவரப்பட்டு அவரது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு பின்னர் தனித்து வந்து
கட்சி ஆரம்பித்தவர். ஊழலை எதிர்ப்பது ஜன் லோக்பால் போன்ற கொள்கைகளை அவரது
கட்சியின் ஆணி வேர்!
ஆனால் டெல்லியில் ஆட்சி முதலில் காங்கிரஸ்
ஆதரவுடன் அரியணை ஏறியபோது அவர்மீது ஓர் கறை படிந்தது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக
இருக்கும் காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் இவரது ஆட்சி எப்படி இருக்கும்
என்பதுதான் அந்த கேள்வி! அவரது குறுகிய கால ஆட்சியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை!
கேலிக்கூத்தாகவே இருந்தது. ஆனால் ஜன் லோக்பாலுக்கு ஆதரவு தராத காங்கிரஸ் கட்சியின்
ஆதரவை உதறி ஆட்சியை விட்டு விலகியபோதும் அவர் மீது எண்ணற்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஒரு நெருக்கடியான தருணத்தை கூட சந்திக்க
இயலாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் முடிவு எடுத்தது மக்கள் அவர் மீது வைத்த
நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது இனி அவர் அவ்வளவுதான் என்று எல்லோரும்
சொன்னார்கள்.
ஆனால் அவை அத்தனையையும் பொய்யாக்கி இன்று
மீண்டும் அரியணை ஏறி இருக்கிறார் கெஜ்ரிவால். இது அவரது க்ளீன் இமேஜால் வந்ததா?
இல்லை பா.ஜ மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் மாற்று இவரை விட்டால் வேறு இல்லை
என்றதால் வந்ததா என்ற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம். ஆனால் மக்களுக்கு புதிய
தலைவர்கள் மீது ஓர் நம்பிக்கை வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மியின் எழுச்சி மற்ற
மாநிலங்களில் ஓரளவு எதிரொலிக்கவே செய்கிறது. ஆம் ஆத்மியிலும் போட்டியிட்டு வென்ற
28 வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ் இருக்கிறது. மற்ற கட்சிகளில் இருந்து
பிரிந்து வந்தவர்கள் இதில் சேர்ந்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்கள் பழம்
தின்று கொட்டை போட்டவர்கள்.
இவர்கள் எப்படி இந்த கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துப்
போக போகிறார்கள் என்பதிலும் ஒவ்வொரு தேவைக்கும் மத்திய அரசை நாட வேண்டிய நிலையில்
இருக்கும் டெல்லி மாநில அரசின் முதல்வராக கெஜ்ரிவால் எப்படி இதை சமாளித்து ஆட்சி
செய்ய போகிறார் என்பது அவருக்குள்ள சவால்.
எதிரியே இருக்க கூடாது என்பது மோடியின்
கொள்கையாம்! இப்போது முதல் முறையாக அவர் ஓர் எதிரியை தலைநகரிலேயே சம்பாதித்து
கொண்டுள்ளார். அவரது நண்பரும் பா.ஜ தலைவருமான அமித் ஷாவால் இந்த முறை கெஜ்ரிவாலை
கட்டுப்படுத்த முடியாமல் போனது பெரும் பின்னடைவே!
மோடி அலை முதல் முறையாக விலகியுள்ளது
போலவும் தோன்றுகிறது! நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான்! பிற மதங்களை போல இந்து
மதத்தை வளர்க்கிறேன் என்று மூடத்தனங்களை செய்வது எல்லாம் வீண் வேலை! மதம் ஒன்றும்
குழந்தையல்ல வளர்ப்பதற்கு! எத்தனையோ மதங்கள்
இந்தியாவில் இந்து மதம் தோன்றியபின் பிறந்து வளர்ந்து தேய்ந்து
போய்விட்டிருக்கின்றன. பிறமதங்கள் வளர்ச்சியால் இந்துமதம் ஒன்றும் தேய்ந்து
போகாது. எத்தனை மதங்கள் வந்தாலும் அது தனித்து நிற்கும்.
மத சகிப்பு இல்லாமல் மதமாற்றம்
செய்கிறேன்! கிறிஸ்துவனை இந்துவாக்குகிறேன்! ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்!
கட்டாயம் இந்தி படியுங்கள்! சம்ஸ்கிருதம் படியுங்கள் என்று இப்படி தேவையில்லாத
உபத்திரவங்கள் செய்தது இந்த தோல்வியின் முதல் படி!
இந்து மதத்திற்கும் சம்ஸ்கிருதத்திற்கும்
இந்திக்கும் இப்படி குழந்தைகள் வசவசவென்று பெற்றுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்
என்று தெரியவில்லை! இப்படி மூடத்தனமாக நடந்துகொண்டால் வளர்ச்சி என்பது எப்படி
என்றும் புரியவில்லை!
இதற்கடுத்து மோடி அரசு இந்த பதினோறு
மாதங்களில் பெரிய மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை! மோடி நாட்டில்
இருந்ததை விட வெளிநாட்டில் இருந்ததுதான் அதிகம். அத்துடன் இருந்த சில
திட்டங்களையும் நிறுத்திவிட்டார். இருக்கும் திட்டங்களை நிறுத்தவும் பெயர்மாற்றம் செய்யவா ஓர் அரசு வேண்டும்? அவர் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்து போய்விட்டது! மக்களின் அடிப்படை தேவைகள் விலைவாசி குறைப்பு எதுவும் இல்லை! உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை!
டெல்லியின் மக்கள்
பிரச்சனைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை! கற்பழிப்பு சம்பவங்கள்! அடிப்படை வசதிகள் எதையும் இதற்கு முன்னர்
இருந்த அரசோ! மத்திய அரசோ முழுமையாக செய்து கொடுக்கவில்லை!
மூன்றாவது காரணம் காங்கிரஸ் ஊழல் கட்சி அதை
ஆதரிக்க கூடாது! பா.ஜ.க மதவாத கட்சி என்றாலும் மாற்று இல்லாததால் அதை
ஆதரித்தவர்கள் இப்போது மாற்றாக ஆம் ஆத்மியை நம்பி வாக்களித்துள்ளார்கள்.
இத்தனை தெளிவாக மக்கள் வாக்களித்துள்ளது
அடுத்த மாற்றத்திற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. மற்ற
மாநில ஊழல் கட்சிகள் வயிற்றில் இப்போதே புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள்
திருந்தாவிடில் மற்ற மாநிலங்களிலும் தீர்ப்புகள் திருத்தி எழுதப்படும் நாள்
விரைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
டிஸ்கி} 1.சென்ற பதிவில்
கர்ணணின் மனைவி பெயர் தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன். இப்போது தெரிந்து
கொண்டுவிட்டேன். அவர் மனைவி பெயர் பானுமதி என்ற பொன்னுருவி. அவரது தேசமும்
பொன்னுருவி.
2. இந்து தீவிரவியாதிகள் என்ற பதிவை
படித்துவிட்டு என்னை கண்டபடி ஏசி இருந்தார் ஒருவர். நன்றி! பதிவை முழுமையாக
படித்தாரோ இல்லையோ என்னை ஏசவேண்டும் என்பதே அவரது குறிக்கோள் என்று அவரது
பின்னூட்டத்தில் தெரிகிறது. நம்முடைய மதத்தை நான் எதிர்க்கவில்லை! அதில் உள்ள சில
மூடத்தனத்தையும் தீவிர வாதத்தையுமே எதிர்க்கிறேன்! பிற மதத்தில் மட்டும்
மூடத்தனங்கள் இல்லையா? தீவிரவாதம் இல்லையா? என்று கேட்கலாம்? நம் வீட்டில்
குறைவைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டை குறை கூற முடியாது இல்லையா? அதனால்தான்
நம்முடைய குறையை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று எழுதி உள்ளேன்.
நித்யானந்தாவிற்கும் இந்துமதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டிருந்தார்.
இந்த நித்தியானந்தா கிறித்துமதமா? முஸ்லீம் மதமா? இந்துதானே! அவர் ஒரு இந்து
சாமியார்?! இது போன்ற போலி மதவாதிகள் பெருகுவதால்தானே மதத்தின் பெயர்
கெட்டுப்போகிறது! மதத்தின் உண்மையான தத்துவங்கள் அழிந்து போகிறது! அவர் பின்னால்
காவடி எடுத்து போய் ஓர் கூட்டம் அழிந்து போகிறது. நான் குருக்கள் என்பதாலோ என்னவோ
காஞ்சிபுரம் குருக்களை பற்றி சொல்லி என்னை கோபப்படுத்த பார்த்தார். நான்
அதற்கெல்லாம் கோபம் அடையவில்லை! அவர்(ன்) தவறு செய்தான்! தண்டணை அனுபவிக்கிறான்.
எல்லா குருக்கள்களும் யோக்கியன்கள் என்று நானே ஒத்துக்கொள்ள மாட்டேன்! பலர் செய்யும்
அழிச்சாட்டியங்கள் எனக்கே தெரியும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல! அதற்காக
நான் குருக்களாக ஏன் பிறந்தேன் என்றும் வருத்தபடமாட்டேன்! இறைவனை பூஜிக்கும் ஓர்
வாய்ப்பு கிட்டியமைக்கு மகிழ்கிறேன்! நான் ஒரு அறை குறை என்று கண்டுபிடித்து
இருக்கிறார் மகிழ்ச்சி! இதை என்னுடைய சுயவிவரத்தில் நானே சொல்லி இருக்கிறேன்!
எல்லாம் தெரிந்தவனும் அல்ல! எதுவும் தெரியாதவனும் அல்ல என்று! இதை பின்னூட்ட பதிலாக இடலாம் என்றுதான்
நினைத்தேன்! பின்னர் தவிர்த்துவிட்டேன்! இதிலும் பதில் சொல்லாவிட்டால் என்னை கர்வி
என்று நினைத்து கொள்வார் அதற்காக இந்த பதில். நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வணக்கம் நண்பரே அருமையான அரசியல் அலசி இருக்கிறீர்கள்.
ReplyDeleteகருத்து சொல்வது அவர்களது உரிமை அதைப்போல எழுதவதும் உங்களது உரிமை தங்களது அறிவுக்கு நியாயமாக பட்டதை எழுதுவதில் தவறில்லை,
விவாதம் எழுந்தாலே அதில் விடயம் உள்ளசு என்று பொருள்.
நலம்தானே காண முடியவில்லையே.....
உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கருத்துகளை முன் வைப்பதையோ விவாதம் செய்வதையோ எதிர்க்கவில்லை! அதில் நியாயம் இருந்தால் ஏற்றுக்கொள்வேன்! அநாகரிகமான ஏசுதல்கள் தான் சில சமயம் மனதை பாதிக்கின்றன! நலம் தான்! குடும்ப பாரமும் கூடிவிட்டது! பணியிலும் கொஞ்சம் கூடுதல் சுமை! இப்போது நான் ஓய்வெடுக்கும் சமயம் மின்வெட்டும் சேர்ந்துகொள்ள இணையம் கொஞ்சம் தூரமாகிவிட்டது! எல்லாம் நன்மைக்கே என்று இருக்கிறேன்! நன்றி!
Deleteஅருமையான பதிவு தளிர் அவர்களே. பொருத்தது போதும் என்று இந்தியன் எழுந்து விட்டான் என்று தான் எனக்கு தோன்றுகிறது. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் சரியே.
ReplyDeleteதவறோ சரியோ மனதில் பட்டதை எழுதுகிறோம்.அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
ReplyDeleteதவறு என்றால் திருத்திக் கொள்வோம் இல்லை எனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம்
பதிவு முழுவதும் இரசித்துப் படித்தேன். அருமையாக எழுதியுள்ளீர்கள். கேஜ்ரிவாலின் சிறுபிள்ளைத் தனமான செயல்பாடு, மோடியின் கையாலாகாத் தனம் அனைத்தும் உண்மையே. ரஞ்சிதானந்தா காவி உடுத்திய ஒரு அயோக்யன், அவன் இந்து மதம் சார்ந்தவன் என்று சொன்னாலும் அதற்கும் அவனுடைய செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது எனது கருத்து.
ReplyDeleteவைணவ கோவில்களில் சேவை சாதிப்பவர்களை பட்டாச்சார்யர் என்றும், சைவ கோவில்களில் இறைப் பணி செய்பவர்களை குருக்கள் என்றும் சொல்வார்களாமே!!
உங்கள் மனதிற்கு எது சரியோ அதுவே போதும்... மற்றவை அவ்வப்போது மறந்தே விடுங்கள்...
ReplyDelete//மக்களுக்கு புதிய தலைவர்கள் மீது ஓர் நம்பிக்கை வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது// உண்மைதான்.
ReplyDeleteவிரிவான, நடுநிலை பிறழாத விமர்சனம். இனியும் மனதில் பட்டதை எழுதுங்கள். பிறரை ஏசியே சுகம் காணும் பின்னூட்டக்காரர்களை அலட்சியப்படுத்துங்கள்.
மிக்க மகிழ்ச்சி சுரேஷ்.
//மக்களுக்கு புதிய தலைவர்கள் மீது ஓர் நம்பிக்கை வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது// உண்மைதான்.
ReplyDeleteவிரிவான, நடுநிலை பிறழாத விமர்சனம். இனியும் மனதில் பட்டதை எழுதுங்கள். பிறரை ஏசியே சுகம் காணும் பின்னூட்டக்காரர்களை அலட்சியப்படுத்துங்கள்.
மிக்க மகிழ்ச்சி சுரேஷ்.
வணக்கம்
ReplyDeleteஐயா.
தங்களின் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் அரசியல் நிலை பற்றி. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான அலசல் சகோதரரே...
ReplyDeleteகருத்துச் சொல்வது மற்றவர் உரிமை.
நமது கருத்தைப் பகிரும் உரிமை நமக்கு இருக்கு.
முரண்பட்ட கருத்துக்கள் நம் எண்ணங்களைப் பாதிக்காது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்...
நன்றி.
கடந்த முறை செய்த தவறை செய்யாமல் இம்முறை சிறிது நிதானமாக நடந்துகொண்டால் இக்கட்சிக்கு வரும் நாள்களில் நல்ல மதிப்பு கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். மதம் தொடர்பான விவாதங்கள் என்றுமே முற்றுப்பெறாது என்பதே என் கருத்து.
ReplyDeleteவன்முறையாக ஆகிவிட்டது எனலாம் சிலர் நாகரிம் இன்றி பின்னூட்ட்ம் இடுவது அவர்களின் மேலாண்மையை காட்டத்தான்! எல்லாம் நல்லதுக்கு தொடர்ந்து எழுதுங்க சுரேஸ்.
ReplyDeleteகெஜ்ரிவாலின் இந்த அசாத்திய வெற்றி நிச்சயம் அவருக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கும். மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
ReplyDeleteநல்ல பதிவு. கருத்து தீவிரவாதம் செய்கிற கெளபாய் தம்பிகளுக்கு என் கண்டனம். கருத்துக்களால் எதிர்க்கலாம் அதற்காக ஏசுவது அநாகரிகம். அல்லவா. நாங்கள் அனைவரும் விரும்பியது மோடி அரசை ஒரு பிடி பிடித்தீர்களே அந்தப் பத்தியை தான் அன்பரே. இத்தனை துனிச்சலாக மதங்களை சாட உங்களை விட்டால் யாரும் கிடையாது. மற்றவர்கள் மதங்களை விமர்சிக்க பயந்து தொடை நடுங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் நீங்கள் மட்டுமே மன தைரியத்துடனும் எழுத்து வன்மத்துடன் எழுதக் கூடிய சீராளராக இருக்கிறீர்கள். இத்தனை சீரியஸான பதிவிலும் நகைச்சுவையை கைவிடவில்லை நீங்கள் நித்தியானந்தா என்ன கிறிஸ்டீனா என்று கேட்ட இடத்தைப் படித்த போது நாங்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தோம். எங்கள் ஆர்ட் டைரக்டர் ஒரு சிரிய பேப்பரில் ஆரோக்கியம் அருளானந்த என்று பாதிரியார் உடையில் நித்தியை வரைந்ததும் சிரிப்பு ரெட்டிப்பானது.
ReplyDeleteஎன்னுடைய பின்னூ வைப் பார்த்த எங்கள் இயக்குநர் திட்டியதால் தான் இப்போது யாரிடமாவது கொடுத்து திருத்தி வெளியிடுகிறேன் (பிழை திருத்த உதவி. செல்வம் தியாகராஜா). அது ரொம்ப பேஜாரானது, ஒரு பின்னூவுக்கு 3 மணி நேரம் ....
பரமு சிவசாமி
நல்ல பகிர்வு. இது ஒரு நல்ல அதிரடி முடிவாக தெரிகிறது. அரசியலில் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteபகிர்வு அருமை! ஆம் ஆத்மி சில மாற்றங்களையும் கொண்டுவந்து , தவறுகளையும் களைந்தால் நல்லதுதான்...
ReplyDeleteமத சகிப்பு இல்லாமல் மதமாற்றம் செய்கிறேன்! கிறிஸ்துவனை இந்துவாக்குகிறேன்! ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்! கட்டாயம் இந்தி படியுங்கள்! சம்ஸ்கிருதம் படியுங்கள் என்று இப்படி தேவையில்லாத உபத்திரவங்கள் செய்தது இந்த தோல்வியின் முதல் படி!//
மிகச் சரியெ! நல்ல கருத்து....சுரேஷ் நண்பரே! மத மாற்றம் என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. அவரவர் பிறந்தமதத்தில் இருந்து கொண்டு பிறரை மனிதனாக மதிக்கத் தெரிந்து மனிதத்துடன் வாழ்ந்தாலே நல்லதுதான்...
//நம்முடைய மதத்தை நான் எதிர்க்கவில்லை! அதில் உள்ள சில மூடத்தனத்தையும் தீவிர வாதத்தையுமே எதிர்க்கிறேன்! பிற மதத்தில் மட்டும் மூடத்தனங்கள் இல்லையா? தீவிரவாதம் இல்லையா? என்று கேட்கலாம்? நம் வீட்டில் குறைவைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டை குறை கூற முடியாது இல்லையா? அதனால்தான் நம்முடைய குறையை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று எழுதி உள்ளேன். நித்யானந்தாவிற்கும் இந்துமதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டிருந்தார். இந்த நித்தியானந்தா கிறித்துமதமா? முஸ்லீம் மதமா? இந்துதானே! அவர் ஒரு இந்து சாமியார்?! இது போன்ற போலி மதவாதிகள் பெருகுவதால்தானே மதத்தின் பெயர் கெட்டுப்போகிறது! மதத்தின் உண்மையான தத்துவங்கள் அழிந்து போகிறது! அவர் பின்னால் காவடி எடுத்து போய் ஓர் கூட்டம் அழிந்து போகிறது. நான் குருக்கள் என்பதாலோ என்னவோ காஞ்சிபுரம் குருக்களை பற்றி சொல்லி என்னை கோபப்படுத்த பார்த்தார். நான் அதற்கெல்லாம் கோபம் அடையவில்லை! அவர்(ன்) தவறு செய்தான்! தண்டணை அனுபவிக்கிறான். எல்லா குருக்கள்களும் யோக்கியன்கள் என்று நானே ஒத்துக்கொள்ள மாட்டேன்! பலர் செய்யும் அழிச்சாட்டியங்கள் எனக்கே தெரியும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல! அதற்காக நான் குருக்களாக ஏன் பிறந்தேன் என்றும் வருத்தபடமாட்டேன்! // நச்!!!!! சுரேஷ்!