டிப்ஸ்!

டிப்ஸ்!


நகரின் அந்த பெரிய உணவு விடுதியின் முன் டாடா இன்னோவா கார் வந்து நின்றது. செக்யூரிட்டி வந்து பார்க் செய்ய உதவ பார்க் செய்துவிட்டு உணவு விடுதியினுள் நண்பருடன் நுழைந்தார் வேதநாயகம்.

   வேதநாயகம் வளர்ந்து வரும் தொழிலதிபர். தூய்மையான வெள்ளை வேட்டிச்சட்டை மடிப்பு கலையாமல் அணிந்து நெற்றியில் சந்தனப்பொட்டு கமகமக்கும்  செண்ட் மணத்துடன் உள்ளே நுழையும் போதே உணவு விடுதியின் சிப்பந்திகள் முகம் மலர வரவேற்று இருக்கையில் அமர்த்தினர்.

      சூப்பர்வைசர்ஓடிவந்து,ஓர்  சர்வரை அழைத்து ஐயாவுக்கு என்ன வேணுமோ கேட்டு கிட்ட இருந்து கவனி! என்று சொல்லிவிட்டு வணக்கம் வைத்துவிட்டு நகர வேதநாயகம் வேர்வையை துடைத்தபடி மேலே அண்ணாந்தார். உடனே அங்கிருந்த மின்விசிறி சுழலவிடப்பட்டது.
    வேதநாயகம் ஒவ்வொன்றாய் கேட்க ஓடிவந்து பறிமாறினார்  சர்வர். கூடவே நின்று கவனித்துக்கொண்டார். நண்பரும் தேவைப்பட்டதைக் கேட்டுச் சாப்பிட்டார்.
      சர்வர் பளபளக்கும் அட்டையினுள்  பில்லினைகொண்டுவந்து வேதநாயகம் முன் வைத்து காத்திருந்தான். வேதநாயகம் பளபளக்கும் ஆயிரம் ரூபாய்த் தாளை உள்ளே வைத்து அனுப்ப மீதம் சில்லறை வந்தது. சில்லறையில் கணிசமான தொகை  டிப்ஸ் கிடைக்கும் என்று சில்லறையாக மாற்றியே எடுத்து வந்து வைத்தார்  சர்வர்.

வேதநாயகம் மொத்த சில்லறையையும் எடுத்துக் கொண்டார். டிப்ஸ் எதுவும் வைக்கவில்லை! சர்வரின் முகம் வாடிப்போனது. தலையை சொறிந்து பார்த்தார். வேதநாயகம் மசியவில்லை!

    அருகில் கிளீனிங் செய்து கொண்டு வந்து அவரது டேபிளைத் துடைத்துக் கொண்டிருந்த கிளீனரை அழைத்தார். இந்தாப்பா! என்று புத்தம் புது ஐம்பது ரூபாய் தாளை அவன் கையில் திணித்தார்.


    அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி! கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! ஐயா! நீங்க நல்லா இருக்கணும்! என்று கண்ணீர்மல்க வார்த்தைகளை உதிக்க புன்சிரிப்புடன் அகன்றார் வேதநாயகம்.

    வெளியே வந்த நண்பர் கேட்டார். ஏம்பா வேதநாயகம்! அந்த சர்வர் தலையை சொரிஞ்சிக்கிட்டு நின்னப்ப நீ ஒண்ணுமே கண்டுக்கவே இல்லை! நான் கூட நீ இப்படி கஞ்சத்தனமா இருக்கியே ஒரு பத்து ரூபா கொடுத்தா என்னன்னு யோசிச்சேன்! ஆனா கிளீனருக்கு ஐம்பது ரூபா தூக்கி கொடுக்கிறே? என்றார்

   வேதநாயகம் அமர்த்தலாக புன்னகைத்தார். இந்த சர்வரை பார்த்தியா! உள்ளே நுழைஞ்சதுல இருந்து ஒரு எதிர்பார்ப்போடு என்னையே சுத்தி சுத்தி விசாரிச்சு பரிமாறினான். ஆளு வசதியானவன் நல்லா டிப்ஸ் கிடைக்கும்னு நினைச்சுத்தான் அவன் அப்படி சுத்தி வந்தான்.  பக்கத்து பெஞ்ச் ஆளுங்களை அந்த சர்வர்கள் கண்டுக்கவே இல்லை! நாலு குரல் கொடுத்தபிறகுதான் பதில் கொடுத்தார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க! போதாக் குறைக்கு இப்படி டிப்ஸும் கொஞ்சம் தேத்திடுவாங்க! ஆனா இந்த மாதிரி கிளினருங்க மத்தவங்க சாப்பிட்ட எச்சிலை எடுத்து சுத்தம் பண்றாங்க! நாம சாப்பிட இடம் சுத்தம் பண்ணிக் கொடுக்கிறாங்க! இவங்களுக்கு சம்பளமும் கம்மி! டிப்சும் யாரும் கொடுக்க மாட்டாங்க! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எல்லாரையும் ஒரே மாதிரி நினைச்சு எல்லா டேபிளையும் சுத்தம் பண்றாங்க! அவங்களுக்குத்தான் நியாயமா நாம உதவணும்னு எனக்குத் தோணிச்சு!
          அதனால நான் எங்க சாப்பிட்டாலும் கிளினருக்குத்தான் டிப்ஸ் கொடுப்பேன்! இப்படி உதவறது எனக்கு மனசு திருப்தி தருது. வாய்ப்பே இல்லாதவங்களுக்கு உதவறதனாலே எனக்கு ஒரு மகிழ்ச்சி! அவங்களுக்கும் ஒரு சந்தோஷம்! நான் செய்யறது சரிதானே! என்றார்.

   ஆமாம்பா! நானும் இனிமே உன்னை பின்பற்றலாம்னு இருக்கேன்! என்றார் அவர் நண்பர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. உண்மை நண்பரே இனிமேல் நானும் இதையே பின் பற்றுவேன்.

    ReplyDelete
  2. எதிர்பார்ப்புக்கு ஏற்றதுவே ஏமாற்றம்!

    எதிர்பாராதது ஏந்தியதுவே ஏற்றம்!

    செல்வந்தர்கள் இவ்வாறு யோசிப்பது ஆச்சரியமே!!!!

    நல்ல மெசேஜ் தந்த கதை நண்பரே! வாழ்த்துகள்!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. டிப்ஸ் அருமை...
    உண்மை.. யாரும் இப்படி யோசிப்பதில்லை...
    இனி இதைப் பின்பற்றலாமே...

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமான கற்பனையில் மலர்ந்த யோசனை நன்று...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நல்ல கதை....

    சுத்தம் செய்பவர்களுக்கு டிப்ஸ் - சிறப்பான யோசனையும் கூட! இதைப் பின்பற்றலாம்!

    ReplyDelete
  6. மாத்தி யோசிச்ச்சுட்டாரு வேதநாயகம்!

    ReplyDelete
  7. வாய்ப்பே இல்லாதவர்களுக்கு உதவுவதுதான் உண்மையான மகிழ்ச்சி
    உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  8. நல்லதொரு செயல்...

    இருவருக்குமே கொடுக்கலாம்...

    ReplyDelete
  9. அருமை சுரேஷ் நண்பரே! எங்களைப் போன்ற சிந்தனை.....நாங்கள் டேபிள் துடைப்பவருக்குத்தான் கொடுப்போம், கொடுப்பதாக இருந்தால்.....நல்ல ஒரு விஷயம் நண்பரே! அருமையான கதை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2