Posts

Showing posts with the label ஆன்மீகம்

சாளக்கிரம கற்களின் தாய்- கண்டகி நதி

Image
 கண்டகி நதி புராணம் "   சாளக்கிராம கற்களின் தாய்*  தாசி குலப் பெண்ணான #கண்டகி என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்னவென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால்...

அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்

Image
 அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம் உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன் ? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. சாம வேதத்திலே ஒரு இடத்தில் “ அஹமன்னம் , அஹமன்னம் , அஹமன்னதோ ” என்று கூறப்பட்டுள்ளது , அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம , விஷ்ணு , சிவ சொரூபம். அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.   ஐப்பசி   பௌர்ணமியன்று அறுவடையான புது   நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து   சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு   போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர   வல்லதாகும்.   சிவன் பிம்பரூபி , அவரது மெய்யன்ப...