அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்

 அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்




உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது.

சாம வேதத்திலே ஒரு இடத்தில்

அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோஎன்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.

உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.

 

ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும்
அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொருபாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்

 


உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை.

அன்னம் எனும் உணவேஅனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீயஉபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறைசாற்றுகின்றன. 

சோறு நம் பசிப்பிணியினை போக்கவல்லது! வயிற்றுத்தீயை அணைக்கவல்லது! யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றார் திருமூலர்! அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பெறுவது என்பது நம் பாக்கியம் ஆகும்

 

பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

 

ஐப்பசிமாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம்முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். 

 

சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதிவரையான தனது நட்சத்திர மனைவியரு ரோகிணியிடம் மட்டும் தனி அன்புசெலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல்தேயட்டும் என்று பெற்ற சாபம். 

சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேயஆரம்பித்ததுஅவன் மிகவும் 

வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால்சாப விமோசனம்கிடைக்கும்என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்துசிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள்மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார்,அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும்முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமேகிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்துபின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும்என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு மதிமுழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு !



ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது.அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழுஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரங்களில்சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில்அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனைநடைமுறைப்படுத்தினார்கள்.

 


சிவபெருமானைப் போல, பிரம்மனுக்கும் முன்பு 5 தலைகள் இருந்தன. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். இதையடுத்து பிரம்மனின் ஒரு தலைய

 

 

அன்னாபிஷேக  தினத்தில் முதலில் இறைவனுக்கு மஹா அபிஷேகம் எனும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்படும், பஞ்சகவ்யம், பால், தயிர், தேன், கதம்பபொடி, பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலிய அபிஷேகங்கள் செய்விக்கப்பட்ட பின் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும்.

 

  இந்த அபிஷேகம் அன்னத்தால் இறைவனை மூடுவது ஆகும். இறைவனின் உச்சி முதல் பாதம் வரை அன்னத்தால் மூடி அலங்கரிப்பார்கள்.  பிரம்மபாகம், விஷ்ணுபாகம், சிவபாகம் என்று மூன்றுவிதமாக அன்னம் சார்த்தப்படும். இதில் லிங்க உச்சியில் சார்த்தபடும் சாதம் வீரியம் மிக்கது. இதை பின்னர் நீரில் கரைத்துவிடுவார்கள்.

   90 நிமிடங்கள் ஒரு முகூர்த்த காலம் தரிசன நேரமாகும். அப்போது ருத்ர பாராயணம், திருமறைகள் பாடி துதிப்பார்கள். பின்னர் அன்னத்தை கலைத்து பிரசாதமாக தயிர் கலந்து விநியோகிப்பார்கள். அதை உண்ணுகையில் சகலதோஷங்களும் விலகும்.

 

  அன்னாபிஷேக தினத்தன்று தரிசனம் செய்து அந்த அந்த பிரசாதத்தை உண்ணுவதால் குறிப்பாக அன்னதோஷம் விலகும்.  அன்னதோஷம் என்பது வீட்டில் நிறைய உணவிருந்தும் அன்னம் உண்ண பிடிக்காது ஒருவித வெறுப்பு ஏற்படும். பசியின்மையாக இருக்கும். இந்த தோஷம் அன்னாபிஷேக பிரசாதம் உண்ணுவதால் நீங்கும்.

சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தால் நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி இராது. ஆகம விதிப்படி அன்னாபிஷேகம் செய்வித்தால் நாட்டில் காலாகாலத்தில் மழைபொழிந்து வளங்கள் பெருகும்.  மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்  அன்னாபிஷேகம் செய்த சாதத்தை பிரசாதமாக உண்ணுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

  இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகத்தை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று கண்டு களித்து சிவபெருமான் அருள் பெற்று உய்வோமாக!

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2