Posts

Showing posts with the label அரசியல்

அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி!

Image
அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி! ஊடகங்கள் எந்த பரபரப்பு செய்தியும் கிடைக்காமல் மந்தமாக இயங்கிக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் வழக்கமாக தானே கேள்வி தானே பதில் என்னும் அறிக்கை விடும் தாத்தா கலைஞர் அவர்கள் தன் திருவாயை மலர்ந்து அழகிரி குறித்து விடுத்த தகவல்கள் பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கும் போது சொல்லாத புதிய காரணம் நேற்று சொன்னார் தமிழினத்தலைவர். இதன் மூலம் அவர் வீட்டுக்குள் நடக்கும் குடும்பச்சண்டையை வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டார். ஒரு மூத்த அரசியல் ராஜ தந்திரி என்று வர்ணிக்கப்படும் கலைஞர் தேமுதிக கூட்டணிக்காக இந்த அளவுக்கு இறங்கிவருவார் என்று நினைத்தும் பார்க்கவில்லை நான்.      அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது தமிழறிவு, எழுத்தாற்றலை வியப்பவன் நான். நேற்று அவர் அளித்த பேட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் எழுதிய நாடகமாய் தோன்றியது.       ஒரு குடும்பத்தில் அண்ணன் –தம்பிகள் இருந்தால் எப்படியும் தகறாரு ஏற்பட செய்யும்தான். வார்த்தை வேகத்...

சோனியாவின் சொத்துமதிப்பு 1லட்சம் கோடியாம்! அம்மாடியோவ்!

Image
இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாகவே இன்னும் இருக்கையில் அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு  உயர்ந்துகொண்டே போகிறது. அந்த காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் தங்களின் சொத்துக்களை பொதுப்பணிக்கு செலவழிப்பார்கள். இன்றோ அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் ஆகிவிட்டது.           அரசியல் வாதிகளுக்கு எம்.எல்.ஏ வோ அல்லது எம்.பி ஆகவோ ஆகிவிட்டால் போதும் ஐந்து ஆண்டுகளில் அவர்களின் சொத்து பலமடங்கு எகிறிவிடுகிறது. இதில் அமைச்சர், முதலைமைச்சர், பிரதமர் என்று ஆகிவிட்டால் நாடே அவர்களுடையதுதான்!                     நீங்கள் நினைப்பதை விட உங்கள் தலைவர்கள் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என்ற தலைப்பில்  உலகின் முன்னனி இணைய தளங்களில் ஒன்றான ஹபீங்க்டன் போஸ்ட்  வெளியிட்டுள்ள செய்தியில் உலகின் கோடீஸ்வர தலைவர்களை பட்டியல் இட்டுள்ளது. ரஷ்யாவின் விளாடீமீர் புடின் இதில் முதல் இடத்தில் உள்ளார்.      நம்ம அன்னை சோனியா 12 வது இடத்தில் ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். இவர் இங்கிலாந்து ராணி எலிசெபத்தை ...

"கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!

Image
     "கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!    ராஜ்யசபா சஸ்பென்ஸ் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது! எல்லோரும் நினைத்தது போல திமுகவிற்குத்தான் தன்னுடைய ஆதரவு என்று காங்கிரஸ் என்று கூறிவிட்டது. பாமக எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னாலும் கூட்டணி பேரம் படியாததுதான் காரணம் என்று தகவல்கள் கசிகின்றன. கடைசி நேரத்தில் திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. புதியதமிழகம், மமக போன்ற உதிரிக் கட்சிகள் ஆதரவுடன் ராஜ்யசபாவில் கனிமொழி அமரப் போவது உறுதியாகிவிட்டது.      இப்போது பாவம் தேமுதிகவின் நிலை! கேப்டன் எதை நம்பி களத்தில் குதித்தார் என்றே தெரியவில்லை! சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழுபேர் அம்மா விசுவாசிகளாக மாறியபின் மார்க்சிஸ்ட்கள் ஆதரவு இல்லை என்றான பின் எப்படி ஜெயிப்போம் என்று நினைத்தார் என்று புரியவில்லை! காங்கிரஸ் ஒருவேளை ஆதரித்து இருந்தாலும் இவரது நிலைமை கவலைக் குறியாகத்தான் இருந்தது. அதனால்தான் என்னமோ சுதிஷை களம் இறக்காமல் இளங்கோவனை இறக்கிவிட்டார்.        இப்போது காங்கிரஸும் கால...

திமுக விலகல்! ஒரு பார்வை!

Image
திமுக விலகல்! ஒரு பார்வை! மத்திய அரசில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு அநீதி நடப்பதாக கூறி விலகியிருக்கிறது திமுக. இதெல்லாம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! நாடகம் என்று ஆளுங்கட்சி விமர்சிக்கிறது. திமுகவின் கூட்டணியான விடுதலை சிறுத்தைகளும் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டது.    இத்தனை காலம் இலங்கை தமிழர்கள் வேதனைப்படவில்லையா? துன்பப்படவில்லையா? மிக நீண்ட காலமாகவே இருந்துவருகிறது இலங்கை தமிழர் பிரச்சனை! இந்த பிரச்சனையை இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் ஒரு வாழ்வாதாரா பிரச்சனையாகவே கருதவில்லை! அரசியல் லாபத்தோடே நோக்கிவருகின்றன. இது அன்றைய முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் காலந்தொட்டே இருந்து வரும் அரசியல்.     மத்தியில் ஆட்சியைப் பிடிக்க அவ்வப் போது இலங்கை தமிழர்களுக்கு தாங்கள்தான் வழிகாட்டி என்பது போல தமிழக கட்சிகளுக்குள் போட்டி நடக்கும். ஆட்சி ஏறியதும் காட்சி மாறும். ஓட்டுக்காகவே இந்த அரசியல் நடந்து வருகிறதே அன்றி ஒருபோதும் அடுத்த தீவீல் வாழும் அப்பாவி தமிழர்களை கரையேற்ற எந்த முயற்சியும் இந்த கட்சிகளால் நடந்தது கிடையாது. சொல்லப்...

நாக்குக் கடி நாராயணனும் வைகை கரை வாத்தும்!

Image
விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினால், அதில் ஒரு குட்டிக்கதை, தவறாமல் இடம்பெற்று விடும். சட்டசபையில் பேசும்போதும், குட்டிக் கதைகளை கூறுவார். கதையின் மூலம், கருத்தை விளக்கினால், அது மக்களை கவரும் என்பதால், இந்த பாணியை, அவர் கடைபிடித்து வருகிறார். அவரது பாணியை, அப்படியே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அவர் கூறியதாவது: கதை ‌கேட்டு சிரித்த முதல்வர் : ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், தமிழகத்தில் இருந்து, டில்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற, ஒரு குரூப், வழியில், ஒரு ஸ்டேஷனில், தவறி இறங்கிவிட்டது. "குரூப் கேப்டன்' நிதானம் இல்லாமல், கூட வந்தவர்களின் தலையை தட்டுகிறார்; நாக்கை துருத்தி, கடிக்கிறார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று, அடுத்த ரயில் எப்போது வரும் என கேட்க, "மாலை 6:00 மணிக்கு வரும்' என்கிறார். "அப்படியா' என கேட்டுவிட்டு, பக்கத்தில் ஒரு, "ரவுண்டு' போய் வருகிறார். இப்படியே, ஐந்து ரவுண்டு போகிற...

ஒரு இனிய உதயத்துக்கு தயாராகுது தழுவாத "கை'கள்!

Image
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக வீராவேசம் பேசிய தே.மு.தி.க., அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த்தை தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும், முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தை விட்டுத்தர, அவர்கள் முன்வரவில்லை. இதனால், தலைமையின் முடிவை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். புறக்கணிப்பு:தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன், 5,104 ஓட்டுக்களை வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு, அக்கட்சி சொன்ன காரணம், "நதிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றில், மத்திய அரசால், தமிழக மக்களுக்கு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை' என்பது தான்.இதைக் கேட்டதும், காங்கிரஸ் நிர்வாகிகள், "தே.மு.தி.க., தேர்தலை புறக்கணிக்கக் கூடாது' என்று, கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சிலர், தே.மு.தி.க., நிர்வாகிகளை சந்தித்து, இதுகுறித்து ரகசிய பேச்சும் நடத்தி வருகின்றனர். தி.மு.க., தரப்பிலும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. சங்மாவிற்கு ஆ...

விஜயகாந்தை சீண்டும் தினமலர்!

Image
விஜயகாந்தை சீண்டும் தினமலர்! இன்றைய தினமலரில் விஜயகாந்தை கிண்டலடித்து ஒரு வாசகம் இடம் பெற்று இருந்தது எனக்கு நெருடலாக தென்பட்டது. பத்திரிக்கைகள் பிரபலமடைய என்னவெல்லாம் செய்கின்றன. இதே போன்ற ஒரு கருத்து தினமலர் மாதிரியான ஏடுகளில் வருவது அவ்விதழின் வாசகர்களை முகம் சுளிக்கவே செய்யும் என்பதை தினமலர் உணராதது வருத்தம் அளிக்கிறது. இத்தனைக்கும் நான் தினமலரின் 25 ஆண்டுகால வாசகன். அன்றைய தினமலருக்கும் இன்றைய தினமலருக்கும் எவ்வளவோ மாற்றங்கள்! மாற்றங்கள் வரவேற்க கூடியவைதான்! ஆனால் நியாயமான போராட்டங்களுக்கு கைகொடுக்கவேண்டிய தினமலர் தனி மனித ஆராதனை தூஷிப்புக்களில் இறங்கி விட்டது வேதனையான செயல்!   அப்படி என்னதான் செய்து விட்டது தினமலர்? இன்றைய தினமலரில் தலைவர்களின் பேச்சு பேட்டி அறிக்கையில் விஜயகாந்தின் கார்டூனோடு அவரது அறிக்கை இடம் பெற்றுள்ளது.அந்த அறிக்கை, ஆண்கள் குடிக்க ‘டாஸ்மாக்’ கடைகளை திறந்துவிட்டு, வீடுகளில் பெண்களுக்கு இலவசப் பொருட்களை வழங்குகின்றனர். வேருக்கு விஷமும் இலைக்கு தண்ணீரும் ஊற்றுகின்றனர். என்ற அறிக்கையினை வெளியிட்டு கீழே ஆண்கள் மது குடிப்பதை விஷத்திற்கு இணையாக ஒப்...

கனிமொழியின் அரசியல் எதிர்காலம் காங்கிரஸ் கையில்?

Image
  திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் அரசியல் எதிர்காலம், குறிப்பாக டெல்லி அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் காங்கிரஸ் கையில் இருப்பதாக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் அன்பு மகள் கனிமொழி தற்போது திமுக ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். கனிமொழி கடந்த 2007 ம் வருடம் ஜூன் மாதம் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2013 ம் வருடம்) ஜூன் மாதம் முடிவுக்கு வருகின்றது. கனிமொழி மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் என்றால் அதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்கள் திமுக வசம் இல்லை. இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கில் கனிமொழி சிக்கிய சமயத்தில் அவரை பாதுகாத்தது எம்.பி. பதவி தான் என்ற வாதம் அரசில்வாதிகள் மத்தியில் உள்ளது. இதனால் அவர் மீண்டும் எம்.பி. ஆனால் தான் 2 ஜி வழக்கில் அவருக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கும் என திமுக தரப்பு கணக்கு போடுகின்றது. இதனால் கனிமொழியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் தற்போது தமிழகத்தில்...

மாசானி அம்மா.. எப்படியாவது அவனை மந்திரி பதவிலருந்து தூக்கு!' -அதிமுகவினர் மிளகாய் நேர்த்தி!

Image
பொள்ளாச்சி: 'தாயே.. மாசானி அம்மா... இந்த மந்திரியை எப்படியாவது அமைச்சரவையிலருந்து தூக்கி அருள்புரியனும்...' - பொள்ளாச்சி அருகே மாசானியம்மன் கோயிலில் அதிகமாகக் கேட்கும் அதிமுகவினர் வேண்டுதல் குரல் இது. அதுவும் சாதாரணமாக அல்ல, மிளகாய் அரைத்துப் பூசி படு தீவிரமாக வேண்டுவதால், அதிமுக மந்திரிகைகள் ஏக கலக்கத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 'முன்னாள் உயிர்த்தோழி' சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டதால், சசிகலா, ராணவன், திவாகர், மகாதேவன், எம்.நடராஜன், பவனிவேல், ராமசந்திரன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். மேலும், சமீபத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீக்கப்பட்டனர். ஆனால், முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட பல அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களின் அடாவடி, அத்துமீறல், சட்ட விதி மீறல், திமுகவினருடன் உள்ள தொடர்புக...

சசி பெயர்ச்சி சில ருசிகர தகவல்கள்! கோடிகள் சுருட்டியது அம்பலம்!

Image
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் , மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ள விவரம் , அ . தி . மு . க ., வட்டாரத்தில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளது . சசிகலா உட்பட 14 பேர் , அ . தி . மு . க ., வில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து , நேற்று , மேலும் இருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் . இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி குறித்து , வெளிவரும் தகவல்கள் : அ . தி . மு . க ., ஆட்சிக்கு வரும்போது , ஜெயலலிதாவிடம் சசிகலா உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி , சசிகலாவின் உறவினர்கள் , வெளியில் பணம் பெற்றுக் கொண்டு , அரசில் முக்கிய காரியங்களைச் சாதிப்பது , வழக்கமான நடைமுறையாக இருந்தது . ஆனால் , இந்த முறை , முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் , தங்கள் ஆதரவாளர்களை உட்கார வைத்து , ஜெயலலிதாவின் தயவு இல்லாமலேயே , இவர்கள் நேரடியாக உத்தரவு பிறப்பித்து , காரியங்களை சாதித்தது தான் , அவர்களது ஆட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளது . பணம் " பத்தும் ' செய்யும் : குறிப்பாக , கோவையில் இருந்து ...