Posts

Showing posts from June, 2019

இந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை!

Image
சிறுவயதில் இருந்தே பத்திரிக்கைகளில் எழுதி பெயர் வரவேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்தது. எழுத்தார்வம் காரணமாக இளந்தளிர், சின்னப்பூக்கள், தேன்சிட்டு என கையெழுத்துப்பிரதிகள் அப்போது எழுதி வெளியிட்டு மகிழ்ந்ததுண்டு. அவ்வப்போது சில கதைகள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை பிரசுரம் ஆகாமல் திரும்பும் போது மனசு வலிக்கும். அப்புறம் பத்திரிக்கைக்கு அனுப்புவதை தவிர்த்து வந்தேன். 2011 முதல் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன்.     நண்பர்கள் ஊக்கம் காரணமாக 2014 முதல் மீண்டும் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். பாக்யா வார இதழ் என் படைப்புக்களை வெளியிட்டு எனக்கு ஊக்கம் தந்தது. தொடர்ந்து, ஆனந்தவிகடன், கல்கி, காமதேனு, குமுதம் என பல்வேறு இதழ்களில் ஒன்றிரண்டு படைப்புக்கள் வந்தாலும் இன்னும் மனநிறைவு ஏற்பட வில்லை.    குமுதத்தில் வாட்சப் கதைகள் என்ற போட்டி வைத்தனர், அதில் எனது கதை தேர்வு பெற்றது. தொடர்ந்து மறுமாதமும் என்னுடைய இன்னொரு கதை வந்தது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் இந்த வார இதழில் எனது ஒரு பக்க கதை வியாதி இடம்பெற்றுள்ளது. குமுதத்தில் இப்படி ஒரு தொடர்ச்சியான வாய்ப்பினை பெற்றிருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அ

தேன்சிட்டு மின்னிதழ் ஜூன் 2019