Posts

Showing posts with the label ஹைக்கூ

அந்தாதி ஹைக்கூ!

  அந்தாதி ஹைக்கூ! தூண்டி விட்டதும் சுடர் விட்டது அகல்விளக்கு! விளக்கு ஏற்றியதும் அடியில் ஒளிந்துகொண்டது இருட்டு! இருட்டுக் கடையில் வாங்கினாலும் எடையில் குறையவில்லை! இனிப்பு! இனிப்புக் கடை! கூட்டம் மொய்த்தும் மகிழவில்லை! ஈக்கள். ஈக்கள் சூழ்ந்தன இறந்து கிடந்தான் அனாதை! அனாதை இல்லம் கை கோர்த்தன புதிய உறவுகள் உறவுகள் கைவிட்டதும் பற்றிச் சென்றது காற்று சருகு! சருகுக் குவியல் கலைத்துப் பார்த்தது காற்று! காற்றுக்கு வேலி போட்டதும் உடைத்துக்கொண்டு புறப்பட்டது புயல்! புயலாய் பறக்கும் வாகனங்கள் மெதுவாக சாலையைக் கடக்கிறது சிற்றெரும்பு. சிற்றெரும்பு மிதந்த தேநீர் ஆறிப்போனது துக்கவீடு! துக்கவீட்டில் நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்த்துகிறது ஊதுபத்தியின் சாம்பல்

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
  தளிர் ஹைக்கூ கவிதைகள்!   கும்மிருட்டு காவலுக்கு நிற்கிறது அய்யனார் சிலை!   வெடிச்சத்தம் பீதியில் தெருநாய்கள்! கோயில் திருவிழா   வேண்டுதலுக்காக உயிரைக்கொடுத்தது பலி ஆடு!   சூடான தேநீர் குளிர்வித்தது யாசகனின் பசித்தீயை!   வேகமாய் பயணிக்கிறது காலத்தோடு சாலையில் வாகனங்கள்!   கோயில் மணியோசை எழுப்பி விடுகிறது காகத்தின் பசியை!   துளைத்து எடுத்தது ரசித்துக்கொண்டிருந்தான் காதலியின் பார்வை!   கோயில் முழுக்க பக்தர்கள்! காலியாக இருக்கிறது பிரசாத கூடை!   பனிவிழும் இரவு குளிரில் நனைகிறது விரையும் வண்டிகள்!   திரை போட்டதும் கலைத்தது காற்று! வான்மேகம்!   ஒளித்து வைத்தது வெப்பத்தை மரத்தின் நிழல்!     கால்நடைகளின் பசி   தீர்ந்ததும் காய்ந்த்து   மேய்ச்சல் நிலம்!     நீண்ட வரிசை   தீரவில்லை பசி   அன்னதானக்கூடம்!     உடைந்து போனது   குழந்தையின் மகிழ்ச்சி! வெடித்தது பலூன்!   ...

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
  கட்டிக்கொண்டதும்   விட்டுப்போனது கவலைகள் ! குழந்தை   கருத்தவானம் ! உதித்தது நிலா ! கூந்தலில் மல்லிகை !    மேகம் சூழ்ந்த வானம் வெப்ப மூச்சு விட்டது பூமி! எட்டிப்பார்த்தும் நுழையமுடியவில்லை உணவகத்தில் ஏழையிடம் பசி .  வெப்பம் வாட்டுகையில் கூட்டமாய் கிளம்பின மேகங்கள்! நிறைந்திருந்தது பிம்பங்களை முழுங்கிய குளம்! எவ்வளவு போட்டாலும் நிரம்ப மறுக்கிறது பிச்சைப்பாத்திரம்! மழை விட்ட இரவு விடாமல் இசைத்தன தவளைகள்! வெள்ளை உடை துல்லியமாய் காட்டிக் கொடுத்தது அழுக்கு! துளிர் விடும் சிந்தனைகள் துரத்தி அடித்தது பேரிரைச்சல்! பச்சைவயல் இச்சை கொண்டன பூச்சிகள்! ஓசைபோட்டாலும் ஆசையோடு ஆட்டம்! அருவி! பின் குறிப்பு}   உடல் நலம் பாதிக்கப்பட்டமையால் ஒருவாரம் விடுமுறை எடுத்தேன். இனி வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவித்துச் செல்லலாமே! நன்றி

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
    சுற்றிக்கொண்டே இருக்கிறது யாராவது நிறுத்தும் வரை மின்விசிறி விளக்கு வெளிச்சம் காட்டிக்கொடுக்கிறது இரை தேடும் பல்லி விடாத மழை துரத்திக்கொண்டே இருக்கிறது வீட்டு நினைவுகள் கோயில் முழுக்க பக்தர்கள் காலியாக இருக்கிறது பிரசாத கூடை பனிவிழும் இரவு குளிரில் நனைகிறது விரையும் வண்டிகள். துளைத்து எடுத்தது ரசித்துக்கொண்டிருந்தான் காதலியின் பார்வை! ஈரமான பூமி கூட்டிவந்தது குளிர்ச்சியை தூறல் மழை!  கொழுந்து விடும் இலை விருந்துக்குத் தயாராகிறது கம்பளிப்புழு செதுக்க செதுக்க   பிறக்கிறது  சிலையில் உயிர்! வெப்பம் வாட்டுகையில்  கூட்டமாய் கிளம்பியது  மேகங்கள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டம் இட்டுச் செல்லலாமே! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
  தளிர் ஹைக்கூ கவிதைகள்!     ஈரம் காய்ந்ததும்   வெடிப்பு விட்டன   நிலங்கள்!   வெள்ளுடை அணிந்த பூமி! சூரியன் மறைவு! பனிமூட்டம்.   வாசலில் காத்திருக்கின்றன கழட்டிவிட்ட எஜமானர் வரும்வரை காலணிகள்!   நிழலாய் காத்தன! வளரவிடவில்லை! மரத்தின் அடியில் பயிர்!   அறுவடையான வயல்கள்! மேய்ச்சலுக்கு வந்தன கால்நடைகள்!   மண்ணில் சமைத்து விளையாட்டு பசியே எடுக்கவில்லை! குழந்தைக்கு   உண்ணாமலே ருசித்தது குழந்தை சமைத்த மண்சோறு!   சுகாதாரத் துறை அமைச்சர் வருகைக்குப்பின் குவிந்து கிடந்தது சாலைமுழுக்க நெகிழிக் குப்பைகள்!   வளைந்த கிளை! நிமிரவே இல்லை! உடைந்து போனது வளர்ச்சி!   அழகான மிதியடி! உள்ளே மறைந்து கொண்டிருந்தன அழுக்குகள்!   நேரத்தை விழுங்கி நேசத்தை வளர்க்கின்றது முகநூல்!   இருண்ட வானம் வெளிப்பட்டதுபொத்தல்கள் நட்சத்திரங்கள்   தகித்துக் கொண்டிருந்தது நிழல் படாத இடங்களில் வெயில். விருட்சம் ஒன்றை விதைத்துவிடுகின்றது பறவை...

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
  தளிர் ஹைக்கூ கவிதைகள்!   வெயில்! தடுத்தாட்கொண்டது மரம்.     வாய் நிறைந்தும் வயிறு நிறையவில்லை விவசாயிக்கு! குறைந்த கொள்முதல் விலை!     இருளில் ஒளிந்த சாலைகள்! காட்டிக் கொடுத்தன! பிரதிபலிப்பு பட்டைகள்!   மிதிபட்டதும் சத்தம் போட்டன! உலர்ந்த சறுகுகள்!   வற்றிய பால்! உயிரைவிட்டது! பழுத்த இலை!     காட்டிக் கொடுத்து சம்பாத்யம்!   யார்வாயிலும் விழவில்லை!   தேடுபொறிகள்!     பச்சை வயல்வெளிகள்! குறுக்கே முளைத்து வளர்ந்திருந்தன மின் கம்பங்கள்!   புகுந்தவீட்டில் விளக்கேற்றின மின்மினிப்பூச்சிகள் இரவில் ஒளிர்ந்த மரங்கள்   சத்தமிடும் வண்டுகள் அமைதி இழந்தது இரவுப்பொழுது     இறங்கிவந்ததும் குளிர்ந்து போனது பூமி வெயில்!   தூரமாய்ப் போனவிளக்குகள் நெருங்கி வந்தது இருட்டு.   வெப்பம் சுமந்த மரங்கள் பெற்றெடுத்தன நிழல்.    

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வெள்ளை அடிக்கையில் அழுக்காகிப் போனது! பக்கத்துவீடு! கொளுத்தும் வெயில் குடையாய் வந்தன மரங்கள்! பிம்பங்கள் பெரிதாகையில் தொலைந்து போகின்றது! நிஜம்! தொட்டியில் அடைபட்டது வாஸ்து மீனின் சுதந்திரம்! கண்டித்தாலும் விடுவதில்லை குழந்தைக்கு மண்ணாசை! மேடு பள்ளங்கள்! தடுத்து நிறுத்துகிறது வாழ்க்கையின் ஓட்டத்தை! விரல் அசைவில் பிறக்கின்றன எழுத்துக்கள்! நினைவுகள் பூக்கையில் வாசம் வீசியது நட்பு. இருள் கவ்விய சாலைகள்! மிளிர்ந்தன வாகன வெளிச்சம்! அமாவாசை இரவு நெருங்கி வந்தன நட்சத்திரங்கள்! விழித்து எழுந்ததும் கலைந்து போனது கனவு! இலையுதிர்த்த மரங்கள்! காணாமல் போனது நிழல்! கொட்டிக்கிடந்தது பிச்சைக்காரர்களிடம் சில்லறை! தூரப் போகிறார் கடவுள்! நீண்டு கொண்டே போகிறது! தர்ம தரிசனம்! விலை நிர்ணயம் ஆனதும் உரிமை பறி போகிறது! தேர்தல்! நிறுத்தம் வந்ததும் பிரிந்து போகிறது சிநேகம்! பேருந்துப் பயணம்! பின் குறிப்பு} நீ,,,,ண்ட இடைவெளிக்குப் பிறகு ஹைக்கூ எழுதியுள்ளேன்!...

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! பற்றவைத்ததும் பூத்தது மகிழ்ச்சி! பட்டாசு! சத்தம் போட்டு எழுப்பியது பட்டாசுகள்! தீபாவளி அதிகாலை! கரியான காசுகள் ஒளியேற்றின வாழ்க்கையை! சிவகாசிபட்டாசு தொழிலாளர்கள்! பூத்து கொட்டியது தொடுக்க முடியவில்லை! தீபாவளி மத்தாப்புக்கள்! அடங்கிப் போன பறவைகள்! பறந்து கொண்டிருந்தன! தீபாவளி வாணங்கள்! வெடிக்க கட்டுப்பாடு! பிடிக்க வில்லை! காற்று மாசு! தொலைத்த பால்யம்! மீண்டது தீபாவளி வெடி! வாட்சப் வாழ்த்துக்களில் வதங்கிப் போனது நிகழ்கால தீபாவளி! வெடித்து சிதறிய பட்டாசுகள்! பிடித்து வைத்தது பட்டாசு தொழிலாளர் வாழ்க்கை! திணிக்க திணிக்க திளைத்துப்போனது வயிறு! தீபாவளி இனிப்புக்கள்! வெடிகளின் வெளிச்சம்! வெளிப்படுத்தியது மழலைகளின் மகிழ்ச்சி! இரண்டே மணி நேரம் சுருங்கிப் போனது பட்டாசு வியாபாரம்! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்

Image
பறித்துச்செல்கிறது! தடுப்பாரில்லை! பழுத்த இலைகளை காற்று தொட்டிக்குள் அடங்கிவிடுகிறது வளர்ச்சி! வாஸ்துமீன்! எல்லோரும் உறங்குகையில் விழித்துக்கொண்டிருக்கிறது! இரவு! நல்வரவு சொன்னதும் மிதித்தபடி கடந்தார்கள்! மிதியடி மழைவிட்ட இரவில் நிரந்தரமாய் அணைத்துக்கொண்டது! குளிர்! மொழி தெரியா பாடல்! ஈர்க்கிறது! இசை! அழுகிறது குழந்தை! சாப்பிட மறுக்கிறது பொம்மை! பசித்துக்கொண்டே இருந்தது நிறையவே இல்லை! கோயில் உண்டியல்! அடித்ததும் ரசித்தார்கள் கோவில் திருவிழாவில் மேளம்! வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கிறது! தீவிரவாதம்! நாள் முழுக்க உண்ணாவிரதம்! யாரும் முடித்து வைக்கவில்லை! ஏழையின் பசி! மறைந்த சூரியன்! மலர்தூவி அஞ்சலி செய்தன மரங்கள்! எதிர் வீட்டின் அழகு! மறைத்துக்கொண்டிருந்தது! தன் வீட்டு அழுக்கு! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
வலைப்பின்னல்! யாரும் ரசிக்கவில்லை! சிலந்திக்கூடு! இரைதேடும் பல்லி! வாழ்க்கையிழந்தன! பூச்சிகள்! பெரும் கட்டிடங்களில்  அடைபட்டுப்போனது ஆற்றின் வாழ்க்கை! விளக்கின் அடியில் ஒளிந்தன! வெளிச்சம் தேடிய பூச்சிகள்! துள்ளிக்குதித்த மீன்கள்! குளத்தில் இறங்கியது நிலா! பற்றவைத்தவனுக்கு உருகுகிறது மெழுகுவர்த்தி! உணவு இடைவேளை! புத்தகத்தை மேய்ந்துகொண்டிருந்தான்! பசி! குழந்தைகள் தினத்தில் பெரியமனுஷனாகிறது குழந்தை! மாறுவேடப்போட்டி! மழை விட்ட இரவு! ஓயாமல் அழைக்கிறது! தவளை! வானம் தொட்ட பறவைகள்! பிடித்துக் கொண்டது புகைப்படக் கருவி! வீதியை அடைத்துக்கொண்டது! நெரிசல் இல்லை! மார்கழிக்கோலம்! கூடைநிறைய பூக்கள்! வருத்தமாய் இருக்கிறாள்! பூக்காரி! ஊடுருவல்! தெரிந்தும் தடுக்கவில்லை! விழிகள்! சொல் இழுக்கு! வழுக்கியது கவிஞனுக்கு! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! இருள்! பெரிதாக்கி காட்டுகிறது! தொலைதூர வெளிச்சம்! பசி ஆறியதும் அணைந்து போகிறது! பற்றிய நெருப்பு! கிழித்து எறியப்படுகிறது! வாழ்ந்து முடித்த நாட்கள்! நாட்காட்டி! அடக்கி பழகுகிறார்கள் பெண்கள் கழிவறைஇல்லா பள்ளி! விடிய விடிய கச்சேரி! ரசிப்பதற்கு ஆளில்லை! வயல் தவளைகள்! வீழ்ந்ததும் உயிர்த்தெழுந்தது பூமி! மழைத்துளி! இராப்பொழுதில் இடைவிடாத கச்சேரி! கைதட்டல் வாங்கியது! கொசு! வீடு நிறைய வாசனை! பரப்பிக்கொண்டிருக்கிறது! கனிந்த பழம்! ஈரக்கூந்தல்! உதறின மரங்கள்! மழை! அழுக்கு சுமத்தியதும் அழிந்து போனது நதிகள் இருண்ட பொழுது! அழகாக்கின! நட்சத்திரங்கள்! மூடிய அறைக்குள் கும்மாளமிட்டன  கனவுகள்! மொய்த்த கூட்டம்! விரட்டி அடித்தான் பழக்கடைக்காரன் ஈக்கள்! தாழ்ந்தே இருக்கிறது அன்னையின் மனசு! குழந்தைக்கு துலாபாரம்!  அழுதுகொண்டே உறங்கிப்போனது! குழந்தையின் பசி! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! தளிரின் விருந்தினர் பக்கத்தில் உங்கள் படைப்புக்கள் இடம்பெற உங்களைப்பற்றிய ஓர் சிறு ...