தளிர் ஹைக்கூ கவிதைகள்!
சுற்றிக்கொண்டே இருக்கிறது
யாராவது நிறுத்தும் வரை
மின்விசிறி
விளக்கு வெளிச்சம்
காட்டிக்கொடுக்கிறது
இரை தேடும் பல்லி
விடாத மழை
துரத்திக்கொண்டே இருக்கிறது
வீட்டு நினைவுகள்
கோயில் முழுக்க பக்தர்கள்
காலியாக இருக்கிறது
பிரசாத கூடை
பனிவிழும் இரவு
குளிரில் நனைகிறது
விரையும் வண்டிகள்.
துளைத்து எடுத்தது
ரசித்துக்கொண்டிருந்தான்
காதலியின் பார்வை!
ஈரமான பூமி
கூட்டிவந்தது குளிர்ச்சியை
தூறல் மழை!
கொழுந்து விடும் இலை
விருந்துக்குத் தயாராகிறது
கம்பளிப்புழு
செதுக்க செதுக்க
பிறக்கிறது
சிலையில் உயிர்!
வெப்பம் வாட்டுகையில்
கூட்டமாய் கிளம்பியது
மேகங்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டம் இட்டுச் செல்லலாமே! நன்றி!
Comments
Post a Comment