ஆடி முதல் வெள்ளி! அம்பாள் தரிசனம்.

  ஆடி முதல் வெள்ளிஅம்பாள் தரிசனம்.

 

நத்தம். ஸ்ரீ ஆனந்த வல்லி:


  சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்சேஷ்டியில் இருந்து 3 கி,மீ தொலைவில் அமைந்துள்ளது. நத்தம் ஸ்ரீ திருவாலீஸ்வர்ர் ஆலயம். இங்கு தெற்கு முகமாக அமர்ந்து நம் வாழ்வின் சோதனைகளை போக்கி சாதனைகளை படைக்கச்செய்து அருள்பாலிக்கின்றாள் ஸ்ரீ ஆன்ந்தவல்லி அம்பிகை. சிறிய உருவம், பெரிய கருணை உள்ளம் கொண்டவளாக அபயவரத ஹஸ்தமுடம் பாச அங்குசம் ஏந்தி முக்கண் நாயகியாய் காலில் சதங்கை அணிந்து ஸ்ரீ ஆனந்தவல்லியாக அருள்பாலிக்கும் அம்பிகையை வெள்ளிக்கிழமைகளில் தேன் அபிஷேகம் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட கலைகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

 

பெரிய பாளையம் ஸ்ரீ பவானி அம்மன்.


         சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் அன்னை ஸ்ரீ மாரியம்பிகை ஸ்ரீ பெரியபாளையத்து அம்மனாக சுயம்புவாக அவதரித்து அருள்பாலித்து வருகின்றாள். ஆடிமாத நாயகியான பெரியபாளையத்து அம்மனுக்கு ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி 10 வாரங்கள் திருவிழா நடைபெறுவது சிறப்பு. அம்மை நோயை குணப்படுத்தி அருளும் மாரியம்பிகையின் கருணை மிகச்சிறப்பு.

 

செம்புலிவரம் ஸ்ரீ செங்காளம்மன்.


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ளது, செம்புலிவரம் என்ற கிராமம். இங்குள்ள செங்காளம்மன் கோவில் சிறப்புமிகு ஆலயங்களில் ஒன்றாக பக்தர்களால் போற்றப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்த இந்தப் பகுதி முன் காலத்தில், செம்புலிவனம் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் இருந்து வடநாட்டிற்கு படையெடுத்துச் சென்ற சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதிக்கு வந்தபோது தன் படைகளுடன் இரவு நேரத்தில் தங்கினான். அப்போது   செம்புலிகள் வாழும் வனத்திற்கு வந்து விட்டீர்கள். தாயான உன்னையும் உன் படைகளையும் காப்பேன்.என்று அசரீரி கேட்டது. அம்பிகையும் வில்லும் வாளும் ஏந்தி ஒளிவெள்ளத்தில் காட்சி அளித்தாள். அந்த ஒளிவெள்ளத்தில் புலிகள் பயந்து ஓட  மன்னன்  அம்பிகையை பணிந்து அவள் குடியிருக்க ஓர் ஆலயம் எழுப்பினான். இவ்வாலயத்தில் குடிகொண்டிருக்கும் செங்காளம்மன்  சங்கில் இருந்து தோன்றியதால் சங்காத்தம்மன் என்றும் அழைக்கப்பட்டு தற்போது செங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறார். புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்த பின்னரே, வாகனத்தை ஓட்டுகின்றனா். இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், எந்த விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்த அன்னையிடம் வேண்டிச் செல்கின்றனர்

 

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், எருமைவெட்டிப்பாளையம்.


   சென்னைகாரனோடையில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எருமைவெட்டிப்பாளையம். இங்கு குசஸ்தலை நதிக்கரையோரம் எழிலுற அமைந்துள்ளது. அங்காளபரமேஸ்வரி ஆலயம். சுற்றுவட்டார மக்களின் குலதெய்வமாக காளி ஸ்வரூபத்தில் அம்பாள் எட்டு கரங்களுடன் மகிஷனை வதம் செய்த கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். ஆடி மாதத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவ்வாலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்துவருகின்றனர் சுற்றுப்புற மக்கள்தேவி இங்கு மகிஷனை வென்றதால் எருமைவெட்டிப் பாளையம் என்று ஊர் வழங்கப்படுகிறது. மாசி மாதம் அமாவாசையில் நடைபெறும் மசானக் கொள்ளை நிகழ்வு இங்கு பிரசித்தமாகும்.

 

செங்குன்றம் வீரகாளியம்மன்.


  செங்குன்றம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் ஆலயம். மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம். வீரகாளியம்மன் இங்கு அருள்பாலித்து பக்தர்களின் மனக்குறை போக்குகின்றார். கிரக தோஷம், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அம்மனை வழிபாடு செய்து குறை களையப்படுகின்றனர். ஆண்டுதோறும் பங்குனி மாத்த்தில் பவுர்ணமி தினத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

 

சப்த கன்னியர் கோயில் சிறுவாபுரி.

 


சிறுவாபுரி முருகன் கோயில் செல்லும் வழியில் குளக்கரையில் சிறு ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் சப்த கன்னியர். தமிழ்மரபில் கன்னியம்மன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.கன்னிகாபரமேஸ்வரியான அம்பிகை ஏழு வடிவங்களில் இங்கு அருள்பாலிக்கின்றார். இந்த கிராமத்தின் கிராம தேவியாகவும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

 

துர்க்கை அம்மன் ஆலயம்- சிறுவாபுரி.


 சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் வாகன்ங்கள் நிறுத்துமிடம் அருகே ஒரு சிறு கோயிலில் அருள்பாலிக்கின்றாள் தேவி துர்க்கா. முருகரை வழிபடும் முன் இந்த துர்கையை வழிபட்டு செல்வது மரபாக கருதப்படுகின்றது. இராமரின் பிள்ளைகளான லவ குசர்கள் இந்த அம்மனை வழிபாடு செய்தே இராமரை எதிர்த்து போரிட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

கீழ்மேனி  ராஜ ராஜேஸ்வரி ஆலயம்:


     சென்னைகும்மிடிபூண்டி வழியில் சிறுவாபுரி செல்லும் வழியில் அமைந்திருக்கிறது கீழ்மேனி கிராமம். இங்கு தேவி லலிதா பரமேஸ்வரி பிரம்மாண்டமாய் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்அபயவரத ஹஸ்தமுடன் முக்கண் நாயகியாக சிம்மாசனத்தில் கரும்புடன் அமர்ந்து அருளும் இறைவியை வழிபட வாழ்வில் இன்பங்கள் வந்து சேரும்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அம்பிகைகளை தரிசித்து வாழ்வில் ஆனந்தம் அடைவோமாக

 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2