மின்சாரக் கன்னி”

 

மின்சாரக் கன்னி

                    நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 

சில பெண்கள் அழகாகத்தான் இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள் அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு.”

   சுஜாதாவின் சிறுகதை ஒன்றை கிண்டிலில் படித்துக் கொண்டிருந்த நான் அதை க்ளோஸ் செய்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். நான் ஸ்வப்னா!  ராமின் மனைவி. . மணி ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சநேரத்தில் ராம் வந்துவிடுவான். அவனுக்கு சுவையான டீ போட்டுத்தரவேண்டும். அப்புறம் நைட் டின்னருக்கு  ஏதாவது யோசிக்க வேண்டும். டீ சூடாக இல்லையென்றால் முகம் சுளிப்பான். அவன் கழட்டிப்போட்ட ஷூவை எடுத்துச்சென்று ஷெல்ப்பில் வைக்க வேண்டும் சட்டையையும் பேண்ட்டையும் எடுத்து துவைக்கும் கூடையில் போட வேண்டும். அதற்குமுன்னால் அவன் அணிந்து கொள்ள ஷார்ட்ஸும் பனியனும் எடுத்துத் தர வேண்டும். இப்படி ஒரு ஆதர்ச மனைவியாக நடந்துகொண்டால்தான் மொத்த ஆண்குலமே என்னைப் பாராட்டும்.

காலிங் பெல் அடித்தது.



எழுந்து போய் கதவைத்திறக்கும் முன் வியுவரில் பார்த்தேன்  ராம் இல்லை! வேறு யாரோ?

முழுக் கதவையும் திறக்காமல் லேசாகத் திறந்து,” யார் நீங்க? என்ன வேண்டும்?” என்றேன்.

வந்தவன் தற்கால தமிழ்சினிமா வில்லன் போல இருந்தான். அவன் பார்வை அவள் உடல் முழுதும் அலைந்தது.

 எனக்கு ஒருவித எரிச்சலாக இருந்தது. ”கேக்கறேன் இல்லே! யார் நீங்க? என்ன வேணும்? ”என்று மீண்டும் கேட்க

இங்கே மிஸ்டர் ஜெயதேவ் என்று..!”

இல்லை! இங்கே அதுபோல் யாரும் இல்லை! ”என்றபடி கதவை அறைந்துசாத்தினேன்.

மே.. மேடம் எக்ஸ்கியுஸ்மீ! ”என்ற அவன் குரல் காற்றில் கரைந்து மறைந்து போனது

இவள் முகம் கோபத்தால் சிவந்து போனது. பொறுக்கிப் பயல்! என்னமாய் ஊடுறுவிப் பார்க்கிறான்.பர்ஸ்ட்ட்! ராஸ்கல்! ராம் வந்ததும் கூறவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடடே! மணி ஆறு ஆகிவிட்டது. ராம் வரும்போது ஃப்ரஷ்ஷாக முகம் கழுவி பளிச்சென்று இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கோபித்துக் கொள்வான். வேகமாகச்சென்று பாத்ரூம் கதவைப் பூட்டிக்கொண்டேன்.அங்கிருந்த கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்து ஸ்வப்னா நீயும் சரிதா போல் அழகுதான்! என்று சொல்லிக்கொண்டேன்!.

மீண்டும் வாசல் மணி அடித்தது.

இப்போது ஸ்வப்னா புது சேலையில் முகம் கழுவி பவுடர்போட்டு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும் கூந்தலில் ஒருமுழம் மல்லிகைப் பூவோடும் இருந்தாள். ராம்தான் வந்துவிட்டான் என்றுபோய் கதவைத் திறந்தாள்

வெளியே ஒருவன் பான் பராக் மென்றபடி நின்றிருந்தான். அவளிடம் கொரியர் வந்திருக்கு! ”என்று ஒரு கவரைத் தந்தவன் தரும்போதே அவள் விரல்களை ஸ்பரிசித்தான்.

 ஸ்வப்னா திடுக்கிட்டு விரல்களை விலக்கிக்கொண்டு அவனை முறைத்தாள்.

 ஸா..ஸாரி மேடம்!” என்ற அவன் இவளை பார்த்தபடியே வெளியேறினான்.  நான் கோபமாய் இந்த ராம் ஏன் வரவில்லை! இந்த நேரம் வந்திருக்க வேண்டுமே! இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வரட்டும் வைச்சுக்கிறேன்! என்று முணுமுணுத்தவாறே கதவை வேகமாகச் சாத்தினேன்.

  செல்போன் ஒலித்தது.

ஓடிச்சென்று எடுத்தேன்.” ஹலோ! ”

ஸ்வப்னா டார்லிங்!”

ராம்! வொய் ஆர் யூ லேட்! இன்னும் ஏன் வரலை!”

ஸ்வப்னா! ஸாரி டியர்! இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்சம் வொர்க் அதிகம் இருக்கு! இன்னும் டூ அவர்ஸ் ஆகும் நான் வர ..”

வாட் டூ ஹவர்ஸா! ஃபீல் லோன்லி டியர்! ஐயம் அஃப்ரைடு!”

நோ! நோ! டோண்ட் அஃப்ரைடு! ல் கம் க்யுக்லி! ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட் மீ!”

ராம் இன்னைக்கு யார் யாரோ நம்ம வீட்டுக்கு வர்றாங்க!அவங்க பார்வையே சரி இல்லை! நீ சீக்கிரம் வந்துடு! எனக்கு பயமாயிருக்கு!”

ஸ்வப்னா! பயப்படாதே! நாம இருக்கிறது அப்பார்ட்மெண்ட் வீடு! பயமே வேண்டாம். தைரியமா இரு! நான் சீக்கிரம் வர முயற்சி பண்றேன்! ”என்றவன் போனை வைத்துவிட்டான்.

மணி எட்டைக் கடந்துவிட்டது. ராம் இன்னும்வரவில்லை! டீவியில்  ஏதோ சீரியலைப் போட்டு அதை வேண்டா வெறுப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன்! எப்போதுதான் இந்த ராம் வருவானா? அவனோடு இன்று பேசவேக் கூடாது.. மனதில் முணுமுணுக்க  

இப்போது காலிங்பெல் மீண்டும் அடித்தது.

ராம்தான் வந்திருப்பான் என்று ஆசையாகப் போய் கதவைத்திறந்தேன்  

வெளியே ராம் இல்லை! மூன்றுபேர் நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பதட்டம் தெரிந்தது

 யார் ? என்ன வேண்டும் உங்களுக்கு?”

நீ நீங்கள் ஸ்வப்னாதானே!”

 எஸ்..”

உங்கள் ஹஸ்பெண்ட் மிஸ்டர் ராம்குமார்ஆபிஸிலிருந்து வரும்போது…”

ராம்ராமுக்கு என்ன ஆயிற்று…! ”

  ராம்குமாருக்கு ஆக்ஸிடெண்ட்..!  தலையில் பலத்த அடி…! ”ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கி

அவர்கள் முழுதாய் முடிக்கும் முன்னரே மயங்கி விழுந்தேன்

 

  ராம் என்ற ராம்குமார் முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த அறையில் இருந்த கணிணி முன் அமர்ந்து இருந்தான்.

  பாஸ் நம்ம ப்ளான் வொர்க் அவுட் ஆகுது..! ”என்று அவனிடம் கூறினான் அந்த தமிழ்ப்பட வில்லன். ஆம்! ராம் வீட்டிற்கு வந்து ஜெயதேவ் இருக்கிறாரா என்று கேட்டவன் தான்.

  எக்ஸலண்ட் ராம்! ”என்றார் பாதி வழுக்கையோடு அங்கே குஷன் நாற்காலியில் அமர்ந்து கணிணி திரையில் நடப்பது எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டிருந்த கிஷோர்குமார்.

முழுக்கிணறு தாண்டவில்லை சார்! பாதிக்கிணறுதான் தாண்டி இருக்கிறோம்!”

இதுவே பெரிய சாதனை ராம்!”

ராம் புன்னகைத்தான்!” ஒரு ரோபோவை அச்சு அசல் பெண்ணாகவே உருவாக்கி அவளை ஒரு குடும்பத்தலைவியாகவே பழக்கி எல்லா வேலையையும் செய்ய வைத்து  ஒரு கணவனுக்கேற்ற மனைவியாகவே உருவமைத்து சாதித்துவிட்டாய். சாதாரண பெண்களுக்கு உரிய எல்லா உணர்வுகளையும் அந்த ரோபோவிற்குள் ஊட்டிவிட்டாய்.”

எல்லாம் ஓக்கேதான் சார்! எனக்கு ஆக்ஸிடெண்ட் என்றதும் ஸ்வப்னா மயங்கியது வரை சரி இதையெல்லாம் ப்ரோகிராமிங் செய்து விட்டேன். எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் எல்லா உணர்வுகளையும் கூட  ப்ரோகிராமிங்க் செய்துவிட்டேன். அதை செக் செய்தும் பார்த்தாகிவிட்டது. இப்போது மிச்சம் இருந்தது இந்த பய உணர்வு. அதுவும் பூர்த்தியாகிவிட்டது.

 அடுத்து இருப்பது பெண்கள் ஆபத்து என்னும் போது தற்காத்துக் கொள்வது! அதை சோதிக்கத்தான் இப்போது நம் குழுவினர் இரண்டு பேரை முதலில் அனுப்பி சோதித்தோம்! அடுத்து எனக்கு ஆக்ஸிடெண்ட் என்று மூவரை அனுப்பி இருக்கிறேன்.”

   அவர்கள் ஸ்வப்னாவை கடத்துவார்கள்! யாரும் இல்லாத இடத்திற்கு கூட்டிச்செல்வார்கள் அவளிடம் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். அப்போது ஸ்வப்னா என்ன செய்கிறாள் என்பதை நாம் லைவ்வாக பார்க்கப் போகிறோம்!”

  இதில் ஸ்வப்னா தேறிவிட்டால்  உலகின் சிறந்த குடும்பத்தலைவி ரோபோவை தயாரித்த பெருமை உன்னைச்சேரும்.”

கிஷோர்குமார்  ராமிடம் கைகுலுக்கிய படியே சொல்ல  கணிணித் திரையில் ஓட ஆரம்பித்தது காட்சிகள்.

 

விழுந்து கிடந்த ஸ்வப்னாவை தூக்கி ஆட்டோவில் ஏற்றினார்கள் மூவர்.   ஒருவன் ஆட்டோவை ஓட்ட ஸ்வப்னாவை நடுவில் வைத்து இருபுறமும் இருவர் அமர ஆட்டோ வேகமெடுத்தது.

நகர்ப்புற ஏரியாவைக் கடந்து புறநகர் பகுதிக்குள் நுழையவும் சாலையில் வெளிச்சம் குறைந்தது ஒரு சந்துக்குள் நுழைந்த போது எதிரே ஓர் ஆட்டோ வழி மறித்தது.

  இது ஒன்வேன்னு தெரியாதா மடையா!  எதிரே வர்ற?’” எதிரே வந்த ஆட்டோவில் வந்தவன் கேட்க,

  ஸாரி பாஸ்! இவங்களுக்கு உடம்பு சரியில்லை! மயங்கிட்டாங்க! அதான் அவசரமா போய்க்கிட்டிருக்கோம்!”

     தோ பாருடா! ஆட்டோவுக்குள்ளே குட்டி இருக்குது! ஆமாம் எங்கேயிருந்து தள்ளிட்டு வந்தீங்க! ”

 மரியாதையா பேசுங்க! தள்ளிட்டுல்லாம் வரலே! .”.

அட பொறுக்கி நாய்களா! உங்களுக்கென்னடா மரியாதை! ஆமா! என்னடா பண்ணீங்க அவளை! இப்படி மயங்கி கிடக்கிறா?”

   இல்ல நாங்க எதுவும் பண்ணலை! அவங்க ஹஸ்பெண்டுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுன்னதும் மயங்கிட்டாங்க! ஆஸ்பிடல் கூட்டிக்கிட்டு போறோம்!”

  கதை நல்லாத்தான் இருக்கு! ஆனா நம்பற மாதிரி இல்லையே!”

 நம்பனா நம்புங்க! நம்பாகிட்டி போங்க! கொஞ்சம் வழி விடறீங்களா?”

தோ பாருடா! நம்ம ஏரியாவிலேயே வந்து.. நம்மளையே மிரட்டறாங்க! டேய் பசங்களா இறங்குங்கடா..”

 அந்த ஆட்டோவில் இருந்து ஐந்து பேர் இறங்க!

பாஸ்! பாஸ்! ஆபத்து! ரவுடிப்பசங்க கிட்டே சிக்கிட்டாங்க!”  வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த உதவியாளன் சொல்ல..

  ராம் திகைத்தான்! ”இப்படி ஒரு க்ளைமேக்ஸ் நானே எதிர்பார்க்கலையே!”

 என்ன பாஸ் பண்ணப் போறீங்க?”

நாம ஒண்ணும் பண்ண வேண்டாம்! எல்லாம் ஸ்வப்னாவே பார்த்துப்பாள்! நாம வேடிக்கைப் பார்த்தா மட்டும் போதும்!”

வீடியோவை பார்க்க ஆரம்பித்தார்கள்.

 டேய்! ஆட்டோவை விட்டு அப்படியே ஓடுங்க!”

வேண்டாம் சார்! இது உங்களுக்கு நல்லதில்லை!”

நல்லது எது கெட்டது எதுன்னு நாங்க பார்த்துக்கிறோம் நீங்க கிளம்புங்க!”

 முடியாது! இப்படியே விட்டுப்போனா எங்க பாஸ் எங்களை..!”

 ஹோஉங்களுக்கு ஒரு பாஸ் வேற இருக்கானா? யாருடா அவன்?”

 இருக்கான் இல்லே! இருக்கார்!”

 என்னடா வில்லனுக்கெல்லாம் மரியாதை கொடுக்கிறீங்க!”

 அவர் வில்லன் இல்லே! ஹீரோதான்!”

ஹீரோவா அவர் வந்து இந்த ஹீரோயினியை காப்பாத்துவாரா!”

 அவர் வரமாட்டார்! ஆனா காப்பாத்துவார்.”

மயங்கிக்கிடந்த  எனக்குள் மீண்டும் பேட்டரி ஆன் ஆகியது.. என்னுடைய அனைத்து உறுப்புகளும் மீண்டும் இயங்கத்துவங்க மெலிதாக கண்விழித்தேன்.

 என் மெமரி பூட் ஆகியது..  ஏதோ ஆபத்து என்று சமிக்ஞை கொடுத்தது.

 என் உடல் முழுவதும் மின்சாரம் சர்க்குலேஷன் ஆனது.

திரையில் பார்த்துக்கொண்டிருந்த கிஷோர்குமார் கேட்டார். ”ராம் என்ன ஆகுது? இப்ப என்ன நடக்கும்?”

தனியா இருக்கும் பெண்களை சீண்டும் ஆண்களுக்குத் தண்டணை தரனும்னு சொல்லுவீங்க இல்லே!”

 ஆமாம் சொல்லுவேன்!”

இப்ப ஸ்வப்னா தண்டனைத் தரப்போறா!”

அது ரோபோ! எப்படி தரமுடியும்?”

நான் ப்ரோகிராமிங் பண்ணியிருக்கேன் சார்”!

 எப்படி?”

இப்ப அவ தனியா ஆறு பேரை சமாளிக்கணும்! அதுக்காக அவ சண்டை எல்லாம் போட முடியாது! தனக்கு ஏதோ ஆபத்துன்னு அவளோட மெமரியிலே இப்போ தகவல் பூட் ஆகியிருக்கு! அந்த தகவல் பூட் ஆனதும்ஆட்டோமேடிக்கா அவ உடம்புலே இருக்கிற பேட்டரியிலே இருந்து கொஞ்சம் கரண்ட் பாஸ் ஆகும். யாரும் அவளை நெருங்கி தொட்டா உடனே ஷாக் அடிக்கும். அதே சமயம் அவளும் தற்காப்புக்கு தன்னோட கையை பயன்படுத்துவா அப்படி அவன் பயன்படுத்தும்போது அது ஆண்களோட உறுப்பைத் தாக்கிற மாதிரி செட் பண்ணியிருக்கேன். மின்சாரம் தாக்கின அதுவும் மெயின் பாயிண்ட்லே தாக்கினா அவன் என்ன ஆவான்?”

 செத்துருவான்!”

முழுசா இல்லே! அப்புறம் அவன் ஆம்பளைன்னு சொல்லிக்க முடியாது! அந்த அளவுக்குச் செத்துருவான்!”

இந்த ரோபோவால பாலியல் குற்றங்கள் கூட குறைய வாய்ப்பிருக்குன்னு சொல்லு!”

குறையறதா! இனிமே இருக்கவே இருக்காதுன்னு நான் நம்பறேன்.”

 


 தோடா! குட்டி கண்முழிச்சுக்கிச்சு!”

 ஓட ஆரம்பிக்கிறதுக்கு முன்னே போய் மடக்குங்கடா!”

 நான் மெல்ல எழுந்து நின்றாள். ஆறுபேர் தன்னை சூழ்ந்து நிற்பதை பார்த்தேன். புரொகிராமிங் செய்யப்பட்ட வார்த்தைகளை பேசினேன்.

   ஏய்.. நீங்கள்ளாம் யாரு! கிட்டே வராதீங்க! வந்தீங்க…”

 அட சும்மாகிடம்மே! உன்னை மாதிரி எத்தனை பொண்ணுங்களை பார்த்திருப்போம்!”

  வேண்டாம்! வேண்டாம்! அப்புறம் நீங்க கஷ்டப்படுவீங்க!”

 தோ பாருடா! கஷ்டப்படாம எதாவது கிடைக்குமா? கஷ்டப்படாமே நீதான் கிடைப்பியா!”

   ராஸ்கல்ஸ் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்!”

இன்னாமே நீ என்ன ஸ்கூல் டீச்சரா?  சொல்றியா மாமு! சொல்றியா மாமுன்னு பாடியே கத்துக் கொடுக்கிறியா!” ஒருவன் கிண்டலாகச் சொல்ல

 சொல்றேன் மாமு! ஓங்கிஓர் உதை விடப்போறேன் மாமூ என்று கைகளை நீட்ட விரல் முனையில் மின்சாரம் பாயத்தயாராக இருந்தது

தோடா! பொண்ணு கராத்தே எல்லாம் கத்திருக்குது போலஎன்று

அந்த ஆறு பேரும் என்னை  நெருங்கினார்கள்!

(முற்றும்) 


(சென்ற வருடம் சுஜாதா பிறந்த நாளையொட்டி முகநூலில் பாலகணேஷ் அவர்கள் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கதை) 

 

 

. 

 

Comments

  1. நவீன காலத்துக்கு ஏற்ற கதை. அருமையாக இருந்தது நண்பரே

    ReplyDelete
  2. கதை சுஜாதா நடையில் இருந்தாலும் ஆங்கில வார்த்தைகள் அதிகம். கதை சுவாரசியமாக இருந்தது, விறுவிறுப்புக்கு குறைவில்லை.
    Jayakumar

    ReplyDelete
  3. சூப்பர் சுரேஷ் பாபு

    ReplyDelete
  4. இன்னும் இருபது ஆண்டுகளில் இதுதான் நடக்கும். சிறந்த ஐடியா.

    ReplyDelete
  5. கிஷோர்குமார், ராம், கணினியில்
    காட்சிகள், ரோபோவாய் ஸ்வப்னா என்று மாற்றி மாற்றி வரும் போது இடையில் கதாசியர் வேறு கதையை வழி நடத்தி...
    கதை சரியாக எழுதப்படாதது பளிச்சென்று பல்லிளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எழுதி சில முறை வாசித்து திருத்தங்கள் செய்துதான் போட்டிக்கு அனுப்பினேன். போட்டியில் பரிசும் கிடைத்தது. ஆனால் உங்களைப் போன்றே இன்னும் சிலரும் இக்கதையில் குழப்பம், தவறு இருப்பதாகச் சொல்கின்றனர். இப்போது மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். எங்கு தவறு என்று புரியவில்லை. ரவுடிகள் நெருங்குகையில் மயங்கிக்கிடந்த எனக்குள் மீண்டும் பேட்டரி ஆன் ஆகியது.. என்னுடைய அனைத்து உறுப்புகளும் மீண்டும் இயங்கத்துவங்க மெலிதாக கண்விழித்தேன்.” என்ற வரிகளில் தவறு இருப்பதாக உணர்கிறேன். அங்கு ஸ்வப்னாவிற்கு என்ற வார்த்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். திருத்திக் கொள்கிறேன். விமர்சனத்திற்கு நன்றி!

      Delete
    2. அன்பு தளிர் சுரேஷ்,

      தாங்கள் தானா நத்தம் எஸ். சுரேஷ் பாபு? அறிந்ததில் மகிழ்ச்சி.

      என் சென்னை நண்பர் ஒருவர் படித்துப் பாருங்கள் என்று இதை அனுப்பியிருந்தார். படித்த்தும் மனதில் படிந்ததை அப்படியே எழுதி விட்டேன், என் இயல்புப்படி. மன்னிக்கவும்.

      பரிசு பெற்றமைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

      மிக்க அன்புடன்,
      ஜீவி

      Delete
  6. வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் எனது அன்பு நன்றிகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2