Posts

Showing posts from July, 2023

யார் பெரியவன்? சிறுவர் கதை

Image
  யார் பெரியவன்? ஆதியூரில் இரண்டு புலவர்கள் வசித்துவந்தனர். ஒருவர் வேலப்பகவி மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தது. புலவர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கலாமா? கூடாதல்லவா? இது அவர்களுக்குத் தெரியவில்லை.ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டுக் கொள்வர்.    ஒருநாள் வேலப்பர் வெளியில் கிளம்பினார். அதை அறிந்த சந்திரரும் வேலப்பன் எங்கோ செல்கிறானே எதற்காகவோ என்று அவரை பின் தொடர்ந்தார். சந்திரகவி தன்னை பின் தொடர்வதை அறிந்த வேலப்பரும் நடையை விரைவாக்கினார். ஆனாலும் சந்திரகவி விடுவதாய் இல்லை.பொழுதோ சாய்ந்துவிட்டது. அச்சமயம் எதிரே ஒரு சத்திரம் காணப்பட்டது.    சத்திரம் என்பது ஒரு தங்குமிடம். இது அக்காலத்தில் வழியிடங்களில் வழிப்போக்கர்கள் தங்கி பசியாறி களைப்பு நீங்கி செல்ல உதவும். இங்கு இலவசமாக உணவும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இச்சத்திரங்களை அரசர்களும் செல்வந்தர்களும் கட்டிவைத்து பராமரித்து வந்தனர். அத்தகைய ஒரு சத்திரத்தில் தங்க வேலப்பர் முடிவெடுத்தார். சத்திரத்தின் உள்ளே நுழைந்தார். அவரை தொடர்ந்து சந்திரரும் நுழைந்தார்.    இவர்கள் இருவரைப் பற்றி ஓ

புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு!

Image
  புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு!   நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தோன்றியது என்று படித்திருக்கிறோம். ஏனெனில் மக்கள் சமூகம் சமூகமாக குடியேறி வாழ நீர் இன்றியமையாத ஒன்று. நீர்வளம் மிக்க பூமி மற்ற எல்லா வளங்களிலும் வளப்பமாக இருக்கும்.   ஆறுகள் அக்காலம் தொட்டு இக்காலம் வரை மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. அதற்கடுத்ததாய் ஏரிகள். தமிழகத்தில் சித்திரைமாதம் முதல் ஆனி மாதம் ஆரம்பம் வரை கோடை வெயிலின் தாக்கம் கூடுதலாய் இருக்கும். ஆனிமாத கடைசிவாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும்.   தென்மேற்கு பருவமழை கொஞ்சம் தீவிரம் அடைந்து ஆடிமாதம் பாதியில் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடும்.காய்ந்து வறண்டு கிடந்த நதிகளில் கானல்நீர் மறைந்து நன்னீர் பாய்ந்தோடும் காட்சி காண்பதற்கு அழகு என்பதோடு நம் வாழ்க்கைக்கும் அழகு சேர்க்கும் ஒன்றாகும்.   இந்த புதுவெள்ளம் பாய்ந்தோடும் ஆடி பதினெட்டாம் நாளை தமிழக மக்கள் ஆறுகளுக்கு நன்றி சொல்லும் நாளாக ஆடி பதினெட்டாம் பெருக்காக காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் கூட ஆடிபதினெட்டாம் பெருக்கு அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும்.

சிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2

Image
  சிரிச்சுக்கிட்டே இருங்க பகுதி 2   நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.     1.      நம்ம தலைவருக்கு நக்கல் அதிகம்னு எப்படிய்யா சொல்றே?   கவர்னருக்கு அனுப்பற லெட்டருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமலேயே அனுப்பிட்டு ”எப்படியும் திரும்பித்தானே வரப்போவுது” அதுக்கு எதுக்கு ஸ்டாம்ப்னு கேட்கிறாரே! 2.    லேடி டிரைவருக்கு தலைவர் கார் வாங்கிக் கொடுத்தது தப்பாப் போயிருச்சா ஏன்?   தலைவரோட சம்சாராத்துகிட்டே இதை யாரோ “புகார்” பண்ணிட்டாங்களாம்!     3.     தலைவர்கிட்டே அமலாக்கத்துறை விடியவிடிய விசாரணை பண்ணுச்சாம்!      “ கட்சிக்காரங்கதான் தூங்க விடலைன்னா இவங்களுமா?   4.    தக்காளி விலை ஏறுனதும் தலைவர் ரொம்பவும் குஷி ஆயிட்டாரே ஏன்?   சட்டை கொஞ்ச நாளைக்கு “சிவப்பா” ஆகாதிருக்கும்கிற சந்தோஷம்தான்!   5.    டாஸ்மாக்   ஊழல்ல சிக்கின தலைவர் கோர்ட்ல நீதிபதி கேட்டதுக்கு என்ன பதில் சொன்னாராம்!      இதெல்லாம் கஷ்டப்பட்டு”சில்லறை சில்லறையா” சேர்த்ததுன்னு சொன்னாராம்!   6.      எதிரியை துரத்தி அடிப்பது போல கனவு கண்டேன் அமைச்சரே!   நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் மன்னா! கனவில் ஓடியது நீங்களா? எதிரியா?  

படித்ததில் பிடித்தது- பகிர்வு!

Image
    அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரை பார்த்து வணங்கினான். தன்னுடைய ஹீக்காவில் மெய் மறந்திருந்த அக்பர் தன் சுய நினைவுக்கு திரும்பியவனாக அப்துல்லை உட்காரும்படி சைகை செய்தான். அப்துல் தனக்கெதிரே அமர்ந்திருந்த அக்பரை ஒரு முறை உற்று பார்த்தான்.அம்மை வடுக்கள் நிரம்ப அதே நேரத்தில் கவர்ச்சி நிறைந்த அந்த முகத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறான்.இப்போது அந்த முகத்தில் சோகமும் வருத்தமும் இழையோடிக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான். “சொல்லுங்கள் சுல்தான்! என்னை அழைத்த காரணம்...?" அப்துல்லின் குரல் மாளிகை சுவர்களில் எதிரொலிக்கிறது. “ஒரு படையெடுப்பை நிகழ்த்த போகிறேன் அப்துல். அதற்கு நீ தலைமை தாங்க வேண்டும்." அக்பரின் குரல் சன்னமாக ஒலிக்கிறது. “கட்டளையிடுங்கள்.வெற்றிகனியை பறித்து வந்து காலடியில் சமர்ப்பிக்கிறேன்!" அக்பரின் முகத்தில் ஒரு ஏளன புன்னகை ஓடியது. “ராஜபுதனத்தின் மேவார் ராஜ்ஜியம் நீ வெல்ல வேண்டியது.கொல்ல வேண்டியது ராணா பிரதாப் சிங்கை..." கம்பீரமாக ஒலித்த அக்பரின் குரலால் அப்துல்லின் முகத்தில் பீதி தாண்டவ

மின்சாரக் கன்னி”

Image
  ” மின்சாரக் கன்னி ”                     நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   “ சில பெண்கள் அழகாகத்தான் இருக்கிறார்கள் ; அவர்களில் சரிதா ஒருத்தி . சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள் அவர்களில் நான் ஒருத்தி . அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை . நான் சொல்வது அழகு . வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு .”    சுஜாதாவின் சிறுகதை ஒன்றை கிண்டிலில் படித்துக் கொண்டிருந்த நான் அதை க்ளோஸ் செய்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன் . நான் ஸ்வப்னா !   ராமின் மனைவி . . மணி ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது . இன்னும் கொஞ்சநேரத்தில் ராம் வந்துவிடுவான் . அவனுக்கு சுவையான டீ போட்டுத்தரவேண்டும் . அப்புறம் நைட் டின்னருக்கு   ஏதாவது யோசிக்க வேண்டும் . டீ சூடாக இல்லையென்றால் முகம் சுளிப்பான் . அவன் கழட்டிப்போட்ட ஷூவை எடுத்துச்சென்று ஷெல்ப்பில் வைக்க வேண்டும் சட்டையையும் பேண்ட்டையும் எடுத்து துவைக்கும் கூடையில் போட வேண்டும் . அதற்குமுன்னால் அவன் அணிந்து கொள்ள ஷார்ட்ஸும் பனியனும் எடுத்துத் தர வேண்ட