எதிர்வினை! ஒரு பக்க கதை. (குமுதம் வார இதழில் வெளியானது)

 எதிர் வினை     ஒருபக்க கதை!   .   

என்னங்க! நான் எங்க அம்மாவீட்டுக்கு போய் ஒருவாரம் இருந்துட்டு வரட்டுமா? போய் ஆறுமாசம் ஆகுது!” தேவி கேட்கவும்

  ”ஒருவாரமா? அதெல்லாம் வேண்டாம்! போனமா வந்தமான்னு காலையிலே போயிட்டு சாயந்திரம் கிளம்பிடலாம்! நானும் வரேன்!” என்றான் நந்தன்.

  ”ஏங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு வயசானாலும் தாய்வீடுங்கிறது சொர்கம் மாதிரிங்க!நீங்க ஏன் அனுப்பவே மாட்டேங்கீறீங்க? அனுப்பினாலும் உடனே வந்துடனும்னு சொல்றீங்களே? உங்க அக்கா தங்கச்சியெல்லாம் இங்கே வந்து தங்கிட்டு போகலையா?”

    “அதனாலேதான் வேணாம்கிறேன்!”

 “என்னங்க சொல்றீங்க?”

 எங்க அக்கா தங்கச்சி வந்தா நீ என்ன சொல்றே?  வந்துட்டாளுங்க! குடும்பத்து சொத்தை அள்ளி எடுத்துட்டு போக! கல்யாணம் கட்டிகிட்டு போகும்போதே எடுத்துகிட்டு போனது பத்தலைன்னு அப்பப்ப வந்து மூட்டைக்கட்டிகிட்டு போறாங்க!” புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் கோள்மூட்டி சண்டை மூட்டி விடறாளுங்க!” இப்படியெல்லாம் நீ புலம்பறே இல்லை?”

    ”ஆமாம்! அதிலென்ன தப்பு?” 

 “தப்பே இல்லைதான்!”  நீ இங்கே என் அக்கா தங்கச்சிகளை சொல்ற மாதிரி  அங்கே உன் அண்ணி உன்னை பத்தி அவ புருஷன் கிட்டே புலம்பலாம் இல்லையா? அது உனக்கு மட்டுமா  அசிங்கம்! கட்டின எனக்கும்தானே அசிங்கம்.! அதான் போக வேணாங்கிறேன்! போனாலும் உடனே திரும்பிடனுங்கிறேன்!” என்று நந்தன் சொல்ல,

 தன்வினையே தனக்கு எதிர்வினையாகி நிற்பதை கண்டு  பதில் பேச முடியாமல் நின்றாள் தேவி.


தங்கள் வருகைக்கு நன்றி!  கதை குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2