Posts

Showing posts from February, 2018

இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!

இன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்! எங்கும் எதிலும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  25th February 2018 05:37 PM   |    அ+ அ  அ-     |   எங்கும் எதிலும் வியாபிக்கும் காற்று உலகை இயக்குகிறது! எங்கும் எதிலும் ஊற்றெடுக்கும் பாசம் அன்பை வளர்க்கிறது! எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் உயிர் வாழ்க்கையை வளர்க்கிறது! எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ஊழல் நாட்டை நாசம் செய்கிறது! எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் இனவெறி நாட்டை துண்டாடுகின்றது! எங்கும் எதிலும் பிறப்பெடுக்கும் மதவெறி மதங்களை கொன்றுகுவிக்கிறது! எங்கும் எதிலும் துளிர்த்திருக்கும் மனிதம் இப்பூமியினை உயிர்ப்பிக்கிறது! எங்கும் எதிலும்  கசிந்திருக்கும் ஈரம் அகிலத்தின் தாகம் தீர்க்கிறது! எங்கும் எதிலும் காணும் பசுமை தேசத்தை வளர்ச்சியடைய வைக்கிறது! எங்கும் எதிலும் நான் எனும் அகந்தை பொங்குகையில் நாம் அழிந்துபோகிறது! எங்கும் எதிலும் ”நான்” அழிந்து ”நாம்” என்று ஓங்குகையில் உயர்வு தானாய் உருவெடுக்கிறது! தங்களி

பாசவலை!

Image
பாசவலை! ஒருவாரம் தங்கிப் போகலாம் என்று தான் பெண் கொடுத்த சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் பங்கஜம். அங்கு அவள் கண்டது அவளுடைய கண்களாலேயே நம்ப முடியவில்லை. பங்கஜத்தின் சம்பந்தி ரஞ்சிதத்தை அவளுடைய மகனும் மருமகனும் போட்டிப் போட்டுக் கொண்டு தாங்கினார்கள்.   ரஞ்சிதத்தின் பிறந்தநாளுக்கு மகன் ஒரு சேலை வாங்கி வந்து அசத்தினால் மருமகன் ஒரு படி மேலே போய் மோதிரம் வாங்கிக் கொடுத்து அசத்தினான். அன்னைக்கு பிடிக்கும் என்று இவன் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்தால் அவர் மருமகனோ அதை ஊட்டி விட்டான்.      ” என்னடி இது கூத்து? உம் புருஷன் இப்படி மாறிட்டான்! சதா அம்மா! அம்மான்னு அம்மா பின்னாடியே சுத்திகிட்டு திரியறான்! அது கூட பரவாயில்லை! உன் நாத்தனார் புருஷன் அவன் வீட்டை விட்டு வந்து இங்கேயே தவம் கிடக்கிறான்! உன் மாமியாருக்கு ஓண்ணுன்னா ஓவரா பதறுறான்! என்னடி நடக்குது இங்கே!”  பங்கஜம் தன் மகளிடம் கேட்டாள்.    ”என் புருஷன் அவங்க அம்மாகிட்டே பாசமா இருந்தா என்ன தப்பு! நான் கூடத்தான் என் மாமியார் மேல பாசமா இருக்கேன்! அவங்களுக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கிறேன்! ”   மாமியார் ஆயிரம் குத்தம் சொல்

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! இருள்! பெரிதாக்கி காட்டுகிறது! தொலைதூர வெளிச்சம்! பசி ஆறியதும் அணைந்து போகிறது! பற்றிய நெருப்பு! கிழித்து எறியப்படுகிறது! வாழ்ந்து முடித்த நாட்கள்! நாட்காட்டி! அடக்கி பழகுகிறார்கள் பெண்கள் கழிவறைஇல்லா பள்ளி! விடிய விடிய கச்சேரி! ரசிப்பதற்கு ஆளில்லை! வயல் தவளைகள்! வீழ்ந்ததும் உயிர்த்தெழுந்தது பூமி! மழைத்துளி! இராப்பொழுதில் இடைவிடாத கச்சேரி! கைதட்டல் வாங்கியது! கொசு! வீடு நிறைய வாசனை! பரப்பிக்கொண்டிருக்கிறது! கனிந்த பழம்! ஈரக்கூந்தல்! உதறின மரங்கள்! மழை! அழுக்கு சுமத்தியதும் அழிந்து போனது நதிகள் இருண்ட பொழுது! அழகாக்கின! நட்சத்திரங்கள்! மூடிய அறைக்குள் கும்மாளமிட்டன  கனவுகள்! மொய்த்த கூட்டம்! விரட்டி அடித்தான் பழக்கடைக்காரன் ஈக்கள்! தாழ்ந்தே இருக்கிறது அன்னையின் மனசு! குழந்தைக்கு துலாபாரம்!  அழுதுகொண்டே உறங்கிப்போனது! குழந்தையின் பசி! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! தளிரின் விருந்தினர் பக்கத்தில் உங்கள் படைப்புக்கள் இடம்பெற உங்களைப்பற்றிய ஓர் சிறு சுயவிவரத்

தினமணி கவிதை மணியில் வெளியான கவிதைகள்!

தினமணி கவிதைமணி இணையதள பக்கத்தில் சென்ற வாரமும் இந்த வாரமும் வெளியான எனது இரண்டு கவிதைகள். படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே! நன்றி! தனிமையோடு பேசுங்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  12th February 2018 04:32 PM   |    அ+ அ  அ-     |   யாருமற்ற ஒர்ப் பொழுதின் தனிமைதனில் தனித்திருக்கையில் மெல்ல காதருகில் கேட்கும் குரல்! ஆம்! தனிமை பேசுகின்றது! நலம் விசாரிப்புக்குப் பின் தனிமையிடம் கேட்டேன்! சுகம் தானே? சுகத்திற்கென்ன குறைச்சல்! பின் ஏன் இந்த அலுப்பு? தனித்திருக்க விடமாட்டேன்கிறாயே? மோனம்தான் என் தவம்! மோனத்தை கலைத்து என் தவத்தை தின்று தீர்க்கிறாய்? ஒரு நொடியும் உன்னை பிரிவதில்லை கைபேசி! கணிணிமுன் காலம் கடத்துகின்றாய்? பெண்டாட்டி பிள்ளைகளை பிரிந்தாலும் உன் காதுகளைவிட்டு பிரியவில்லை செவிவாங்கிகள்! புத்தகங்களை தொலைத்துவிட்டாய்! நட்புக்களை பிரிந்துவிட்டாய்! தனிமைதனை உதறிவிட்டாய்! பின் எப்படி நான் சுகமாயிருக்க முடியும்! இன்று போல் என்றாவது ஒருநாளாவது என்னோடு பேசு! என் இதயத்தை திற! உன்னோடு பேச ஆயிரம் கதைகள் உண்டு என்னி

தினமணி-கவிதைமணி- வஞ்சம் செய்வாரோடு!

வஞ்சம் செய்வாரோடு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   03rd February 2018 01:20 PM   |     அ+ அ  அ-     |   எண்ணத்தில் நஞ்சை வைத்தே என்றும் இனிக்க இனிக்க பேசி உள்ளகத்தே ஒன்றும் வெளியகத்தே ஒன்றும் கள்ளம் வைத்து வஞ்சம் செய்வாரோடு எட்டத்தே நிற்றல் இனிமை பயக்கும்! கிட்டத்தே எட்டிடும் உயரமும் கிட்டாமல் செய்திடும் வஞ்சம்! பள்ளத்தில் தேங்கிடும் தண்ணீர் போல உள்ளத்தே தேங்கிடும் வஞ்சம்! பள்ள நீர் பாசி பிடித்து மாசாகும்! உள்ள வஞ்சம் வளர்ந்து மோசமாகும்! வஞ்சனைகள் செய்வாரோடு பழகப்பழக வெஞ்சினங்கள் வந்து சேரும்! பஞ்சணையில் படுத்தாலும் துயில் பிடிக்காது பசித்து சாப்பிடவே மனமிருக்காது! பஞ்சத்தில் அடிபட்டாலும் பிழைத்திடலாம் வஞ்சத்தில் அடிபட்டால் வழியிருக்காது! நஞ்சினினும் கொடிது வஞ்சம்! நெஞ்சினில் அடையும் தஞ்சம்! நஞ்சுக்கு உண்டு முறிவு ! வஞ்சனைக்கு இல்லை உய்வு! வஞ்சனைக்கு கொடுக்க வேண்டாம் இடம்! வஞ்சம் செய்வாரோடு பழகாதிருத்தல் திடம்! தங்கள் வருகைக்கு நன்றி! கவிதை குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

தினமணி கவிதை மணி! நல்லதோர் வீணை

தினமணி கவிதை மணியில் ஜனவரி 29ம் தேதி பிரசுரமான எனது கவிதை! நல்லதோர் வீணை:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  29th January 2018 03:23 PM   |    அ+ அ  அ-     |   பிறக்கையில் எவ்வுயிரும் நல்லுயிரே! பிறர் கையில் சிக்கி வளர்க்கையில்தான் பிழை வடிக்கையில் எவ்வீணையும் நல்லதோர் வீணைதான்! அதை மீட்டுகையில் எழுவதுதான் சுபஸ்வரமோ அபஸ்வரமோ! உதிக்கையில் கதிரவன் அழகே தான் உச்சிக்கு வருகையிலே அவன் தணலேதான்! மேகம் பொழியும் நீருக்கு சுவையில்லை! பிடிக்கும் பாத்திரமான பூமி கொடுக்கும் சுவையோ பல்வகை! வீசும் காற்றுக்கும் வெளியில் எந்த மணமில்லை! வாசம் கடத்தி வலுவில் பழியை சுமக்கிறது! பூமியில் பிறக்கும் எவ்வுயிரும் நல்லுயிர்தான் பொய்யும் புரட்டும் களவும் திருட்டும் ஜனிக்கையில் உதிப்பதில்லை! சூழலும் சமூகமும் சூழ்ச்சியும் காழ்ப்பும் கடவுளைக்கூட சாத்தானாக்கும்! இனிய இசைதனை வார்க்கும் எல்லா வீணையும் என்றும் நல்லதோர் வீணையே! மீட்டும் மனிதரில் மாற்றம் வருகையில் நாட்டில் நல்லதோர் மாற்றமாய் இசைத்திடும் இனியதை என்றும் நல்லதோர் வீணை!

தினமணி கவிதைமணி! யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  15th January 2018 03:36 PM   |    அ+ அ  அ-     |   கண்களும் ஒரு கணைதான்! வில்லாயுதம் வளைக்காத வீரனையும் கண்ணாயுதம் வளைத்துவிடும்! காதல் யுத்தத்தில் கண்களால் வீசப்படும் கணைகள் இதயத்தை கொள்ளை கொள்ளும்! மவுன யுத்தத்தில் கண்கள் பேசும் வார்த்தைகள்தான் வெற்றியை நிறைவு செய்யும்! ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியா சேதியை அரைநொடியில் கண்ணசைவில் உணர்த்தும்! கண்களின் மொழி அன்பாயிருந்தால் பாசம் வெற்றிகொள்ளும்! கண்களின் மொழி வேசமாயிருந்தால் மோசம் வெற்றிக்கொள்ளும்! கண்களின் மொழி வீரமாயிருந்தால் ”வெற்றி” வெற்றிக்கொள்ளும்! கண்களின் மொழி துயரமாயிருந்தால் சோகம் வெற்றிக்கொள்ளும்! கண்களின் மொழி குறும்பாயிருந்தால் அங்கு கலகலப்பு” தொற்றிக்கொள்ளும்! கண்களின் மொழி கசப்பாயிருந்தால் அங்கே  ”வெறுப்பு” வெற்றிக்கொள்ளும்! கண் வீசும் கணைகள் சாம்ராஜ்யத்தையும் சாய்க்கும்! யுத்தம் செய்யும் கண்கள் பித்தம் பிடிக்க வைக்கும்! நித்தம் நினைவில் நிலைக்கும்! தினமணி கவிதை மணியில்  ஜனவரி 15ம் தேதி வெளியான என் கவிதை. தங்கள்

தளிர் விருந்தினர் பக்கம்! “சண்டே கெஸ்ட்” சீர்காழி.ஆர்.சீதாராமன்

Image
வணக்கம் வாசக நண்பர்களே!  தளிர் வலைதளத்தில் உங்களை எல்லாம் தொடர்ந்து சந்திப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இனி சுணக்கம் விடுபட்டு தொடர்ந்து பதிவுகள் எழுத விரும்புகிறேன். ஏழு ஆண்டுகளை கடந்துவிட்ட தளிரில் கொஞ்சம் மாற்றங்களையும் புகுத்த விரும்புகிறேன். அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில்  விருந்தினர் பக்கமாக தளிரை மிளிர விட உள்ளேன்.    ஒவ்வொரு ஞாயிறன்றும் விருந்தினர் ஒருவரின் எழுத்துக்கள் தளிரில் இடம்பிடிக்கும்.அத்துடன் உங்கள் மனதினிலும் இடம்பிடிக்கும்.   விருந்தினர்கள் என் சக வலைப்பூ எழுத்தாளர்கள், மட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கைகளில் எழுதும் சிலரும் இந்த பக்கங்களில் இடம் பெற உள்ளார்கள். நீங்களும் இந்தப்பகுதியில் உங்கள் படைப்புக்கள், கதை, கவிதை,ஜோக், கட்டுரை எதை வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் படைப்புக்களை  thalir.ssb@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது 7904596966 என்ற வாட்சப் எண்ணிற்கோ அனுப்பி வையுங்கள்.  உங்கள் பதிவுகள் சிறப்பாக இருப்பின் தொடர்ந்து தளிரில் பதிவிடப்படும். இன்றைய ஞாயிறு விருந்தினர் சீர்காழி ஆர் .சீதாராமன்.     படிப்பு எம். இ. தெர்மல் . பெரும்பாலான

பேயை விரட்டிய பெண்மணி! பாப்பா மலர்!

Image
பேயை விரட்டிய பெண்மணி!  பாப்பா மலர்! முன்னொரு காலத்தில் தட்சிணாபுரம் என்ற ஊரில் ஒரு பெண்மணி வசிச்சு வந்தாங்க. அந்தம்மாவோட புருஷனுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் செய்ய அவங்களுக்கு வசதி இல்லை. அந்த ஊர் குளக்கரையிலே ஓர் அரச மரம். அதன் அடியிலே ஒரு பிள்ளையார். தினமும் அந்த அம்மா குளத்துல குளிச்சிட்டு அந்த பிள்ளையாருக்கு நீர் எடுத்துவந்து அபிஷேகம் செஞ்சு ரெண்டு பூக்களை பறிச்சு போட்டு தன் புருஷனோட வியாதி குணமாகனும்னு கண்ணீர் மல்க வேண்டிப்பாங்க.    ஒரு நாள் அந்த பெண்மணி அதிகாலையிலேயே குளக்கரைக்கு போயிட்டாங்க. அப்ப அந்த அரச மரத்துல இருந்த பேய் ஒண்ணு அவங்க கண்ணுக்குத் தென்படவும்  பயந்து போய் அலறினாங்க. அந்த பேய் தினமும் இவங்களை பார்த்து இவங்க நிலைமையை அறிஞ்சு வைச்சிருந்தது. அதனால, “அம்மா! என்னை பார்த்து பயப்படாதே! அரை குறையா செத்துப் போனதால இப்படி பேயா இருக்கேன்! இந்த அரச மரத்தைவிட்டு வேற இடம் போகணும்! ஆனா வேற இடம் எங்கிருக்குன்னு தெரியலை! இந்த மரத்துகிட்ட வந்து ஒருத்தன் நாயனம் வாசிக்கிறேன்னு அபஸ்வரமா வாசிச்சு என்னை கோபமடைய வைக்கிறான். அதை கேட்க சகிக்கலை! வேற நல்ல இடம் இருந்தா சொல