இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!


இன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!


எங்கும் எதிலும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 25th February 2018 05:37 PM  |   அ+அ அ-   |  
எங்கும் எதிலும் வியாபிக்கும் காற்று
உலகை இயக்குகிறது!
எங்கும் எதிலும் ஊற்றெடுக்கும் பாசம்
அன்பை வளர்க்கிறது!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் உயிர்
வாழ்க்கையை வளர்க்கிறது!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ஊழல்
நாட்டை நாசம் செய்கிறது!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் இனவெறி
நாட்டை துண்டாடுகின்றது!
எங்கும் எதிலும் பிறப்பெடுக்கும் மதவெறி
மதங்களை கொன்றுகுவிக்கிறது!
எங்கும் எதிலும் துளிர்த்திருக்கும் மனிதம்
இப்பூமியினை உயிர்ப்பிக்கிறது!
எங்கும் எதிலும்  கசிந்திருக்கும் ஈரம்
அகிலத்தின் தாகம் தீர்க்கிறது!
எங்கும் எதிலும் காணும் பசுமை
தேசத்தை வளர்ச்சியடைய வைக்கிறது!
எங்கும் எதிலும் நான் எனும் அகந்தை
பொங்குகையில் நாம் அழிந்துபோகிறது!
எங்கும் எதிலும் ”நான்” அழிந்து ”நாம்” என்று
ஓங்குகையில் உயர்வு தானாய் உருவெடுக்கிறது!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே! நன்றி!


Comments

  1. அருமை நண்பரே மிகவும் இரசித்தேன் வாழ்த்துகள் மேலும் கவிமழை பொழிந்திட...

    ReplyDelete
  2. அருமையான வரிகள் எங்கும் எதிலும்
    கவிச்சாரல் வீசட்டும் நண்பரே..!

    ReplyDelete
  3. காற்று <> பாசம் ; உயிர் <> ஊழல் ; இனவெறி<> மதவெறி ; மனிதம் <> ஈரம் ; பசுமை <> அகந்தை ; நான் <> நாம் இவற்றை ஒப்பிட்ட விதம் பாராட்டுக்குரியது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2