ஆன்றோர் பொன்மொழிகள்!

ஆன்றோர் பொன்மொழிகள்! மொழி மண்ணுலகின் புதல்வி, செயல் விண்ணுலகின் புதல்வி. ஜான்சன் தாய்மொழியை செம்மையாக பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிற மொழியில் புலமை வராது. பெர்னாட்ஷா. ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை. நேரு. வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மையான வீரன். அன்னிபெசண்ட் அரசாங்கம் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை! சாம்பேன். இலட்சியம் இல்லாத மனிதன் திசைகாட்டும் கருவி இல்லாத கப்பலைப் போன்றவன். ஆவ்பரி. கண்ணியமான மனிதனே இல்லையென்று எவன் சொல்லுகிறானோ அவன் அயோக்கியன். பெர்க்கிலி கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும். லவேட்டோ. சட்டம் மரணத்தை போலிருக்க வேண்டும் மரணம் எவரையும் விடுவதில்லை!