ஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பா மலர்!
ஏமாற்றாதே! ஏமாறாதே!
செல்வன் ஒருவன் தன் பணப்பையை எங்கோ
தொலைத்துவிட்டான். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன.
என் பணப்பையைக் காணவில்லை! அதை கண்டுபிடித்து தருபவருக்கு பத்து
பொற்காசுகள் தரப்படும் என்று ஊரெங்கும் தெரியப்படுத்தினான்.
அந்த பணப்பையை ஏழைச் சிறுவன்
ஒருவன் கண்டெடுத்தான். நேர்மையாளனாகிய அவன் அந்த பையை செல்வனிடம் கொண்டுவந்து
கொடுத்தான். தன் பணப்பையை பார்த்தவுடன் செல்வனுக்கு மகிழ்ச்சி. இந்த சிறுவனுக்கு
ஏன் வீணாக பத்துப் பணம் தர வேண்டும் என்று மனதிற்குள் கணக்குப் போட்டான்.
சிறுவனைப் பார்த்து, சிறுவனே இந்த பையில் நூற்றிருபது பொற்காசுகள் வைத்திருந்தேன்.
இருபது காசுகள் குறைவாக உள்ளது மரியாதையாக கொடுத்துவிட்டால் உன்னை விட்டு விடுகிறேன் என்று மிரட்டினான்.
சிறுவனோ அஞ்சவில்லை!ஐயா இந்த பையில் இருந்து ஒரு பைசா கூட நான்
எடுக்கவில்லை! எனக்குத் தரவேண்டிய பத்து காசுகளை தந்து விட்டால் நான் சென்று
விடுகிறேன் என்றான்.பணக்காரனோ என்னுடைய காசுகளை திருடியது மட்டுமில்லாமல் கூலி
வேறு கேட்கிறாயா? வா நீதிமன்றத்திற்கு என்று அழைத்து சென்றான்.
நீதிபதிமுன் வழக்கு வந்தது. பணப்பையை வாங்கி பார்த்தார் நீதிபதி. அந்த பையினுள்
நூறு பொற்காசுகள் மட்டுமே வைக்கமுடியும் என்று அறிந்தார்.பணக்காரனின் ஏமாற்று
புத்தியை அறிந்து தக்க பாடம் புகட்ட நினைத்தார் நீதிபதி.
பணக்காரனைப்பார்த்து. உம் பையில் நூற்றிருபது பொற்காசுகள் இருந்தது
உண்மைதானே என்றார். செல்வனும் ஆம் நீதிபதி அவர்களே பையினுள் நூற்றிருபது பொற்காசுகள் இருந்தன.
இவன் தான் திருடிக் கொண்டு தர மறுக்கிறான் என்றான்.
நீதிபதி, புன்னகையுடன் கூறினார். செல்வனே இந்த பையினுள் நீ சொன்னது மாதிரி
நூற்றிருபது பொற்காசுகள் வைக்க முடியாது. நூறு பொற்காசுகள் வைக்கும் அளவுதான் பை
தைக்கப்பட்டுள்ளது. எனவே நீ தொலைத்த பை இதுவல்ல! வேறு யாரோ தவற விட்ட பைதான் இது.
ஆனால் இதுவரை யாரும் பையை தவற விட்டதாக இங்கு வரவில்லை!
எனவே இந்த பை உன்னுடையது அல்ல. இதைக்
கண்டெடுத்த இந்த சிறுவனே இதன் உரிமையாளன். இந்த பொற்காசுகள் அவனுக்கே சொந்தம். உன்
பணப்பையை யாராவது கண்டெடுத்து கொடுத்தால் உன்னிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
சபையோர் நல்ல தீர்ப்பு என்று புகழ ஏமாற்ற
நினைத்து தனது பணத்தை இழந்தேனே என்று வருத்தமுடன் அங்கிருந்து சென்றான் பணக்காரன்.
சிறுவனோ நீதிபதியை வணங்கி மகிழ்வுடன் வீட்டிற்கு சென்றான்.
ஏமாற்றாதே! ஏமாறாதே!
பேராசிரியர் சோதியின் 150 நன்னெறிக்
கதைகளில் இருந்து தழுவல்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல கதையை பகிர்ந்திருக்கிரீர்கள்.
ReplyDeleteஅருமையான கதை!
ReplyDeleteநல்ல கதை.. இது போன்ற நீதிக் கதைகளே படித்தே பல காலம் ஆகி விட்டது சார்
ReplyDeleteநல்ல கதையை பகிர்த்து இருகிறிர்கள்...மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
மிக அருமையான கதை.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல கதை...
ReplyDeleteமிக்க நன்றி...
அருமையான பழமொழிகளைத் தொகுத்துக்
ReplyDeleteகொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
நாங்களும் இங்கு கடுமையான மின் தடையால்
அவதியுறுவதால் மிகச் சரியாக பதிவிடவோ
பின்னூட்டமிடவோ பின்னூட்டமிட்டவர்களுக்கு
நன்றி தெரிவிக்கவோ இயலவில்லை
வருத்தமாகத்தான் உள்ளது