காசியும் ராமேஸ்வரமும்!
காசியும்
ராமேஸ்வரமும்!
சமீபத்தில்
என் பெற்றோர் காசி ராமேஸ்வரம் புனித யாத்திரை சென்று வந்தார்கள்! அவர்கள் சொன்ன
யாத்திரை அனுபவங்களை விரைவில் எழுத இருக்கிறேன்! அதன் முன்னோட்டமாக காசி
ராமேஸ்வரம் பற்றிய சில தகவல்கள்! இங்கே!
காசியாத்திரை
செல்லும் முன் ராமேஸ்வரம் சென்று பிதுர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து
சேதுக்கரையிலிருந்து மணல் எடுத்துச் சென்று கங்கையில் சேர்க்கவேண்டும். பின்னர்
அங்கிருந்து கங்கை ஜலம் எடுத்து வந்து இராமேஸ்வரம் இராமநாத சுவாமிக்கு அபிஷேகம்
செய்து வழிபட வேண்டும். அப்போதுதான் யாத்திரை நிறைவடையும்.
வடநாட்டினர்
காசியில் இருந்தகங்கா ஜலம் எடுத்து வந்து
இங்கே ராமேஸ்வரத்தில் அபிஷேகம்
செய்துவிட்டு இங்கிருந்து மணல் எடுத்துச் சென்று அங்கு கங்கையில் கரைப்பர்.
காசி விசுவ நாதரும் சேது மாதவரும் பன்னிரண்டு
ஜோதிர் லிங்கங்களை சேர்ந்தவர்கள்.
காசி நகரை வளர்த்தவர்கள் மிகப்பழமையான காசி
வம்சத்து மன்னர்கள்! இராமேஸ்வரத்தை வளர்த்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.
காசி
நகரம் இருப்பது கங்கைக்கரையில்! இராமேஸ்வரம் இரு கடல்களுக்கு இடையேயான ஒரு தீவு.
காசி விசுவநாதருக்கு யாரும் தொட்டு அபிஷேகம்
செய்யலாம். இராம நாதருக்கு ஆகம முறைப்படி வழிபாடு ஆனதால் அர்ச்சகர் மட்டுமே பூஜை
செய்ய முடியும்.
காசியில்
கிளரொளி வீசுவது பாண லிங்கம்!
இராமேஸ்வரத்தில்
விளங்குவது மணலால் இயன்ற லிங்கம்.
காசியில் இறந்தால் முக்தி. இராமேஸ்வரத்தை
பார்த்தாலே முக்தி.
காசியில்
இறப்பவருக்கு காதில் சிவபெருமான் இராம தாரக மந்திரம் ஓதுகிறார். சேதுக்கரையில்
இராமன் சிவனை வழிபட்டு இராமநாதனை நமக்கு தருகிறார்.
சிவனை பழிப்பவன் இராம பக்தனல்லன். இராமனை
தூற்றுபவன் சிவனடியான் அல்லன்.
இராமேஸ்வர
என்னும் வடமொழி சொல்லுக்கு பொருள்
இராமனுக்கு ஈசனான சிவன்.
இராமன்
இறைவனாக கொண்ட சிவன்.
இராமனாகிய
சிவன் என்ற பொருள்கள் உண்டு.
இந்தியாவில்
உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று இராமேஸ்வரம்.
காசியில்
மூன்று நதிகள் கங்கை யமுனை சரஸ்வதி சங்கமிக்கின்றன.
இராமேஸ்வரத்தில்
வங்காள விரிகுடாவும் இந்துமா கடலும் சங்கமிக்கின்றன. இந்த இரு நதிகளும் சேருமிடம்
தனுஷ்கோடி சேதுக்கரை.
இராமேஸ்வரம்
கோயில் 22 விசேஷ தீர்த்தங்கள் உள்ளன.
இந்த புனித தலங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது பாவம் போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே! நன்றி!
பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteயாத்திரை அனுபவங்களை வாசிக்க காத்திருக்கிறேன் தலைவா! :)
ReplyDeleteஇந்திய மக்களை இணைக்கும் உணர்வு..ஆன்மீகப் பாலம்..கங்காசேது சிவாலயங்கள்!
ReplyDeleteநன்று..வாழ்த்துக்கள்!
காசி ராமேசுவரம், மற்றும் அதனுடைய சிறப்புகளைப் பற்றி அறிந்துகொண்டேன். நன்றி..!
ReplyDeleteஎளிமையாக அருமையாக
ReplyDeleteவிளக்கியுள்ளீர்கள்
அறியாத பல் தக்வல்களை தங்கள்
பதிவின்மூலம் அறிந்து கொண்டேன்
மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Superb post! Thank You!
ReplyDeleteEXCEPTING FULL DETAILS JI...
ReplyDeleteபக்திமயமான பதிவும்.படங்கள் அழகு !
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
ReplyDeleteகருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!
ReplyDelete