ஆன்றோர் பொன்மொழிகள்!
ஆன்றோர் பொன்மொழிகள்!
மொழி மண்ணுலகின்
புதல்வி, செயல் விண்ணுலகின் புதல்வி.
ஜான்சன்
தாய்மொழியை செம்மையாக
பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிற மொழியில் புலமை வராது.
பெர்னாட்ஷா.
ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை.
நேரு.
வலிமை, துணிவு, உண்மை,
தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மையான வீரன்.
அன்னிபெசண்ட்
அரசாங்கம்
இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை!
சாம்பேன்.
இலட்சியம் இல்லாத
மனிதன் திசைகாட்டும் கருவி இல்லாத கப்பலைப் போன்றவன்.
ஆவ்பரி.
கண்ணியமான மனிதனே
இல்லையென்று எவன் சொல்லுகிறானோ அவன்
அயோக்கியன்.
பெர்க்கிலி
கடவுளுக்கு
அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.
லவேட்டோ.
சட்டம் மரணத்தை
போலிருக்க வேண்டும் மரணம் எவரையும் விடுவதில்லை!
மாண்டெஸ்கியு.
இல்லத்தில் குழந்தை
இன்பத்தின் ஊற்றுவாய்.
மார்ட்டின்.
தீய மனிதர்கள்
பயத்திற்கு கீழ் படிகின்றனர். நல்ல மனிதர்கள் அன்புக்கு கீழ் படிகின்றனர்.
அரிஸ்டாடில்
ஆழ்ந்த சிந்தனைக்கு
அதிக பலன் உண்டு.
ஆல்பர்ட்.
குழந்தை பருவம்
பகுத்தறிவின் உறக்க நிலை.
ரூஸோ.
மக்கள் மாக்களாவதும்,
மக்களாவதும் பெற்றோரை பொறுத்த விசயம்.
லாமனே.
ரொம்ப நாள் கழித்து வந்துதது போல் தெரிகிறதே நண்பா.. அருமையான பதிவுடன் தான் வந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete>>>அரசாங்கம் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை!<<<<
:) :) :)
சில நாட்களாக பதிவு எதுவும் காணவில்லையே என்று நினைத்தேன்.பொன்மொழிகள் நன்று.
ReplyDeleteஅதுதானே
ReplyDeleteபார்த்தேன் வலைப்பூக்களை உங்கள் கருத்து அலங்கரிக்கவில்லையே என்று சிந்தித்தேன் காரணத்தைச் சொல்லிவிட்டீர்கள்
ஆன்றோர் அர்த்தமுள்ளதுதான் சொல்லியிருக்கிறார்கள்...
தளிர் அண்ணன் தொகுத்த பொன் மொழிகள் நிச்சயம் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொன் மொழிகள் தான்...
ReplyDeleteஉங்கள் பொன்மொழிகளின் தொகுப்பு பிரமாதம்...பகிர்வுக்கு மிக நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல பொன்மொழிகள்... நன்றி...
ReplyDeleteஇங்கும் அதே நிலைமை தான்... 13 to 16 hours தொடர்கிறது...
20௦ நாட்களுக்கு முன்பு : மின்சாரம் - எப்போ வரும், எப்போ போகும் என்று தெரியாது... போக வேண்டிய நேரத்தில் சரியாக போய் விடும்... கடிகாரமே பார்க்க தேவையில்லை...
இப்போது : அது கூட சரியாக இல்லை... நல்ல முன்னேற்றம் இல்லையா...?