சரணடைவோம் சரபரை!



சரணடைவோம் சரபரை!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள், துயரங்கள், வருத்தங்கள், சிரமங்களை போக்கிக் கொள்ள ஒரு ஆறுதலுக்காகவும், துயரங்களை மனம் விட்டு கதறி தீர்க்குமாறு இறைவனை துதித்து வழிபடுகிறோம். அதற்கு பரிகாரங்களாக பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்து வழிபடுகிறோம். இவை நமது துன்பங்களை ஓரேடியாக நீக்கவில்லை என்றாலும் நமக்கு ஒரு வடிகாலாக இருந்து வருகின்றன. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது போல அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். இதனால்தான் சிவபெருமானே கூட பிச்சாடனாராக மாற நேர்ந்தது.
   பிரார்த்தனைகளில் பல்வேறு கடவுள்களை வணங்குகிறோம். சிவபெருமான் எண்ணிலடங்கா வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றுள் 64  திருமேனிகள் சிறப்பாக சொல்லப்படுகின்றன. அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் அவற்றுள் சந்திர சேகரர், ரிஷபாரூடர், நடராசர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், கிராதர், கங்காளர், நீலகண்டர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், காலபைரவர், கங்காதரர், சரபேஸ்வரர், லகுளீஸ்வரர், ஜ்வரஹரேஸ்வரர், முதலானவை வெகு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.
  அவற்றுள் நாம் பார்க்க இருப்பது சரபேஸ்வரர் வடிவமாகும். சரபேஸ்வர வடிவம் பட்சியும் மனித உடலும், மிருகமும் கூடிய ஒரு மகா பயங்கர வடிவமாகும்.
 நன்னாலிரண்டு திருவடியும் நனி நீல் வாலும், முகமிரண்டும்
 கொன்னார் சிறகும், உருத்திரமும், கொடும் பேரார்ப்பும் எதிர்தோற்றிச்
 செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செகுத்துரிக் கொண்டு
 ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான் சரபத் திருவுருவம்.
என்று காஞ்சி புராணம் கூறுகிறது.
  எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளோடு தாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்த அரித்தோல் உடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவர்தாம் தக்காரே!
 என்று திருஞான சம்பந்தர் தேவாரத்திலும்  பாடியுள்ளனர்.
  இந்த இரு பாடல்கள் மூலம் சரப பட்சியும் யாளியும் மானிட உடலும் கூடிய ஒரு அதி வினோத வடிவம் கொண்டு கோடி சூர்ய பிரகாசத்தோடு கொடும் பேரார்ப்புடனும் தோன்றுகிறார் சரபேஸ்வரர்.
  ஏன் தோன்றினார்?
   இரண்யகசிபுவின்  நிந்தனையை ஏற்காத பிரகலாதனை காக்கும் வண்ணம் நரசிம்ம மூர்த்தி தூணில் தோன்றி  ஹிரண்யனை அழித்தருளினார். அதன் பின்னும் அவரது கோபம் அடங்கவில்லை!ஹிரண்யனின் உடலை நகங்களால் கிழித்து ரத்தம் குடித்த அவர் அழிவு சக்தியாக ஆர்பரித்து எழுந்தார். தேவர்கள் பிரம்மா முதலானோர் சிவனை சரணடைந்தனர். சிவன் பூத கனங்களின் தலைவனாம் தன் வடிவேயான அகோர மூர்த்தியை அனுப்பி வைக்கிறார்.
 சிம்மத்தின் ஆவேசம் தனிக்க பட்சி மிருகம் மனிதன் எனக் கலவையாய் வடிவெடுத்து நரசிம்மரின் கோபம் தனித்து சாந்தப் படுத்தியவர் சரபர்.பதினெட்டு நாட்கள் நரசிம்மத்தின் சினத்தினை தணிக்க முயலும் சரபர் முடிவில் நரசிம்மத்தின் பாதங்களை இருபுறமும் பிடித்து இரண்டாக கிழிக்க முயல்கையில் நரசிம்மர் தன்னுணர்வு பெற்று சரபரை18 ஸ்லோகங்களால் துதிக்கிறார். இதுவே சரப அஷ்டோத்திரம்.
  சென்னை கோயம்பேட்டில் குசல புரீஸ்வரர் கோயிலில் நரசிம்மரை மார்புடன் தழுவி இருக்கும் சரபரை தூண்களில் காணலாம்.
  எட்டுக்கால்கள் இரண்டு முகங்கள் நான்கு கைகள் கூர்மையான நகங்கள் இருபுறமும் இறக்கைகள், நீண்ட வால் கருடனை போன்ற மூக்கு காளியைப் போன்ற கோரைப்பற்களும் கொண்ட தோற்றம் கொண்ட சரபருக்கு இரு தேவிகள் ப்ரத்யங்கிரா, சூலினி என்பது அவர்கள் பெயர்.
  சிதம்பரம், திருவண்ணாமலை, ஆவுடையார் கோவில், காரைக்குடி, திருவாய்பாடி, தாராசுரம், திருப்புவனம், திருப்போரூர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்கோயில், வைத்தீஸ்வரன்கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தலங்களில் சரப திருவுருவங்களை காணலாம்.
   சென்னையில் கோயம்பேடு குசலபுரீஸ்வரர் கோவில் 16கால் மண்டபம். திருவான்மியூர் அம்மன் சன்னதி, திருமயிலை, திரிசூலம், பூந்தமல்லி வைத்தீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரிஸ்வரர் கோவில் பாடி (திருவலிதாயம்)மூலவர் கோபுரத்தில் சரபர் திருவுருவங்களை காணலாம்.
  சரபரை சரணடைவோரின் பிறவிப் பிணி நீங்கும், எதிரிகள் விலகுவார்கள், நன்மையே நடக்கும் என்பது நம்பிக்கை! நிலநடுக்கம் இடி,புயல், சூறாவளி, தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தில் தீர்க்கமுடியாத சில மனோவியாதிகள், தரித்திரம் ஆகியவை சரப பக்தனை நெருங்காது. இயற்கை பேரழிவுகளை சரபரை துதிப்பது மூலம் தடுக்கலாம் என்பது நம்பிக்கை.

வழிபாட்டு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிவரையிலான ராகு கால நேரம் சரபருக்கு உகந்தது.
சரப காயத்ரி: ஸாலுவேசாய வித்மஹே
பட்சிராஜாய தீமஹி!
தன்னோ சரப ப்ரச்சோதயாது!

ஸரப கவசம்

ஓம் நமோ பகவதே, ஸரப ஸாலுவ
ஸர்வ பூத உச்சாடனாய
க்ரஹ ரக்ஷாய நிவாரணாய
ஜ்வாலா மாலா, ஸ்வரூபக தக்ஷ
நிஷ்காஸநாய
ஸாக்ஷாத் காள, ருத்ரஸ்வரூப,
அஷ்டமூர்த்தயே,
க்ருஸாநுரேதஸே
மகா க்ரூர பூத உச்சாடனாய
அப்ரதி ஸயநாய ஸத்ரு ம்ஷ்வநாஸய
ஸத்ரு பஸூன் க்ருஹ்ண க்ருஹ்ண ரவாத்
ஓம் ஹூம் பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே
சரபாய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல
ஸாத்யம் ஸாதய ஸாதய
ரக்ஷ ரக்ஷ ஸர்வ பூதேப்யோ
ஹூம் பட் ஸ்வாஹா!

சரபரை சரணடைவோம்! பிறவி பிணி நீங்கி சுகமடைவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மிக அழகாக அனைத்து தகவல்களையும் பகிர்ந்து இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  2. சரபேஸ்வரரைப் பத்தி அழகா சொல்லி இருக்கீங்க சுரேஷ்

    ReplyDelete
  3. எனக்கு இப்படிப்பட்ட விக்ரக ஆராதனைகளில் நாட்டமில்லை.இது என் தனிப்பட்ட கருத்து

    பட்ட உங்க பதிவு மிக மிக அருமை........

    ReplyDelete
  4. மிக மிக அழகான தகவல்..

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. விரிவான விளக்கம்... நன்றி...

    ReplyDelete
  6. சாமி கும்பிட வச்சிட்டீங்க.படங்களைப் பார்த்ததுமே ‘ஆண்டவா’ன்னு சொல்லிட்டேன் !

    ReplyDelete
  7. புதுப்புதுப் தகவல்கள் அருமை தொடருங்கள்.

    ReplyDelete
  8. அழகான தகவல் அண்ணா நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2