சுந்தரப்பாண்டியன்! என் பார்வையில்!சுந்தரப்பாண்டியன்! என் பார்வையில்!

சினிமா விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு சினிமா பற்றிய பெரிய ஞானமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களை பார்ப்பதோடு சரி! தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருடங்கள் ஆகிவிட்டன. சுந்தரப்பாண்டியனை திங்களன்று ரெட்டில்ஸ் பாலா திரையரங்கில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்! அந்த கதையையே தனிப்பதிவாக போடலாம். அது இப்போது வேண்டாம். படத்தை பத்தி ஒரு பதிவு எழுதி பார்ப்போம் என்று எழுதுகிறேன். சினிமா விமர்சகர்கள் மன்னிப்பார்களாக!

   சுந்தரபாண்டியன் மதுரை பக்கத்து இளைஞன்! படித்துவிட்டு வேலைக்கு போகாமல் நண்பர்களோடு(பாட்டிமார்களோடு) சுற்றிவருகிறார். அவ்வப்போது முறைப்பெண்ணை கிண்டல் செய்து வருகிறார். அவர்களும் அதை விரும்புகிறார்களாம். அந்த ரூட் பஸ்ஸில் வரும் பெண்ணை அவர் நண்பர் லுக் விட அவருக்கு உதவப் போகிறார். இதற்கு நடுவில் அப்புகுட்டி வேறு அந்த பெண்ணை லவ்வ ஒருமாதம் டைம் கொடுத்து அவரால் கரெக்ட் பண்ண முடியவில்லை என்றால் ஒதுங்கி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அவர் ஒதுங்க மறுத்து தொடர்கிறார்.
நண்பர் சொதப்ப இவரே நண்பரின் காதலை சொல்கிறார். அந்த பெண்ணோ உன்னைத்தான் பிடிச்சிருக்கு என்கிறது. இப்போதுதான் ஒரு ட்விஸ்ட்! அந்த பெண் பள்ளியில் படிக்கும் காலத்தில் சசிக்குமார் அந்த பெண்ணை விரும்பியிருக்கிறார். இவர்கள் ஒப்பந்தப்படி சீனியரான இவரே அந்த பெண்ணை லவ்வுகிறார். அப்புகுட்டி அந்த சமயத்தில் வந்து தகறாரு பண்ண பஸ்ஸில் சண்டை வந்து தள்ளி விட்டு இறந்து போகிறார்.
   இதற்கு நடுவில் ஹீரோயின் வீட்டில் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அது வேறு யாருமல்ல! ஹீரோவின் நண்பர்தான்! அவரது முறைப்பெண்தான் ஹீரோயின். ஹீரோவின் காதல் அந்த நண்பருக்கும் தெரியும். இருந்தாலும் தீவிரமாக முறைப்பெண்ணை மணக்க முயற்சிக்கிறார். ஹீரோயின் காதல் தெரிந்து கல்லூரியைவிட்டு நிறுத்திவிடுகிறார்கள் பஸ் சம்பவத்தால் ஜெயிலுக்கு சென்று திரும்பும் ஹீரோ வீட்டுக்குத் திரும்புகிறார்.
   ஹீரோயினை சந்தித்து சண்டை போடுகிறார். அந்த பெண் நடந்ததை கூறுகிறது! அப்போது கூட ஹீரோவிற்கு நண்பன் தான் அந்த பெண்ணின் முறைப்பையன் என்று தெரியவில்லை! இறுதியில் பெண் கேட்டு சென்று அவர்களும் கொடுப்பதாக சொல்லிவிட திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.  ஹீரோயினை மணக்க முடியாத வெறுப்பில் இருக்கும் நண்பரும் தான் பார்த்த பெண்ணை தட்டிவிட்டானே என்று நினைக்கும் நண்பரும், அப்புகுட்டியின் நண்பரும் ஹீரோவை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். அதில் வென்றார்களா? ஹீரோ ஹீரோயினை கைப்பிடித்தாரா என்பதே கதை!
   கோர்வையாக எழுதமுடியவில்லை என்று நினைக்கிறேன்!  சரி விசயத்திற்கு வருவோம்! மதுரை சுற்றியுள்ள கிராமங்களை கேமிரா சுற்றி வருகிறது. அருமையான ஒளிப்பதிவு என்று கூறலாம். சசிக்குமார், லஷ்மி மேனன் காதல் பாடலில் மதுரை இயற்கை காட்சிகள் அருமையாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் எனது நினைவில் நிற்கவில்லை! ஆனால் கேட்கும் போது இரண்டுபாடல்கள் சிறிது ரசிக்கவைத்தன.
    ஹீரோயின் தோழியாக வரும் பெண்ணும் இயல்பாக நடித்துள்ளார். அருமையான தேர்வு. ஹீரோவின் முறைப்பெண்ணாக வரும் பெண்ணும் ஹீரோயினின் சித்தியாக வரும் பெண்ணும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்கள். காமெடி என்று தனி டிராக்கோ அதற்கான நடிகர்களோ இல்லை!
    சசிக்குமார் ஆங்காங்கே ரஜினி, டீ. ஆர் மேனரிசங்களை பயன்படுத்தி கை தட்டல் அள்ளிச் செல்கிறார். ஆனால் சில சமயங்களில் அது ஓவர் டோஸாகத் தெரிகிறது.லஷ்மி மேனன் அருமையான தேர்வு. கிராமத்து பெண்ணாக இயல்பாக நடித்துள்ளார். ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது.நன்றாக நடித்துள்ளார். ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களில் காமெடி பண்ணுபவரின் நடிப்பு சூப்பர்.

 க்ளைமேக்ஸ் நாடோடிகளை நினைவுப்படுத்துகிறது. தியேட்டரில் இளைஞர்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். மாற்றியிருக்கலாம். சசிகுமாரின் காதலை ஒப்புக்கொண்டு பெண்கேட்டு செல்லும் அவர் அப்பா, பெண்ணுடைய அப்பாவிடம் நீங்களும் நானும் ஒரே ஜாதிதான்! நீங்க இங்க எப்படியோ அதுபோல எங்க ஊருல நானும் பெரிய இடம்தான் என்று சொல்லும்போது தியேட்டரில் கலாய்க்கிறார்கள் பணமும் ஜாதியும்தான் காதலுக்கு எதிரி என்பது போல உறுத்தினாலும் யதார்த்தம் அதுதான். அதுபோல இறந்த நண்பனின் குடும்பத்திற்கு பண உதவி செய்வதும் நிலம் எழுதி வைப்பதும் நடைமுறையில் இருந்தாலும் கொஞ்சம் நெருடலாக உள்ளது.
  நண்பனுக்கு காதலுக்கு உதவப்போய் தானே காதலிக்க ஆரம்பிப்பது ஒன்றும் புதுசு அல்ல! இப்படி என் நண்பனுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் இதற்காக பழிவாங்கவெல்லாம் செய்வார்கள் என்பதும் கொஞ்சம் ஓவர்தான்!

 சில லாஜிக் மிஸ்டேக்ஸ்: தன்னுடைய காதலி நண்பனுக்கு  நிச்சயம் செய்யப்பட்டுள்ளது தனக்குத் தெரியாது என்கிறார் ஹீரோ! ஹீரோயின் வீட்டில் தனக்கு வேறு பையனுடன் நிச்சயம் செய்துவிட்டார்கள் என்று சொல்லும் போது யார் என்ன ஏது என்று விசாரிக்காமல் இருப்பாரா?
  ஹீரோயினை மணக்க இருப்பவர் ஹீரோவின் நண்பர்! அவர் தனக்கு நிச்சயமானதும் ஹீரோவிடம் சொல்லாமல் இருப்பது ஏன்?
 க்ளைமேக்ஸில் பெரிய கடப்பாறையால் ஹீரோவை அடித்து ஸ்பேனரால் பல்லை உடைத்து கத்தியால் குத்தியும் அவர்  சாதரணமாக எழுந்து சண்டை போடுவது ஆச்சர்யமாக உள்ளது. கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
சசிக்குமார் இந்த பாணியை விரைவில் மாற்றி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் விரைவில் காணாமல் போகலாம். சில காட்சிகள் அடுத்த என்ன நடக்கும் என்பதை உறுதி செய்து விடுகிறது. குறிப்பாக பஸ் சண்டையில் அப்புகுட்டியை தள்ளிவிடுவது சசி இல்லை என்பதை நான் முன்பே ஊகித்து விட்டேன்! அது விமர்சனங்கள் படித்த பாதிப்பாக கூட இருக்கலாம்.  ஹீரோ ஹீரோயின் நண்பர் என்று குழப்பி இருப்பதற்கு மன்னிக்கவும். அவர்களின் பெயர் தெரியவில்லை! கதாபாத்திரபெயர் மனதில் நிலைக்கவில்லை!
மொத்தத்தில் ஒரு தடவை ஜாலியாக பார்க்கலாம்!

ரெட்டில்ஸ் பாலா திரையரங்கில் படம் பார்த்தேன். பரவாயில்லை! பழைய ரெட்டில்ஸ்திரையரங்குகள் போல இல்லாமல் டீசண்டாக இருந்தது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!

Comments

 1. விரிவயான விமர்சனம்.ரசிக்கும்படி எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 2. சரி ஒரு முறை பார்த்து விடுவோமே....

  ReplyDelete
 3. அருமையா எழுதி உள்ளிர்கள் .. தொடரட்டும் ...

  நேற்று இரவுதான் பார்த்தேன் .. படம் நன்றாக உள்ளது

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம் .. தொடருங்கள் ..

  ReplyDelete
 5. நன்றாகத் தான் எழுதி உள்ளீர்கள் சார்... படத்தின் கதையை சொல்வதை விட படம் உங்களுக்குள் ஏற்படுத்திய பதிப்பை எழுதினால் சுவையாக இருக்கும்...

  படத்தின் கதை தவிர்த்து நீங்கள் அலசிய விதம் நன்றாக இருந்தது....

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம்.சினிமா பார்ப்பது போல இருந்தது...
  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 7. சுவையான விமர்சனம்!

  ReplyDelete
 8. சுரேஷ் உங்கள் விளம்பர பித்தை எப்போது நிறுத்தப்போகிறீர்கள் ?
  உங்கள் விளம்பரங்களை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது

  ReplyDelete
 9. why u went radha theater ??
  anything special ji..??

  ReplyDelete
 10. நல்ல விமர்சனம்... நன்றி...

  இந்த வாரம் படம் பார்க்க வேண்டும்...

  ReplyDelete
 11. விமர்சனங்கள் படத்தைப் பார்க்கச் சொல்கிறது.பார்க்கிறேன் !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2