ஓல்டு ஜோக்ஸ் 2
ஓல்டு ஜோக்ஸ் 2
நீங்க கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா
நடத்துங்க.. வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு
மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!
எம்.பூங்கோதை.
டாக்டர்! ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா
பல்லு கூசுது டாக்டர்!
என்னசெய்யலாம் டாக்டர்?
சுடவெச்சு சாப்பிடுங்க!
நாணி.
இங்கபார்! நீ பணக்காரியா
இருக்கலாம்!அதுக்காக நாம லவ் பண்ற இடத்துக்கெல்லாம் கூடவே ஒரு வேலைக்காரியை
கூட்டிகிட்டு வர்றது நல்லா இல்லே!
கடலூர் சார்லி.
எங்க தாத்தா சாமியாரா போயிட்டாருடா!
இந்த வயசில சாமியாரா போயி என்னத்தை பண்ன
போறாருடா!
நிலா.
டாக்டர்! எனக்கு அடிக்கடி முன்கோபம்
வருது!
எவ்வளவு நாளா இப்படி?
எவ்வளவு நாளா இருந்தால் உனக்கென்னடா
முண்டம்?
சந்தியூர் வி.
கோவிந்தன்.
அந்த டாக்டருக்கு நிமிஷத்துக்கு நூறு
‘கால்’ வந்துகிட்டு இருக்கும்!
கால்ராசியான டாக்டருன்னு சொல்லு!
ஷைலு
என்னது e.n.t ஸ்பெஷலிஸ்ட்
கேள்விப்பட்டிருக்கேன். இந்த டாக்டர் e.n.d ஸ்பெஷலிஸ்டா?
ஆமாங்க அவர் கிட்ட போனா முடிவு நிச்சயம்!
வாணியம்பாடி ராஜ்குமார்.
நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன்
டாக்டர் கேட்கலை!
என்னாச்சு?
தான் செய்யப்போற முதல் ஆபரேசன்ங்கிறதாலே
வார்டுக்குள்ளேயே ஹோமம் நடத்தினாரு.புகையில மூச்சடைச்சு பேஷண்ட் காலி!
ஆர்.சிவகுமார்.
ரிஷப வாகனம் பார்த்தியா?
இல்லையே!
ரிஷபவாகனம் பார்க்காதவங்க அடுத்த
ஜென்மத்துல கழுதையா பொறப்பாங்களாம் தெரியுமா?
அப்ப போன ஜென்மத்துல நீ ரிஷப வாகனம்
பார்க்கலீயா?
பாஸ்கி.
உன்னுடைய முதலாளி கடிதங்களை நடந்துகிட்டே
டிக்டேட் செய்வாரா?
ஐயையோ! அவர் அப்படி நடக்க ஆரம்பிச்சால்
அவருடைய மடியில் இருந்து நான் கீழே விழுந்துவிடுவேனே!
கே.பி.ஜவஹர் குமார்.
ராமசாமிங்கிற உன் பேரை ஏன் ரங்கசாமின்னு
மாத்திகிட்டே?
என் பேருல தலைவர் கோபமா இருக்கிறதா
சொன்னாங்களே!
மேல்குந்தை வாசு.
சார் பிளேன்ல முதல் முதலா நாடகம்
நடக்குது!எல்லோரும் சிரிச்சிகிட்டு இருக்காங்க! நீங்க மட்டும் சீரியஸா
இருக்கீங்களே!
விஷயம் தெரிஞ்சா நீங்களும் சிரிப்பை
நிறுத்திடுவீங்க!
என்ன விஷயம்?
ஹீரோ வேஷத்துல நடிச்சிகிட்டு இருக்கறது
நம்ம பைலட்!
நாணி.
நேத்து நான் மூணு போஸ்ட் மார்ட்டம்
பண்ணினேன் டாக்டர்!
சும்மா ரீல் விடாதே! நான் நேத்து ரெண்டு
ஆபரேசன் தான் பண்ணேன்!
வாணியம்பாடி ராஜ்குமார்.
உங்களுக்கு ஒரே ஸன்னா?
நாம எல்லோருக்கும் ஒரே ஸன் தான் காலையில்
வந்து மாலையில மறையும்!
பாஸ்கி
ஏண்டி முனியம்மா! உனக்கு என் புருஷன்
குங்குமம் வாங்கித் தந்தாராமே?
அதெல்லாம் ஆறுமாசத்துக்கு முன்னாடி இப்ப
குங்குமபூ பால் வரைக்கும் வந்தாச்சு!
ஆர்.சிவகுமார்.
சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு
வளர்த்தியே இப்ப எங்கேடி அது காணோம்!
எனக்குத்தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே
அதனால அதை வித்துட்டேன்!
தஞ்சை தாமு.
ஏன் தினமும் லேட்டா வர்றீங்க?
ஒண்ணுமி.ல்.லேடி!
யார் அந்த லேடின்னுதான் கேக்கறேன்!
இளங்கம்பன்.
ஏண்டி வேலைக்காரியை திடீர்னு
நிறுத்திட்டே?
அவ நம்ம பையன்கிட்ட ஒரு மாதிரியா பழகறா?
அடிப்பாவி! அப்பனுக்கே துரோகம் பண்ண
துணிஞ்சுட்டானா உன் பையன்?
க.சு.
டிபன் பாக்ஸில வெச்சிருந்த ஸ்பூன்
எங்கேடா?
அதுக்குள்ளே வச்சிருந்த எல்லாத்தையும்
மிச்சமில்லாம சாப்பிடனும்னு நீதானேம்மா சொன்னே!
எஸ்.சேகர்.
ஐயையோ என்னது உங்க வயத்துல பல்லு
முளைச்சிருக்கு!
பயப்பட ஒன்னுமில்லே! அவசரத்துல
சாப்பிடும்போது பல்செட்டை சேத்து முழுங்கிட்டேன்!
நாணி.
ஏன்யா! நீ எல் போர்டு சரி! எதுக்குயா
ரெண்டு போர்டு வண்டியிலே மாட்டியிருக்கே!
ஒண்ணு எனக்கு! பின்னாலே உட்கார்ந்திருக்காரே
அவருக்கு ஓன்னு! இவர் இப்பத்தான் வண்டியில உக்கார கத்துக்கிறாரு!
நாணி.
நம்ம ஏரியா ஆஸ்பத்திரியிலே குண்டு
வெடிச்சுதாமே எப்படி?
டாக்டர் வழக்கம் போல பேஷண்ட் ஒருத்தரோட கிட்னியை
திருடி பீரோவிலே வெச்சிருக்காரு! அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு அது ‘பெல்ட்பாம்’னு!
பாஸ்கி.
இந்த கேஸ்ல நீங்க வாதியா? பிரதி வாதியா?
பயங்கரவாதி எடு! பத்தாயிரம் ரூபாயை!
கோவி. கோவன்.
நம்ம இன்ஸ்பெக்டருக்கு என்னை சுத்தமா
பிடிக்கலை!
என்ன ஆச்சு!
தப்பிச்சு போன கடத்தல் காரனோட கார் நம்பரை
சொன்னா முன்பக்க நம்பரை ஏன் நோட் பண்ணலைங்கிறாரு!
பாஸ்கி.
கேடி ரவியை கைதுபண்ணி ஒரு நாளாவது
லாக்கப்புல போடனும்னு பாக்கறேன் முடியலை!
ஏன் தப்பிச்சிடறானா?
சேச்சே போனா ஆயிரம் ரெண்டாயிரம்னு
கொடுத்திடறான்!
நிலா.
அவர்தான் ‘மியாவ்’ங்கிற பேர்ல கதை
எழுதறவர்!
ஓ! ‘பூனை’ பெயரா?
ராஜாசிங் ஜெயக்குமார்.
நன்றி! ஆனந்தவிகடன்,
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
அருமையான தொகுப்பு..வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை.
ReplyDeletehaaa haaa
ReplyDeleteமிகவும் அருமையான நகைசுவைகள் ......
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அனைத்தும் சிரிக்க வைத்தது நண்பா!
ReplyDeleteகுறிப்பாக.
//.
உங்களுக்கு ஒரே ஸன்னா?
நாம எல்லோருக்கும் ஒரே ஸன் தான் காலையில் வந்து மாலையில மறையும்!
//
:D
"உங்களுக்கு ஒரே ஸன்னா?" இந்த ஜோக் எஸ்வி சேகர் நாடகங்களில் பிரபலம்.
ReplyDeleteஅனைத்தும் அருமை .. அதை எழுதிய அனைவருக்கும் , பகிர்ந்த உங்களுக்கும் நன்றி
ReplyDelete// டாக்டர்! எனக்கு அடிக்கடி முன்கோபம் வருது!
ReplyDeleteஎவ்வளவு நாளா இப்படி?
எவ்வளவு நாளா இருந்தால் உனக்கென்னடா முண்டம்?//
ரொம்பவே சூப்பர் பாஸ் கலக்கல்
ரசிக்க வைத்த jokes thanks brother
ReplyDelete:)))))))))))))))))))))))))
ReplyDeleteபடித்தேன் சிரித்தேன் அண்ணா
ReplyDeleteரசித்துச் சிரிக்க வைத்தமைக்கு நன்றி சுரேஷ் !
ReplyDelete