பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை!
பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை! டிகிரி முடிச்சுட்டு சுத்து வட்டாராத்துல இருந்த கம்பெனிக்கு எல்லாம் பைலோட அலைஞ்சி வேலை தேடி பார்த்தாச்சு! எங்களுக்கு தேவை கெமிஸ்ட்ரி படிச்ச ஆளுங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் தேவைப்படாதுப்பா! என்று விரட்டாத குறைதான். அப்பத்தான் டியுசன் எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் நானா இல்ல! என் தங்கச்சிங்க கிட்ட அவங்களுக்கு தெரிஞ்சவங்க தங்களோட பசங்களை கொண்டு வந்து விட்டு சொல்லிக்கொடுக்க சொன்னாங்க எல்லாம் ஒரு பத்து பதினைஞ்சு பேரு சேர்ந்துட்டாங்க! வெட்டியா இருக்கமே அப்படியே நாலட்ஜை அப்படின்னு ஒண்ணு நமக்கு இருக்கா?! டெவலப் பண்ணிப்போம்னு உதவி பண்ண போனேன். அஞ்சாவது வரைக்கும் இருந்த டியுசன் நான் போனதும் அப்படியே டெவலப் ஆகி டெந்த் வரைக்கும் வளர்ந்துடுச்சு! என் தங்கச்சிங்க கல்யாணமாகி போயிடவும் நான் அதை அப்படியே கண்டினிய்யூ பண்ணிகிட்டேன். இதுக்கு இடையில எஸ்.டி.டீ பூத்தும் பெட்டிக்கடையும் வச்சு கொஞ்ச நாள் ஓட்டினேன். ஆனா அது எனக்கு செட் ஆகலை போன பதிவுல சொன்னா மாதிரி நாலணா பிரச்சனை ஒண்ணு வந்துது. அதை இப்ப சொல்ல மாட்டேன். பதிவு தேத்தனும் இல்லே! சரி