சூப்பர் தும்பி! பகுதி 2.


சூப்பர் தும்பி! பகுதி 2.


”டிங் டிங்” என பள்ளி மணி அடித்ததும் ஓட்டமாய் ஓடிவந்தனர் மாணவர்கள். தன் பையை முதுகில் மாட்டியவாறு வெளியே வந்த முகிலை வழிமறித்தான் முத்து. “ஏய் முகில் நில்லுடா! இன்னமோ தும்பி பிடிக்க கூடாது! பாவம்னு சொன்னியே இப்ப பாரு! என்று தன் பாக்கெட்டில் கை விட்டான். அவனது கையில் இப்போது ஒரு தீப்பெட்டி இருந்தது.
    தீப்பெட்டியின் நுனியில் சிறு நூல் இருந்தது. அந்த நூலைப்பிடித்தவாறு தீப்பெட்டியை திறந்தான். “ஙொய்” என்று ரீங்காரம் இட்டவாறு ஒரு சிறு வண்டு பறக்கத் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் கட்டியிருந்த கயிறைத்தான் முத்து பிடித்திருந்தான்.
       “டேய்! பாவம்டா! விட்டுரு!”
   “தோடா! ஈசியா சொல்லிட்டாரு! விடச்சொல்லி! இதைப்பிடிக்க நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?”
  “விளையாட எவ்வளோவோ இருக்கு? ஏண்டா இப்படி புழுப்பூச்சி வண்டுகளை தொல்லை பண்றே?”
    “ எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு? உன்னாலே என்ன செய்ய முடியும்? இப்ப தட்டிவிடு! இந்த வண்டை காப்பாத்து பார்க்கலாம்!”
    முகில் முகவாய் கட்டையை தடவிக்கொண்டான். நேற்று தும்பி ஒன்றை காப்பாற்றப்போய் வாங்கிக் கட்டிக்கொண்டது நினைவுக்கு வந்தது. வேண்டாம் வம்பு! இவனிடம் சண்டை போட்டு பயனில்லை. ஆனால் வண்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே என்று யோசித்துக்கொண்டிருக்க,
 என்னடா ஹீரோ! நேத்து வாங்கி கட்டிக்கிட்டது இன்னும் வலிக்குதா? என் வழிக்கு வராதே! இதெல்லாம் என் ஹாபி! இதுக்கு தடை சொல்ல நீ யாரு?” என்று நக்கலாக சிரித்தான் முத்து.
”சிறகேவா! சிக்கிரம் பற!” என்று முணுமுணுத்தான் முகில்!
”என்னடா? மந்திரம் போடறியா?” எனக்கு கூட முட்டை மந்திரம் போடத்தெரியும்! என்னை ஒண்ணும் செய்ய முடியாது! போய்க்கிட்டே இரு!”
  முகில் பேசவே இல்லை! அவன் மனதில் முணுமுணுத்தான்! சிறகேவா! சிக்கிரம் பற! இப்போது அவன் உடலில் ஏதோ மாற்றம் அவனது கை ஓரமாக முதுகில் இரண்டு சிறிய இறக்கைகள் தோன்ற ஒரு எம்பு எம்பினான்.
   இப்போது அவன்  அந்தரத்தில் அப்படியே கைகளை துழாவ பறக்க ஆரம்பித்தான்.
  முத்துவுக்கு அவன் கண்களாலேயே இதை நம்ப முடியவில்லை! என்னடா மேஜிக் இது! பறக்கிறான் என்று அவன் கண்களை நன்றாக கசக்கி மீண்டும் பார்த்தான்.
 முகில் இப்போது முத்துவை நெருங்கி வந்து கொண்டிருக்க முத்து மிரண்டுபோனான்.
அப்போது…!  சாலையில் ஒரு சிறு குழந்தை கை வண்டியோடுவர லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
ஐயோ! என் குழந்தை…. காப்பாத்துங்களேன்…! பெண்ணொருத்தி வேகமாக அரற்றியபடியே ஓடி வர
   ஒரே நொடிதான் முகில் யோசித்தான்! முத்துவை விட்டுவிட்டு சாலைபக்கமாக வேகமாக பறந்தான்.
லாரி வேகமாக நெருங்க குழந்தை வண்டியில் அதை அறியாது செல்ல குறுக்கே பறந்தான்  ஒரு கையால் குழந்தையை தூக்கி  எழும்ப சிறகடித்து சாலையின் மறுபக்கம் பறந்தான்.
 அதற்குள் அவனது இறக்கைகள் மறைய அப்படியே பூமியில் விழுந்தான்.  முகமெங்கும் சிராய்ப்புக்கள்.
    அப்படியே மயங்கிப்போனான்.
அவன் விழித்தபோது தொலைக்காட்சி நிருபர்களும் பத்திரிக்கை நிருபர்களும் சூழ்ந்திருக்க, தம்பி! அதெப்படிப்பா அப்படி பறந்து இந்த குழந்தையை காப்பாத்தியிருக்கே! யாரும் செய்ய முடியாத சாகஸம்! வாழ்த்துக்கள் இந்த சின்ன வயசிலே உன் சாகஸம் பாராட்டத்தக்கது!
      ‘இதை நான் வீடியோ எடுத்திருக்கேன்! உனக்கு விருது கிடைக்க கவர்மெண்டுக்கு அனுப்ப போறோம்! உன்னாலே நம்ம பள்ளிக்கூடத்திற்கே நல்ல பெயர் கிடைச்சிருக்கு!” எச்.எம் சொல்ல
  அவன் தலையை வாஞ்சையாக தடவிக்கொடுத்தபடி உன் உயிரை பணயம் வைச்சு அந்த சின்னக் குழந்தையை காப்பாத்தியிருக்கே! ரொம்ப பெருமையா இருக்கு! ஆனா இந்த மாதிரி செய்யறப்போ உன் அம்மாவையும் ஞாபகத்தில் வச்சுக்கோ! உனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன் என்று அம்மா அழ
    ஒண்ணும் ஆகாதும்மா! பயப்படாதே! நல்லது செய்ய நினைக்கிறவங்களுக்கு நல்லதே நடக்கும்னு நீதானே சொல்லியிருக்கே! நீயே அழுவலாமா? என்றான் முகில்.
       தூரத்தே நின்று கொண்டிருந்த முத்துவை கூப்பிட்டான் முகில்.  மிரண்டவாறு வந்த முத்துவிடம்  “முத்து அந்த வண்டை என்ன செஞ்சே?” “அதை அப்பவே விட்டுட்டேனே?” என்று சொன்ன முத்துவிடம் பொய் சொல்லாதே என்ன செஞ்சே?” என்றான்.
   என்னடா மிரட்டல் பலமா இருக்கு? உனக்கு பறக்கத்தெரியும்னு மிதக்கிறியா? எனக்கு அடிக்கத்தெரியும்   முத்து கிசுகிசுத்த குரலில் சொல்லியபடி பாக்கெட்டைத் தொட்டுக்காட்டினான்.  “பாக்கெட்டுக்குள்ள தீப்பெட்டி இருக்கு! ஆனா அதுக்குள்ள வண்டு இருக்கான்னு பாரு” முகில் சொல்ல முத்து விழித்தான்.
       ”என்னடா சொல்றே?” போயி திறந்து பாரு!”
    
இதற்குள் என்னடா ப்ரெண்ட்ஸ் கிசுகிசுன்னு பேசிக்கறீங்க என்று அம்மா கேட்க, அது ஒண்ணும் இல்லேம்மா அடி பலமா பட்டுச்சான்னு கேக்கறான் என்று சமாளித்தான் முகில். என் ப்ரெண்டோட தோட்டத்துக்கு போய் வரேம்மா! என்று முத்துவை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு  சென்ற முகில். இப்ப எடு திறந்து பாரு! என்றான்
        தீப்பெட்டியைத் திறந்த முத்து அதிர்ந்தான். அதற்குள் வண்டுக்கு பதில் ஒரு சிறு குழாங்கல் இருந்தது.
     எங்கேடா என் வண்டு?
    “அது அப்பவே பறந்து போயிருச்சே?”
   ”எப்படிடா? அதை நான் கயிறு கட்டி என் கையிலே இல்லே வைச்சிருந்தேன்.
நான் பறக்கும் போது நீ வாயை பிளந்து பார்க்கும் போது உன்னையும்தான் சேர்த்து தூக்கிட்டு பறந்தேன் நீ அதிர்ச்சியிலே மயக்கம் ஆயிட்டே!  அப்படியே அந்த நூலை கீழே போட்டுட்டே! நானும் உன்னை கீழே விட்டுட்டு குழந்தையை தூக்கி காப்பாத்திட்டேன்!”
  எப்படிடா? உன்னாலே பறக்க முடியுது!  முத்து இப்போது பயத்தோடு கேட்க?
   இதோ இப்படித்தான் என்று முகில் ரெக்கை விரித்து பறக்க! ஆ…! வேணாம்! நான் உன் பக்கம் கூட தலைவைச்சு படுக்க மாட்டேன்… முத்து ஓடினான்.  முகில் சிரித்தபடி கீழிறங்க அவனது கையில் அந்த தும்பி வந்து அமர்ந்தது.

 வளரும்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!





Comments

  1. அருமை...

    இங்கும் பல பதிவுகள் வளரட்டும்...

    நன்றி...

    ReplyDelete
  2. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!//

    பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தும்பி மேலும் றெக்கை விரித்து பறக்க வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2