கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 100.


கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 100.


1.   பஞ்சாயத்து எலக்‌ஷன்லே நிற்கிறதுக்கு தனக்குத்தான் தகுதி இருக்குன்னு தலைவர் எப்படி சொல்றார்?
இதுக்கு முன்னாடி அவர் “கட்ட பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருந்தாராம்!

2.   ஆறுகளை எல்லாம் இணைக்கணும்னு தலைவர் திடீர்னு போராட்டம் நடத்த ஆரம்பிச்சிட்டாராமே ஏன்?
வெளிமாநில ஆத்துலே இருந்து மணல் கொள்ளையடிக்கிறது கஷ்டமா இருக்காம்!


3.   எல்லா டிரிட்மெண்டும் முடிஞ்சு நார்மல் ஆகியும் இன்னும் என்னை ஏன் டிஸ்சார்ஜ் பண்ண மாட்டேங்கிறீங்க டாக்டர்?
        இந்த பெட்டுக்கு இன்னும் புது பேஷண்ட் கிடைக்கலையே?

4.   அந்த டாக்டர் ஆள்மாறாட்டம் பண்ணி டாக்டர் ஆனவர்னு எப்படி சொல்றே?
பேஷண்ட் மாறினாலும் பிரிஸ்ப்கிர்ஷனை மாத்தமாட்டேன்னு அடம்பிடிக்கிறாரே!


5.   எதிரி உங்களை வென்றே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மன்னா!
  என் இரண்டு கால்களிலும் வலுவிருக்கும் வரை அது நடக்கவே நடக்காது என்று அவனுக்கு தெரியாது அமைச்சரே!

6.   மாப்பிள்ளை ரொம்ப ”டிப் டாப்”பா இருப்பார்! பொண்ணு எப்படி இருக்கும்?
பொண்ணு எப்பவுமே “டிக் டாக்” லே இருக்கும்!

7.   விதி வலியது மன்னா!
என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே…!
இப்போது நாம் முட்டுச்சந்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்!

8.   டீ.வீ சீரியல் எடுக்கிறதுக்கு வீட்டை வாடகை விட்டது தப்பா போயிருச்சு!
  ஏன்?
வாடகையைத் தராம இழுத்தடிச்சிகிட்டே இருக்காங்க!


9.   இன்ஸ்பெக்டரோட பார்வையிலே இருந்து ஒரு தப்பும் தப்ப முடியாது!
  அவ்வளோ ஸ்டிரிக்டா?
ஆமாம்! அப்பத்தானே ஒண்ணுவிடாம மாமூல் வாங்க முடியும்!

10.  ஸ்டேட்டஸ் போதாதுன்னு கல்யாணத்தை நிறுத்திட்டாங்களே! நீயும் நல்ல வசதியான குடும்பம்தானே…?
  நீ வேற பேஸ்புக்லே என் பையன் போடுற ஸ்டேட்டஸ் பத்தலையாம்!

11. மறைமுகத் தேர்தல்னா என்னய்யா?
”ரிசார்ட்” புக் பண்ணி ரிசல்ட் வர வைக்கிறதுதான் தலைவரே…!

12.  உள்ளங்கால் எல்லாம் ஒருவாரமாய் அரிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது வைத்தியரே…!
  வேறொன்றுமில்லை மன்னா! விரைவில் போர் வரப்போகிறது என்று உங்கள் உள்ளுணர்வு எச்சரிக்கிறது!


13.  யாருக்கும் விலை போகமாட்டேன்னு தலைவர் சொல்லிக்கிட்டு இருக்காரே…!
    பதவி கொடுத்தா இனாமாவே ஆதரவு தந்திடுவாராம்!

14.  என்னப்பா சர்வர் தோசையிலே சாவி இருக்குது?
   இது ”கீ” ரோஸ்ட் சார்!

15. விஜய் சேதுபதி கல்கத்தாவில வாழற ஒரு தமிழரா படத்துலே நடிக்கிறார்!
படம் பேரு என்ன?
வங்கத்தமிழன்!

16.  ஒரு காலத்திலே தலைவர் அரசியல்ல  ”ஜாம் ஜாம்”னு கோலொச்சிக்கிட்டு இருந்தார்!
   இப்போ?
”ஜாமின் ஜாமின்”னு கோர்ட்ல கெஞ்சிக்கிட்டிருக்காரு!

17.  ”தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம்”னு சொன்ன தலைவரை எதுக்கு கமிஷனர் வந்து பார்த்தார்?
அவர் “ஜாயிண்ட் கமிஷனராம்!


18.  மன்னர் ஒரு ஜாலிப் பேர்வழியா? எப்படி சொல்கிறாய்?
   போர் என்று வந்துவிட்டால் தப்பிக்க ஆயிரம் குழிகள் இருக்கிறது என்று சொல்கிறாரே!

19.  என்ன அந்த சர்வர் சர்வ் பண்ணும் போது மேலே இடிச்சிகிட்டு போறார்?
   அவர் இடி ஆப்பம் சர்வ் பண்றாராம்!

20.  அந்த பார் நடத்தறவர் ரஜினி ரசிகராம்!
   அதுக்காக  பார் பேரை தர்பார்”னு வைச்சிருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. என்ன அந்த சர்வர் சர்வ் பண்ணும் போது மேலே இடிச்சிகிட்டு போறார்?

       அவர் இடி ஆப்பம் சர்வ் பண்றாராம்!//

    எல்லா ஜோக்சும் நல்லா இருந்தது. ஆனா இடி சர்வர் ஜோக் தான் டாப்.

    ReplyDelete
  2. அனைத்தும் ரசிக்க வைத்தன நண்பரே...

    பகுதி 100 வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2